வெள்ளி, 3 ஆகஸ்ட், 2018

ஆசைப்பட வேண்டும் என்கிறார் வள்ளலார் !

ஆசைப்பட வேண்டும் என்கிறார் வள்ளலார் !

உலகில் உள்ள எல்லாம் ஞானிகளும் ஆசையை அழிக்க வேண்டும்.ஆசையைத் துறக்க வேண்டும் என்றார்கள்..

அறுமின் அறுமின் ஆசையை அறவே அறவே அறுமின்

ஈசனோடுயானும் ஆசையை அறவே அறுமின் என்றார்கள்...

ஆசை இல்லாதவன் மனிதன் அல்ல.ஆசை உள்ளவனே மனிதன்.ஆசை கண்டிப்பாக இருக்கனும்.வேண்டும் என்கிறார்  வள்ளலார்.

பற்றை ஒழிக்கலாம் ஆசையை ஒழிக்கக் கூடாது.ஒழிக்கவும் முடியாது...ஆசை இருந்தால் தான் எதையும் சாதிக்க முடியும்.

ஆனால் அந்த ஆசையை மடை மாற்றம் செய்ய வேண்டும். இறைவனிடம் செலுத்த வேண்டும்.ஆசை இருந்ததால் தான் இறைவனைக் காதலிக்க முடியும். அருளைப் பெற முடியும்.
மரணத்தை வெல்ல முடியும்.

ஆசைப்படுங்கள் இறைவன் மேல் ஆசைப்படுங்கள் எல்லா நலமும்.எல்லா வல்லபமும் கிடைக்கும் என்றும்.

நம்மை ஆனமநேய உரிமையுடன் அழைக்கின்றார் வள்ளலார்...

வள்ளலார் பாடல் !

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்அம்மையு
மாய் அப்பனுமாய் அருளும்அருளாளன்

ஏசறநீத் தெனைஆட்கொண் டெண்ணியவா றளித்தான்எல்லாஞ்செய் வல்லசித்தன் என்னுயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில்அருள் சித்திநடம் புரியத்திருவுளங்கொண் டெழுந்தருளும் திருநாள்இங் கிதுவே

மோசஉரை
எனநினைத்து மயங்காதீர் உலகீர்முக்காலத் தினும்அழியா மூர்த்தம்அடைந் திடவே.!

மேலே கண்ட பாடலை ஊன்றி படியுங்கள்.

ஆசை இருந்தால் மட்டுமே இங்கு வாருங்கள் என அழைக்கின்றார்.

இது மோசமான உரை என நினைத்து மயங்க வேண்டாம் என்கிறார்.

ஆசை உள்ளவர்களுக்கு மட்டுமே இறைவன் தாயாகவும் தந்தையாகவும் இருந்து அருளை வாரி வழங்கும் வள்ளலாக இறைவன் இருக்கின்றான்.
அருளும் அருளாளனாக இருக்கின்றார்.

யார் ? அந்த அருளாளன்.!

அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஒருவரால் மட்டுமே அருளை வாரி வழங்க முடியும்...

நாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடம் ஆசை கொண்டு அன்பு செலுத்த வேண்டும்...அதுதான் காதலாகி கசிந்து உருகும் அருளாகும்.அருளைப்பெற்றவரே மரணத்தை வெல்ல முடியும்..பேரின்ப லாபத்தை அடைய முடியும்.

வள்ளலார் பாடல் !

அன்புடை யவரேஎல் லாம்உடை யவரேஅருட்பெருஞ் சோதிஎன் ஆண்டவரே

என்வன்புடை மனத்தைநன் மனமாக்கி எனதுவசஞ்செய்வித் தருளிய மணிமன்றத் தவரே

இன்புடை யவரேஎன் இறையவ ரேஎன்இருகணுள் மணிகளுள் இசைந்திருந் தவரே

என்புடை எனைத்தூக்கி எடுத்தீர்இங் கிதனைஎண்ணுகின் றேன்அமு துண்ணுகின் றேனே.!

மேலே கண்ட பாடலை பொருள் உணர்ந்து பொருமையாக படிக்கவும்.

என் அளவுகடந்த அன்பை ஏற்று அருளை வழங்கி. எனைத்தூக்கி எட்டாத உயரத்தில் ஏற்றி வைத்து அழகு பார்க்கும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே என் ஆசை நிறைவு பெற்றது என்கின்றார் வள்ளலார்...

எனவே மண்ணாசை.
பெண்ணாசை.பொன்னாசைக் கொள்ளாமல்.
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் மீது அவசியம் ஆசை கொள்ள வேண்டும் அந்த ஆசை தான் உண்மையான ஆசை.நிலையான ஆசை.நிரந்தரமான ஆசையாகும்.அருளைப் பெறும் ஆசையாகும்.

ஆசையை இடம் மாற்றி ஆசைப்படுங்கள்...

வள்ளலார் பாடல்!

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசே

அன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதே

அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவே

அன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

அன்பு அன்பு அன்பு இறைவன் மேல் இடைவிடாத அன்பிற்கு பெயர்தான் ஆசை என்பதாகும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்..

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு