திங்கள், 2 ஜூலை, 2018

விதியா ? மதியா ?

விதியா ? மதியா ?

வள்ளலார் பாடல் !

மதியைக் கெடுத்து மரணம்எனும் வழக்கைப் பெருக்கி இடர்ப்படும்ஓர்

விதியைக் குறித்த சமயநெறி மேவா தென்னைத் தடுத்தருளாம்

பதியைக் கருதிச் சன்மார்க்கப் பயன்பெற் றிடஎன் உட்கலந்தோர்

கதியைக் கொடுத்தாய் நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே.!

மேலே கண்ட பாடலை நன்கு உற்று நோக்கி படிக்கவும்.

சமய மதங்களின் கொள்கைகள் அனைத்தும் .அச்சம்.
பயம்.ஏழ்மை.துன்பம் மரணம் என்பது இயற்கையின் விதி என்றும் இறைவன் கட்டளை என்றும்.அனுபவித்து தான் ஆகவேண்டும் என்று.. பொய்யான கற்பனைக் கதைகளை மக்கள் மனதிலே விதைத்து விட்டார்கள்..

எனவே மக்கள் அவற்றை உண்மை என்று நம்பி எல்லாம் விதியால் வந்த வினை என்றும்.ஏற்றுக் கொண்டு அப்பாவி மக்கள் வாழத்தெரியாமல் வாழ்ந்து .இறுதியில் மரணம் என்பதும் விதிப்பயன் தான் என்று ஏற்றுக் கொண்டு வாழ்ந்து வருகிறார்கள்...

அச்சம் பயம் துன்பம்.ஏழ்மை மரணத்தை வெல்லும் வழி தெரியாமல் .அறிவு விளக்கமும்.அருள் விளக்கமும் அறிந்து தெரிந்து கொள்ளாத சமய மதங்கள் கண்ணை மூடிக்கொண்டு உளறி உள்ளார்கள்.நாமும் கண்ணை மூடிக்கொண்டு.அவற்றை நம்பிக்கொண்டு விதிதான் கதி என்று வாழ்ந்து வருகின்றோம்..

விதி என்ற வார்த்தையை அழித்து ஒழித்து பதியைக் காட்ட வந்தவர்தான்... வந்து உள்ளவர்தான் வள்ளலார்..

சமய மதங்கள் எல்லாம் உண்மையான இறைவனை நேரில் கண்டு. தெரிந்து அறிந்து புரிந்து கொள்ளாமலும்.புழுகிய புளுகு மூட்டைகளை .கண்டு கொள்ளாமல் சமய மத நெறியை மேவாது தடுத்து அருளைப் பெறும் மெய்நெறியாம் சுத்த சன்மார்க்க பொது நெறியான மெய்நெறியில் பற்று வைத்தாய் ...
அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உமக்கு கைமாறு ஏது கொடுப்பேன் என்று.மெய்பொருளான அருட்பெருஞ் ஜோதி ஆண்டவரைப் போற்றி புகழ்கின்றார்...

விதியைச் சொல்லி மக்களை ஏமாற்றும்  பொய் நெறியாம் சமய மதங்களில் மனதைச் செலுத்தாமல்...வள்ளலார் காட்டிய உண்மை நெறியான சமரச சுத்த சன்மார்க்க சத்திய நெறியைப் பின்பற்றி .அறிவைப் பெருக்கி அருளைப் பெற்று.மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்.

சமய மதங்கள் சொல்லியவிதியை அழித்து. மதியைப் பெருக்கி மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ்வோம்....

படைக்கப்பட்ட விதியை மதி என்னும் அறிவால் அழிப்பது தான் சுத்த சன்மார்க்கம் காட்டும் வழியாகும்..

வள்ளலார் பாடல் !

திருநெறிஒன் றேஅதுதான் சமரசசன் மார்க்கச்சிவநெறிஎன் றுணர்ந்துலகீர் சேர்ந்திடுமின் ஈண்டு

வருநெறியில் எனையாட்கொண் டருளமுதம் அளித்துவல்லபசத் திகளெல்லாம் வழங்கியஓர் வள்ளல்

பெருநெறியில் சித்தாடத் திருவுளங்கொண் டருளிப்பெருங்கருணை வடிவினொடு வருதருணம் இதுவே

கருநெறிவீழ்ந் துழலாதீர் கலக்கமடை யாதீர்கண்மையினால் கருத்தொருமித் துண்மைஉரைத் தேனே.!

மேலே கண்ட பாடலின் வாயிலாக தெளிவாக விளக்கி உள்ளார் வள்ளலார்...

மனித குலத்தை நல் ஒழுக்கத்தில் மாற்றி இறைவனுடன் தொடர்பு கொள்ளும் ஒரே மார்க்கம் சுத்த சன்மார்க்கம்..

எல்லா உலகத்திற்கும் ஒரே கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னும் அருள் பேரொளி ஒன்றே ஒன்று மட்டுமே !

எல்லா உயிர்களும் இன்புற்று  வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு