செவ்வாய், 15 மே, 2018

தனி மனித புகழ் வேண்டாம் !

ஆன்மநேய அன்புள்ளங்கள் அனைவருக்கும் வணக்கம்.

நான் வழங்கும் கட்டுரைகள் அனைத்தும் என் சொந்த கருத்து கட்டுரைகள் அல்ல.

வள்ளலார் அவர்கள் சொல்லியதை ஒளிவு மறைவு இல்லாமல்  வெளிச்சம் போட்டு மக்களுக்கு காட்டுகிறேன்..

தனிமனித புகழ் எப்போதும் எனது கட்டுரையில் இருக்காது...

இறந்து போனவர்கள் எவ்வளவு புகழ் பெற்று இருந்தாலும் .அவர்களும் சாதாரண மனிதர்களே..

என்பதால் மரணம் அடைந்தவர்கள்.மரணம் அடைபவர்களை எல்லாம் குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டாம் என்றும் அவர்கள் கொள்கைகளைப் பின்பற்ற வேண்டாம் என்றும் சொல்கிறேன்.

அப்படி சொல்வதால் சில அன்பர்களுக்கு என்மேல் கோபமும் வருத்தமும் உண்டு.வள்ளலார் கொள்கை உண்மையானது நேர்மையானது.ஒழுக்கம் நிறைந்த்து .என்றும் அழியாத அருள் தன்மை உடையது என்பதை உரக்க சொல்கிறேன்.. ஏற்றுக் கொள்பவர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.ஏற்றுக் கொள்ளாதவர்கள் விட்டுவிடலாம்.

என்மீது வருத்தப்பட்டு எந்த பிரயோசனமும் இல்லை.

எனவேதான் வள்ளலார் சாகாதவனே சன்மார்க்கி என்கிறார்...

மரணம் அடையாமல் வாழ்பவர் எவரோ அவரே முழுமையான அருளாளர்.அவர் சொல்வதுதான் வேதவாக்கு.அதாவது அருள்வாக்கு என்பதாகும்.

அதைத்தான் அம்பலப்பாட்டே அருட்பாட்டு அல்லாத பாட்டெல்லாம் தெருப்பாட்டு என்கிறார. வள்ளலார்..

அருள் பெற்றவர்கள் மட்டுமே இறைவனை காண முடியும்.இறைவனோடு சேர முடியும்..

அந்த வகையிலே நமது தமிழ்நாட்டில் 18.ஆம் நூற்றாண்டில் பிறந்து வாழ்ந்து இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வென்று.இறைவனிடமே ஐந்தொழில் வல்லபத்தைப் பெற்று உலக உயிர்களுக்கு நன்மை செய்து கொண்டு உள்ளார்..

நாம் உண்மை உணராமல்.உண்மை அறிந்து கொள்ளாமல்.உண்மை தெரிந்து கொள்ளாமல் ஒவ்வொருவரும் ஒவ்வொரு கொள்கையைப் பின்பற்றி
வாழ்ந்து மாண்டு கொண்டே உள்ளோம்.

சொன்னவர்களும் மாண்டு போனார்கள் பின்பற்றுபவர்களும் மாண்டு கொண்டே உள்ளார்கள்..

நீங்கள் கேட்கலாம் வள்ளலார் கொள்கையைப் பின்பற்றுபவர்களும் மாண்டு கொண்டேதானே உள்ளார்கள் என்று ! உண்மைதான்.

வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கையை எவரும் முழுமையாக கடைபிடிப்பதில்லை அதனால் மாண்டு கொண்டே உள்ளார்கள்.காரணம் அவர்களும் ஆற்றிலே ஒருகால் சேற்றிலே ஒருகால் வைப்பது போல்..சாதி சமய மதங்களில் பற்று வைத்துக் கொண்டும் சன்மார்க்கத்திலும் பற்று வைத்துக் கொண்டு வாழ்வதால் மரணத்தை வெல்லமுடியாமல் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்...

இருப்பினும் வள்ளலார் கொள்கை மீது அளவற்ற பற்று வைத்திருப்பவர்களுக்கு.அஜாக்கிரதையால்.அறியாமையால் மரணம் வந்தாலும் ..அடுத்தப் பிறப்பு மனிதப் பிறப்பு என்பது உறுதி செய்யப்பட்டதாகும்..

எனவே இப்பிறப்பிலே அதி தீவிர முயற்ச்சி எடுத்துக் கொண்டு வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளை கடைபிடித்து பின்பற்று வாழ்ந்தால் நிச்சயம் இறைவன் அருளைப்பெற்று மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழலாம்.

எனவே மாண்டு போனவர்கள் கொள்கையை பின்பற்றி வாழ்ந்தால் அவர்களுக்கு கிடைத்த அதே மரணம் நமக்கும் கிடைக்கும் என்பதால் உண்மையை உரக்கச் சொல்கின்றேன்.

எனவே வள்ளலார் பாடல்!

கரணம்மிகக் களிப்புறவே கடல்உலகும் வானும்கதிபதிஎன் றாளுகின்றீர் அதிபதியீர் நீவிர்

மரணபயம் தவிராதே வாழ்வதில்என் பயனோமயங்காதீர் உயங்காதீர் வந்திடுமின் ஈண்டே

திரணமும்ஓர் ஐந்தொழிலைச் செய்யஒளி வழங்கும்சித்திபுரம் எனஓங்கும் உத்திரசிற் சபையில்

சரணம்எனக் களித்தெனையும் தானாக்க எனதுதனித்தந்தை வருகின்ற தருணம்இது தானே.!

என்னும் பாடல்களிலே ....உலகத்திலே ஐந்து பூதங்களான மண்.நீர்.அக்கினி.காற்று.ஆகாயம் பொன்ற வற்றை ஆண்டு கொண்டு புகழ் பெற்று வாழ்ந்தாலும் கரணங்களான மனம்.புத்தி.சித்தம்.அகங்காரம் போன்ற கருவிகள் தான் மகிழ்ச்சி அடைகின்றன.ஆன்மா மகிழ்ச்சி அடைவதில்லை..ஜீவன் என்னும் உயிர் மகிழ்ச்சி அடைவதில்லை. எனவே அருள் பெற்றால்தான் ஆன்மா மகிழ்ச்சி அடையும்.ஆன்மா மகிழ்ச்சி அடைந்தால்தான் மரணத்தை வெல்ல
 முடியும்.என்கிறார் வள்ளலார்.

மேலும் வள்ளலார் பாடல் !

இறந்தவரை எடுத்திடும்போ தரற்றுகின்றீர் உலகீர்இறவாத பெருவரம்நீர் ஏன்அடைய மாட்டீர்

மறந்திருந்தீர் பிணிமூப்பில் சம்மதமோ நுமக்குமறந்தும்இதை நினைக்கில்நல்லோர் மனம்நடுங்கும் கண்டீர்

சிறந்திடுசன் மார்க்கம்ஒன்றே பிணிமூப்பு மரணம்சேராமல் தவிர்த்திடுங்காண் தெரிந்துவம்மின் இங்கே

பிறந்தபிறப் பிதிற்றானே நித்தியமெய் வாழ்வுபெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் விரைந்தே.!

இறந்தவரைப் பார்த்து அழுது புலம்புகின்றீர் .அவரையே குருவாகவும்.போற்றி புகழ்ந்து கொண்டு உள்ளீர்கள்.அதனால் என்ன பயன் ?

பிணி.மூப்பு.மரணத்தை தவிர்க்கும் வழி உள்ளதே..பொய் வாழ்வு வாழாமல் நித்தியமான  மெய் வாழ்வு வாழ்க்கை பெற்றிடலாம் பேரின்பம் உற்றிடலாம் என்று வள்ளலார் கூவி கூவி அழைக்கிறார்...

நாம் இனிமேலாவது மரணத்தை வென்ற மகான் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க கொள்கையைக் கடைபிடித்து சாகாகல்வியைக் கற்று மரணத்தை வென்று பேரின்ப லாபத்தைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வோம்....

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !
கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு