புதன், 17 ஜூலை, 2019

இறைவனுக்கு மொழி கிடையாது !

*இறைவனுக்கு மொழிகிடையாது !*

இறைவனுக்கு மொழி கிடையாது.!

*இறைவனைத் தெரிந்து கொள்ளவும்.மக்களின் தொடர்புக்கும் மொழிகள் உருவானது.தேவைப்பட்டது*

இதில் எந்த மொழி மெய்ப்பொருளைக் காட்டும் சிறந்த மொழி என்பதுதான் கேள்வி....

இதுதான் இன்று நடந்து கொண்டு இருக்கும் மொழிப் போராட்டம்...

உலகில் உள்ள அறிஞர்கள் அருளாளர்கள் ( ஒருசிலரைத்தவிர) யாம் அறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல் இனிதானது எங்கும் காணோம் என்று போற்றுகிறார்கள்..
பாராட்டுகிறார்கள்.

மரணத்தை வென்ற மகான் வள்ளலார்.மெய்பொருளைக் காட்டும் ஒரே மொழி தமிழ் மொழி மட்டுமே என்கிறார்..

தமிழ்மொழியில் பிறப்பித்த இறைவனுக்கு வள்ளலார்  நன்றி சொல்கிறார்..

தமிழ் என்ற மூன்று எழுத்திற்குள்  உலகமே அடங்கி உள்ளது.

தமிழில் உயிர்எழுத்து.மெய்எழுத்து.
உயிர்மெய்எழுத்து .ஆயுத எழுத்து என பிரிக்கப்பட்டுள்ளன..

இவை எழுத்துகளுக்காக சொன்னது அல்ல. !

மனிதன் உயிரைப்பற்றித் தெரிந்து கொள்ள உயிர்எழுத்து எனவும்

மனித உடம்பைப்பற்றித் தெரிந்துகொள்ள மெய்எழுத்து எனவும்

உயிரும் உடம்பும் சேர்ந்த்தை தெரிந்து கொள்ள உயிர்மெய் எழுத்து எனவும்.

இறைவனைத் தெரிந்துகொள்ள ஆயுத எழுத்து எனவும் சொல்லப்பட்டுள்ளது.

அதுவே தன்மை.முன்னிலை.படர்க்கை எனவும் சொல்லப்படுகிறது.

தன்னைப் பற்றித் தெரிந்து கொள்வது தன்மை என்பதாகும்..

தனக்கு முன்னால் கண்களுக்குத் தெரித்தவைகளைப்பற்றி தெரிந்து கொள்வது..முன்னிலை என்பதாகும்.

கண்களுக்குத் தெரியாமல் விரிந்து படர்ந்து கிடக்கும் அனைத்தையும் அறிந்து கொள்வது படர்க்கை என்பதாகும்.

இப்படி எல்லா உண்மைகளையும் அறிந்துகொள்ள.தெரிந்துகொள்ள தோன்றியதுதான் தமிழ்மொழி என்னும் மெய்மொழியாகும்.

எனவே எந்த மொழியையும் குறை சொல்லவில்லை..

எது சிறந்த மொழி..எது செம்மொழி.
எது மெய்மொழி.எது மெய்ப்பொருளான இறைவனை தொடர்கொள்ளும் மொழி என்பதை மக்கள் தெரிந்து கொள்ளவேண்டும்..

எல்லோருமே தமிழ் மொழி கற்று அதன் உண்மைகளை அறிந்து அருளைப்பெற்று இறைநிலையை அடையலாம்.மரணத்தையே வெல்லலாம்.

மரணத்தை வெல்லும் வழியைக் காட்டவந்த இறை அருள்மொழிதான்..*வள்ளலாருக்கு இறைவன் தந்த திருஅருட்பாவை என்னும் அருள் நூலாகும்.*அனைவரும் படித்து பயன் பெறுவோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு