சனி, 24 ஆகஸ்ட், 2019

திருடனுக்கும் கருணை காட்டிய வள்ளலார் !

*வள்ளலாரின் பொன்னாசை போனது எப்படி?*

வள்ளலார் ஒரு நாள் இரவு, திருவொற்றியூர் கோயிலில் உள்ள திண்ணையில் தூங்கிக் கொண்டிருந்தார். அவர் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்திருந்ததால் அவர் காதில் மாட்டியிருந்த கடுக்கன் மின்னிக் கொண்டிருந்தது.

அந்த வழியே வந்த ஒரு திருடனுக்கு அது “பளிச்” என்று தெரிந்தது. மெல்ல அவர் அருகில் அமர்ந்து அந்த கடுக்கனைக் கழற்ற ஆரம்பித்தான்.

இதனை வள்ளலார் அறிந்து கொண்டார். சத்தம் போடவோ, எதிர்ப்புக் காட்டவோ அவர் விரும்பவில்லை. அமைதியாக இருந்தார். மேலும் மனதிற்குள் அடுத்த கடுக்கனையும் கொடுக்க வேண்டும் என்று விரும்பினார்.

தூக்கத்தில் புரண்டு படுப்பது போல் பாவனை செய்து, மறுபக்கம் படுத்தார். திருடன் அடுத்த கடுக்கனையும் கழற்றி எடுத்துக் கொண்டான்.

இரு கடுக்கனையும் அவன் கழற்றிக் கொண்டாலும் அவருடைய முகத்தில் தெரிந்த ஒளி வட்டத்தைக் கண்டு அவனுடைய மனம் மாறியது.

அவன் வள்ளலாரை எழுப்பி, “சுவாமி என்னை மன்னித்து விடுங்கள்.என்னுடைய வயிற்றுப் பிழைப்புக்காக வேண்டிதான் இந்தத் திருட்டைச் செய்தேன்.தங்கள் முகத்தைப் பார்த்ததும் என் மனம் மாறிவிட்டது” என்றான்.

வள்ளலார் அவனிடம், “நீ என்னிடம் மன்னிப்பு கேட்பதா? மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவைகளைத் துறந்த இத்துறவிக்கு எதற்கு இந்தப் பொன்னாசை? என்று எனக்கு ஞானம் போதித்தாய். அதனால் இக்கடுக்கன்களை நீயே எடுத்துக் கொள்” என்றார்.

இதைக் கேட்ட அந்தத் திருடன் திருந்தியதுடன் அவருடன் பணியாற்றத் தொடங்கினான்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு