வெள்ளி, 28 ஜூன், 2019

தாயின் உள்ளம்.!

தாயின் உள்ளம் !

அம்மா அப்பா இருவரும் குடும்பத்தின் குலவிளக்குகள்.இரு விளக்கும் இரண்டு கண்கள் போன்றது.

இரண்டு தூண்களும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் முக்கிய பாரமாகும்.

இருவரின் இல்லற இன்பத்தில் உதித்ததுதான் குழந்தைகள்.

அந்த குழந்தைகளை தன் கண்ணின் ஒளிபோல் பாது காப்பது தாயின் உணர்வுகள்.அதற்கு ஈடு எதையும் சுட்டிக்காட்ட முடியாது.

தந்தை எவ்வளவு உழைத்துப் பொருள் ஈட்டினாலும் தந்தைக்கு முன்னுரிமை தராமல் தாய்க்கு மட்டுமே குழந்தைகள் முன்னுரிமை தருகின்றார்கள்.

காரணம்...

குழந்தையை பத்துமாதம் சுமந்து தவமா தவம் கிடந்து தன் உயிருக்கு மேலாக பாதுகாத்து தன் உதிரத்தின் மூலமாக பெற்று எடுப்பவள் தாய் என்பதை யாரும் மறுக்க முடியாது. .

கருவரையிலே வளரும் குழந்தைகளின் ஆன்மாவில் தெரிந்தோ தெரியாமலோ பதிவாகி உள்ளது...

மேலும் குழந்தை பிறந்தது முதல் .தாயின் அரவணைப்பிலே..தாயின் உடம்பிலே சுரக்கும் பாலைக் குடித்து.பெரியவர்களாக வளரும் வரையில் பசிகண்ட போதெல்லாம்.அன்புடன் ஆசையுடன் மனம் கோணாமல் உணவு வழங்குபவள் தாய்தான் என்பதை குழ்ந்தைகளின் மனதிலே பதிவாகி விடுகின்றது..

இதை எல்லாம் நேரில் பார்த்து பார்த்து மகிழ்ச்சி அடைபவர் அப்பாவாகத்தான் இருக்க முடியும்.

மனைவி குழந்தைகளின் மீது காட்டும் அன்பும் உபசரிப்பும் வளர்க்கும் விதமும் கண்களில் கண்டு ஆனந்தம் கொள்வது தந்தையின் குணமாகும்.

ஒவ்வொரு நாளும் குழந்தைகளுக்கு தாய் பாசத்துடன் வழங்கும் உணவு முறைகளை.புசித்து அனுபவித்து  ஆனந்தம் கொள்வது குழந்தைகளின் தாய் பாசத்திற்கு காரணமாகி விடுகின்றது.

 அந்த பதிவுகள்தான் ..அப்பாவை விட...அம்மா மீது குழந்தைகளின் பாசத்திற்கு காரண காரியமாக இருக்கின்றது.

என் குடும்பத்தில் நடந்த உண்மை சம்பவம். !

எனக்கும் என் குழந்தைகளுக்கும் உற்ற துணையாக இருந்து  குடும்பத்தை சுமந்து கொண்டு வந்தவள் என் மனைவிதான்.

எங்களுக்கு இரண்டு மகன் ஒரு மகள்.அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியே நல்ல முறையில் வாழ்ந்து கொண்டு வருகிறார்கள்.

உங்களுக்கு யாருடன் இருந்தால் வசதியாக இருக்குமோ அவர்களுடன் இருங்கள் என்று மூவர்களும் சொன்னார்கள்.

எல்லோரும் நல்லவர்களே!  இருந்தாலும் நாங்கள் சின்ன மகனுடனே இருக்கிறோம் என்று சொல்லி அவனுடனே இருக்கிறோம்.அடிக்கடி எல்லோரும் வருவார்கள் போவார்கள்.நாங்களும் போவோம் வருவோம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு