செவ்வாய், 12 ஜூன், 2018

உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா ?

உடல் உறுப்புக்கள் தானம் செய்யலாமா !

உடல் உறுப்புக்களை தானம் செய்வது இயற்கைக்கு விரோதமானது.

ஒவ்வொரு உயிரும் உடம்பும். ஆன்மாவின் செயலுக்கும் பழைய பதிவுகளுக்கும் தகுந்தாற் போல் உடல் உறுப்புக்கள் இயற்கையால் (இறைவனால்) கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுதான் உடம்பு என்பதாகும்..

நமக்கு இறைவனால் அளித்த உடல் உறுப்புக்களை தானம் என்ற பெயரில் பெற்று மற்றவர்களுக்கு பொறுத்தி பணம் பறிக்கும் மருத்தவ மனைகள். உலகம் முழுவதும் நிறைந்து உள்ளன.

ஒருவர் உறுப்பை வேறு ஒருவருக்கு பொருத்துவதால் நீண்ட காலம் வாழ்ந்துவிட முடியாது..எல்லாமே மருத்தவர்களின் ஏமாற்று வேலை என்பதை மக்கள் அவசியம் தெரிந்து புரிந்து கொள்ள வேண்டும்.

நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே கட்டுரையில் எழுதி இருந்தேன்..அதற்கு நிறைய அன்பர்கள் ஜீவகாருண்யம் இல்லாமல் பேசுகிறீர்கள்.
எழுதுகிறீர்கள். என்று எதிர்ப்புத் தெரிவித்தார்கள்..

இறந்து போகின்றவர்களின் உறுப்புக்கள் வீணாகத்தானே போகின்றது. அவற்றை மற்றவர்களுக்கு கொடுத்து. உயிரைக் காப்பாற்றுவது. ஜீவகாருண்யம் தானே என்று பலர் நினைக்கிறார்கள் .அது முற்றிலும் தவறானது...மருத்தவர்களின் பணம் பறிக்கும் சூழ்ச்சி என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

அப்படியே வேறு ஒருவரின் உறுப்பை பொருத்தியவர்கள் நீண்ட காலம் வாழ்ந்த்தாக வரலாறுகளே இல்லை..உயிர்.உடம்பை விட்டு. எப்போது பிரியும் என்பது இயற்கையின் நியதிப்படித்தான் நடக்கும். அதை நிர்ணிக்கும் உரிமை எவருக்கும் கிடையாது.

உயிருக்கும் உடம்பிற்கும் உருப்புக்களை.பொருத்துவது  இறைவன் நியதியின் கட்டளைப்படிதான் பொருத்தப்படுகின்றன.அவற்றை மற்றவர்களுக்கு தானம் செய்வதை இறைவன் ஏற்றுக் கொள்வதும் இல்லை..

வள்ளலார் திருஅருட்பா வில் எந்த இடத்திலும் உறுப்புக்களை தானம் செய்யுங்கள் என்று வள்ளல்பெருமான்  சொல்லவில்லை..

பசி.பிணி.தாகம்.இச்சை எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்களால் வருந்துகின்ற போது.அவரவர்களால் முடிந்த அளவு உபகாரம் செய்து.அந்த துன்பத்தைப்  போக்குவதுதான் ஜீவகாருண்யம் என்றும் உயிர் இரக்கம் என்று சொல்லுகின்றார்.

எனவே உடல் உறுப்புக்கள் தானம் செய்வது நமது உரிமை அல்ல என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்..

இன்னும் கொஞ்ச காலங்களில் இந்த உண்மை. விஞ்ஞான மருத்துவத்தின் மூலமே வெளியாகும்.பொறுத்து இருந்து பாருங்கள்.

ஒவ்வொருவரும் நல் ஒழுக்கத்தால் உடம்பையும் உயிரையும்  ஆபத்துக்கள் வராமல் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.அவைதான் இறைவன் வள்ளலார் மூலமாக. நமக்கு நல்வழி காட்டிய சுத்த சன்மார்க்க ஒழுக்க நெறிகளாகும்...

ஒழுக்கத்தைக் கடைபிடிப்போம் உயிரையும்.உடம்பையும்  அழிக்காமல் காப்பாற்றிக் கொள்வோம்...

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு