வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

அற்புதம் அற்புதமே அருள் அற்புதமே !

அற்புதம் அற்புதமே அருள் அற்புதமே !

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உடல். உயிர்.அறிவு.ஆன்மா.
அருள் என ஐந்து ஆற்றல் மிகுந்த சக்திகள் இறைவனால் கொடுக்கப் பட்டுள்ளது.

 பஞ்ச பூதங்களால் கட்டிக்கொண்ட உடம்பை சிவாயநம.நமசிவாய.
என்றும் சிவ பஞ்ஞாசர மந்திரத்தை கடவுள் மந்திரமாக நினைந்து.சமய மதங்கள் போற்றி வந்தார்கள்.

புறத்தில் உள்ள உடம்பு அழிந்துவிடும் என்றும் ஆன்மா மோட்சம் அடைந்து விடும் முக்தி அடைந்துவிடும் என்று நினைந்து.நிரந்தரமாக வாழமுடியாமல் மறைந்து போனார்கள்..

இவ்வுலகத்தில்  அவர்கள் துன்பங்களைத் தாங்கமுடியாமல் மீண்டும் பிறவாமை வேண்டும் என்று கேட்டார்கள்...

இறந்தாலும். மறைந்தாலும்.சமாதி அடைந்தாலும். மீண்டும் பிறப்பு உண்டு என்பதை எந்த ஞானிகளும் அறிந்து கொள்ள அருள் விளக்கம் தோன்ற வில்லை....

வள்ளலார் வந்துதான் இறைவனிடம் என்ன கேட்க வேண்டும் என்பதை பூரண அருளாலே அறிந்து கொண்டார்.

அதைவிட முக்கியமானது. உண்மையான இறைவன் யார் ? என்பதை தேடினார்.அவர்தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்பதை கண்டு கொண்டார்..

அவர் இறவாமையும்  வேண்டும்.மீண்டும் பிறவாமையும் வேண்டும் என்று இறைவனிடம் கேட்டார்..

 அப்படி ஒரு அருள் வாழ்க்கை வாழ்வதற்கு என்ன தகுதி வேண்டும் என்பதை அறிந்து கொண்டார். வள்ளலார்

அதேபோல் அந்த தகுதியை பெற்றார் மரணத்தை வென்றார் அருள் தேகம் பெற்றார்.கடவுள் நிலை அறிந்து அதன் மயமானார்....

தான் மட்டும் அடைந்தால் போதும் என்று என்னாது என்போல் இவ்வுலகம் பெறுதல் வேண்டும் என இறைவனிடம் கேட்டுக் கொண்டார்.

ஆண்டவர் வள்ளலார் எண்ணங்களைப் புரிந்து கொண்டு..நீ வந்த வழியை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்....

தான் வாழ்ந்த அருள் வாழ்க்கையை மக்களுக்குத் தெரிவிப்பதே ஆறாம் திருமுறையாகும்....

ஆறாம் திருமுறை முழுவதும் சாகாக்கலையும்.சாகாக்கல்வியையும்.மரணத்தை வெல்லும் வழியையும் போதிப்பதாகும்...

சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் ஆடாமல்.அசையாமல்.வேறு ஒன்றை நாடாமல் ஆறாம் திருமுறையில் கண்டுள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொள்வதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்...

வள்ளலார் பாடல் !

 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறொன்றை

நாடாதீர் பொய்உலகை நம்பாதீர் - வாடாதீர்

சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்தினிஇங்

கென்மார்க்க மும்ஒன்றா மே.!

மேலும் வள்ளலார் நமக்காக இறைவனிடம் கேட்ட பாடல் !

பாதி இரவில் எழுந்தருளிப் பாவி யேனை எழுப்பிஅருட்

சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்

நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை

ஓதி முடியா தென்போல்இவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.!

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு