புதன், 6 ஜூன், 2018

ஏன் திருடுகிறான் !

மனிதன் ஏன் மற்றவர்களுடைய பொருளைத் திருடுகிறான்.

எந்தப் பொருளும் எவருக்கும். சொந்தமானது அல்ல என்பதால் திருடுகிறான்.

மனிதனுக்கு இவ்வுலகில் சொந்தமானது எது ?

அருள் ஒன்று மட்டுமே சொந்தமானது.

இவ்வுலகில் பொருளுக்காக வாழ்நாள் முழுவதும் அலைகிறார்களே ஏன் ?

மனிதன் செய்யும் முட்டாள் தனங்களில் பெரிய முட்டாள் தனமே அதுதான்

மனிதன் எதற்காக இவ்வுலகில் வாழ வேண்டும் ?

இறைவனிடம் அருளைப் பெறுவதற்காகவே மனிதப் பிறப்பு கொடுக்கப் பட்டுள்ளது.

ஆணும் பெண்ணும் எதற்காக படைக்கப்பட்டது ?

ஆன்மா உயிர் உடம்பு பெற்று அருள் பெறுவதற்கே படைக்கப் பட்டது.

அருள் பெறுவதால் என்ன பயன் ?

மரணம் இல்லாமல்.துன்பம் இல்லாமல்.அழிவில்லாமல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழ்வதற்கு.

தெரிந்தும் மனிதன் ஏன் தவறு செய்கிறான்.?

உண்மை தெரிந்தால் தவறு செய்ய மாட்டான்.தெரியாமல்தான் செய்கிறான்.

உண்மை தெரியாமல் வாழ்வதற்கு காரணம் என்ன ?

மக்களுக்கு வழிகாட்டிய அருளாளர்கள் தான் காரணம்.

ஞானிகளில் உண்மையானவர்கள் எவரும் இல்லையா ?

உலகில் இரண்டு ஞானிகள் மட்டுமே மக்களுக்கு நல் வழியைக் காட்டி உள்ளார்கள்.

யார் அவர்கள் ?

ஒருவர் திருவள்ளுவர்.
ஒருவர் திருஅருட்பிரகாச வள்ளலார்.

இவர்கள் மட்டும் எப்படி எந்த வகையில் உயர்ந்தவர்கள்.?

சாதி.சமயம்.மதம் இல்லாத மனித நேயத்தையும்.ஆன்ம நேயத்தையும் போதித்தவர்கள்.

மனித நேயத்தால் ஆன்ம நேயத்தால் என்ன பயன்?

மனித நேயமும் ஆன்ம நேயமும் விளங்கினால் தான் இறைவன் தொடர்பு கிடைக்கும்.

இறைவன் தொடர்பால் என்ன லாபம் ?

இறைவன் தொடர்பால் ஆன்மலாபம். அருள் லாபம் கிடைக்கும்.அருளைப் பெற்றால் மரணத்தை வெல்லலாம்.

மேலும் கடவுள் நிலை அறிந்து அம்மயமாகி அண்ட கோடிகள் எங்கும் அரசாட்சி செய்யும் அழிவில்லாத ஆற்றலை பெறலாம்.

அதனால் கிடைக்கும் இன்பம் என்ன ?

அதுதான் என்றும் அழியாத எதனாலும் அழிக்க முடியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வு என்பதாகும்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு