செவ்வாய், 3 ஜூலை, 2018

என்னைப்போல் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை !

என்னைப்போல் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை !

நோவாது நோன்பெனைப்போல் நோற்றவரும்

எஞ்ஞான்றும்
சாவா வரம்எனைப்போல் சார்ந்தவரும் -

தேவாநின்
பேரருளை என்போலப் பெற்றவரும்

எவ்வுலகில்
யார்உளர்நீ சற்றே அறை.

என்னும் பாடல் வரிகளில் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் இடமே கேள்வி கேட்கிறார்...

என்போல் பேர் அருளை  பெற்றவர்களோ. என்போர் சாகாவரமும் சார்ந்தவர்களோ உலகில் எங்கேயாவது இருக்கிறார்களா என்று வள்ளலார் கேட்கிறார்..

அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரும் பதில் சொல்லுகின்றார்... உன்னைப்போல் ஒருவரும் என்னைத் தொடர்பு கொள்ளவும் இல்லை.மரணம் இல்லாப் பெருவாழ்வு பெறவும் இல்லை என்கிறார்...

வள்ளலார் பாடல் !

நீயேஎன் பிள்ளைஇங்கு நின்பாட்டில் குற்றமொன்றும்ஆயேம்என் றந்தோ அணிந்துகொண்டான் - நாயேன்செய்புண்ணியம்இவ் வானிற் புவியின் மிகப்பெரிதால்எண்ணியஎல் லாம்புரிகின் றேன்.

என்கின்றார்....மேலும் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் சொல்லியது...

நீடுலகில் உற்றவர்கள் நன்குற உரைக்கின்றநின்வார்த்தை யாவும்நமதுநீள்வார்த்தை யாகும்இது உண்மைமக னேசற்றும்நெஞ்சம்அஞ் சேல் உனக்கே

ஆடுறும் அருட்பெருஞ் சோதிஈந் தனம்என்றும்அழியாத நிலையின்நின்றேஅன்பினால் எங்கெங்கும் எண்ணிய படிக்குநீஆடிவாழ் கென்றகுருவே

நாடுநடு நாட்டத்தில் உற்றஅனு பவஞானம்நான்இளங் காலைஅடையநல்கிய பெருங்கருணை அப்பனே அம்மையேநண்பனே துணைவனேஎன்

ஊடுபிரி யாதுற்ற இன்பனே அன்பனேஒருவனே அருவனேஉள்ஊறும்அமு தாகிஓர் ஆறின்முடி மீதிலேஓங்குநட ராஜபதியே.!

என்னும் பாடல் வாயிலாக தெரிவிக்கின்றார்...

வள்ளலாருக்கு சம்மானவர் அருட்பெருஞ் ஜோதி ஆண்டவர் மட்டுமே...வேறு ஒருவரும் இல்லை என்பதை நாம் புரிந்து கொண்டு..வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்தால் மட்டுமே நாம் மேல்நிலைக்கு செல்ல முடியும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு