ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

வள்ளலார் கண்ணாடியில் கண்டது !

வள்ளலார் கண்ணாடியில் கண்டது என்ன ?

வள்ளலார் கண்ணாடி முன் அமர்ந்து தன் உடம்பில் உள்ள உருப்புக்கள் எவ்வாறு இயங்குகின்றன.அவற்றை இயக்குவது யார் ? அதற்கு அருள் ஆற்றல் எங்கிருந்து வருகின்றது  என்பதை தன் உடம்பை *ஸ்கேன்* செய்து பார்க்கிறார்.அதில் அவர்கண்ட காட்சியை  விளக்குவதே.கூர்கொண்ட வேலும் மயிலும் நற்கோழிக் கொடியும்.அருட் கார்கொண்ட வன்மைத் தணிகாசலமும் என்கண்ணுற்றதே !    என்ற பாடலின் விளக்கமாகும்.

திருஅருட்பா உரைநடைப்பகுதியில் *சுப்பிரமணியம்*என்ற தலைப்பில் தான் கண்ட காட்சியை படம் பிடித்து காட்டுவது  போல் தெரிவிக்கின்றார்.

அதில் ஒரு சிறு விளக்கம்.!

சுப்ரமணியம் என்றால் என்ன ?
சுப்ரமணியம் என்பது.நமது புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்சியுள்ள ஒரு மணிபிரகாசம் பொருந்தி இருக்கின்றது. இந்த ஜோதிமணியை ஷண்முகம் என்று பெரியோர்கள் சொல்லுவார்கள்.

இதன்றி.நமது மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி விசுத்தியாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒருநாடி இருக்கின்றது. இதைச் சுப்ரமணியம் என்று சொல்லுவார்கள்.இந்த தேகத்திலுள்ள அறறிவும் ஒருங்கே சேர்ந்த சுத்த விவேக மென்பதையும் ஷண்முகம் என்பார்கள்.

ஆறு ஆதாரங்களிலுள்ள ஆறு பிரகாசத்தையும் ஷண்முகம் என்பார்கள்.ஆயினும்.சர்வ தத்துவங்களினது அந்தத்தில் உன்மனிக்கப்பால் சாந்த நிறைவாயுள்ள ஆறு தலையாகிய சுத்த ஆன்ம அறிவான உள்ளமே சுப்பரமணியம் என்பதாகும்.

ஆறுசோதியாயும்.ஆறு அறிவாயும்.ஆறு தலையுடையதாயும் இருப்பதால் முகம் ஆறு.கால் இரண்டென்பது தோன்றும் அறிவு.தோற்றுவிக்கும் அறிவு என்னும் இரண்டறிவாகிய விஷயயுணர்ச்சியும்.நிர்விஷய உணர்ச்சியுமேயாம்.

கை பன்னிரண்டு என்பது.ஆறு ஆதாரங்களிலுள்ள பிரகாசம் என்பதாகும்.அவற்றிலுள்ள பிரகாசத்தை இரண்டாக பிரிக்கப்பட்டு உடம்பின் வலதுபாகத்திற்கும்.இடதுபாகத்திற்கும் அனுப்புவதால் ஆறும் ஆறும் பன்னிரண்டு கரங்கள் என்று வைத்துள்ளார்கள்.

தசாயுதம் அபயவரதம் என்பவை யாதெனில்.வச்சிரம் என்பது தீக்ஷண்ணிய வுணர்ச்சி.வேல் என்பது சத்தி.அருள்.அறிவு என்பதாகும்.மணி என்பது ஆன்ம விளக்கமாகிய நாதம் என்பதாகும்.த்வஜம் என்பதில் கீர்த்தி என்பதாகும்.ஸரஸியம் என்பது தயவை குறிப்பதாகும். குக்குடம் என்பது மாச்சிரியம் இல்லாத நிறைவு .பராகம் என்பது பாசநீக்கம்.தண்டம் என்பது வைராக்கிய அறிவு.பாணம் என்பது அன்பு.அபயம் என்பது சமாதான உணர்ச்சி.

வரதம் என்பது நிராபாரமாகிய ஆதரவு என்னும் சகிப்பு தன்மை.கடப்பமாலை என்பது சர்வ தத்துவ கண்டனம்.

பல வர்ணமுள்ளதும்.விசித்திர  வடிவமானதும்.மறதி முதலிய குணங்களுக்குக் காரணமானதும்.மாயைக்கு இருப்பிடமாயுள்ளதும் ஆன மூலப்பிரகிருதியே மயில் என்பதாகும்.

மயிலின் மேல் சுவாமி ஏறிக்கொண்டிருத்தல் முதலியவற்றிற்குக் காரணம் என்னவென்றால்.பிண்டாண்டமாகிய இந்த தேகத்திலும் அண்டத்திலும் மூலாஞ்ஞான காரணமாயுள்ள கேவலமாகிய அசுத்தா சுத்த மகா அகங்காரம் என்னும் இராட்சிச அம்சமான சூரத்ததுவம்.கேவலம்.அசுத்த சுத்தமாயை.அகங்காரமான மூவகைத் தத்துவத்தோடு.அஞ்ஞான திசையில்.ஆன்ம அறிவையும்.பிண்ட விளக்கமான தேவர்களையும்.விஷய விளக்கமான இந்திரியங்களையும்.நாடி விளக்கமான யந்திரங்களையும்..பிராண விளக்கமான உயிரையும் விழுங்கித் தன்னரசு செலுத்தும்.அந்தச் சூரத்த்துவத்தை வதைக்கும்போது.மேற்படி தத்துவம் மகாமாயையாகிய மாமரமயாயும்.மாச்சிரியமாகிய கோழியாயும்.விசித்திரமாயை என்னும் மயிலாயும்.மகாமதமாகிய யானை முகமாயும் அதிகுரோதமாகிய சிங்கமுகமாயும் விளங்கும்..

இன்னும் நிறைய விளக்கம் உள்ளது சுப்பரமணி என்ற தலைப்பில் உரைநடைப்பகுதியில் உள்ளன. படித்து தெரிந்து கொள்ளவும்.

கண்ணாடியில் தன் உடம்பையும் உடம்பின் உள் இயங்கும் தத்துவங்களையும். அவற்றை இயக்கும் ஆன்ம அறிவையும்.அருள் அறிவையும் ஆண்டவரையும் தெரிந்துகொண்டு காண்பதே சுப்ரமணி என் கண் உற்றதே என்பதைத் தெரியப்படுத்துகின்றார்...


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு