திங்கள், 25 டிசம்பர், 2017

ஞான சித்தர் வள்ளலார்

[23/12, 11:56] ‪+91 94427 78420‬: குருபாரம்பரியம் தரும் காலக் கணக்கீடு காயகல்ப மூலிகையும் காலக் கணக்கீடும் சித்தர்கள் எதையும் காலக் கணக்கீட்டு முறையில் விளக்கிடும் அறிவியல் போக்குக் கொண்டிருப்பர் என்பதற்கு நிறையச் சான்றுகள் அவர்களுடைய ஏட்டுச் செய்திகளிலும் வாக்குச் செய்திகளிலும் உள்ளன. தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகா சன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் தமது ஏட்டுச் செய்திகளிலும் வாக்குச் செய்திகளிலும் பிறர் எழுதியவை, கூறியவை என்ற செய்திகளைக் காலக் கணக்கீட்டு முறையோடும், குறிப்பிட்டவர்களின் பெயர்களுடனுமே வெளியிட்டுள்ளார். இது, இவருடைய தெளிந்த, நேரிய, நடுநிலை மிக்க அறிவியல் போக்கினையே வெளிப்படுத்துகின்றது. இதனாலேயே இவர் எழுதியுள்ள வரலாறுகள் உலக வரலாற்றுத் துறையில் படிந்துள்ள இருளை அகற்றுமென்று நம்ப முடிகின்றது. “... இவ்வுலகம் ஒருநூறு ஆயிரம் கோடியாண்டுகள் நெருப்புக் கோளமாகவும்; ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகள் பனிக் கோளமாகவும்; ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகள் நீர்க்கோளமாகவும் இருந்த பின்னரே கல்லும், மணலும், மண்ணும் தோன்றின. இவை தோன்றிட ஒரு நூறு ஆயிரம் கோடியாண்டுகளாயின. ஆக நானூறாயிரம் கோடியாண்டுகளுக்குப் பின்னரே இவ்வுலகில் உயிரணு ஊற்றுக்கள் தோன்றி அவற்றிலிருந்து உயிரணுக்கள் வெளிப்படலாயின. இவற்றில் ஒன்றரை நூறாயிரம் உயிரணுக்கள் ஒன்று கூடி ஓர் அருவம் என்ற கணக்கில் அருவங்கள் தோன்றின. நீரிலும் நிலத்திலும் இந்த அருவங்களின் முயற்சியாலும், உயிரணுக்களின் கலப்பாலும் பல்வகைப் பட்ட பயிரினங்களும் உயிரினங்களும் தோன்றின ....” [23/12, 11:57] ‪+91 94427 78420‬: “ ... மணிசன் [சித்தர்களின் நூல்களில் ‘மண்ணின் ஈசன் மணிசன்’ என்ற கருத்து விளக்கம் உள்ளது. அத்துடன் ‘மனதை உடையவன் மனிதன்’ என்ற கருத்து விளக்கமும் உள்ளது. இவற்றுக்கு மேலாக ‘மணிசன் தனது ஆறாவது அறிவால் உயர்ந்து மனப்பக்குவம் பெற்றபின் மனிதன் ஆனான்’ என்ற கருத்து விளக்கமும் உள்ளது. சித்தர்களின் நூல்களில் ‘மணிதன்’ என்று எழுதும் மரபும் உள்ளது.] இவ்வுலகில் தோன்றிப் பதினாறரை நூறாயிரம் ஆண்டுகள் கழித்து; நீர் சூழ்ந்த ஒரே பெருநிலப் பரப்பாக இருந்த நாவலந்தீவு முதன்முதலாகப் பெரியதோர் கடல் கோளுக்கு உள்ளாகிப் பிரிந்து நாலாபக்கமும் பல சிறிய எளிய கண்டங்களும் தீவுகளும் உண்டாயின. நாவலந்தீவின் நடுப்பகுதி குமரிக் கண்டமாக மிஞ்சி நின்றது. இக்குமரிக் கண்டமே முதன்முதல் மணிசர்கள் பிறந்த நிலப் பகுதியாகும். இந்நிலப் பகுதியே பதினெண்சித்தர்களின் தாயகமாகும்....” “... மணிசர்களுடன், விண்ணிலிருந்து வந்த பதினெண்சித்தர்களும் பதினெட்டாம்படிக் கருப்புகளும் உறவு கொண்டு மனிதர்களை உருவாக்கினார்கள். இம் மனிதர்களுக்காகப் பதினெண்சித்தர்கள் பஃறுளியாற்றங்கரையில் மதுரையைத் தலைநகராகக் கொண்ட [மருதை - என்ற பாட வேறுபாடு இதற்குண்டு] முதல் அரசை உருவாக்கினார்கள். ஓர் ‘உகம்’ [யுகம் - பாடவேறுபாடு] பதினெண்சித்தர்களின் தலைவரான சீவனாலும் [சிவன் - என்ற பாடவேறுபாடு இதற்குண்டு. சித்தர்களின் நூல்களில் ‘சீவன்’, சிவன்’ என்ற இரு சொற்களும் ஆட்சியில் உள்ளன] அவர் மகன் முருகனாலும் கழிந்தது. அதன் முடிவில் இரண்டாவது கடல்கோள் நிகழ்ந்தது. அதற்குப் பின் இரண்டாவது உகம் இராமதேவனுடைய ஆட்சியின் முடிவில் ஏற்பட்டது. அப்போது கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு தமிழ்மொழி உலகாண்டிட்டது. [23/12, 11:57] ‪+91 94427 78420‬: இராமதேவனின் முடிவில் பிறந்த மூன்றாவது கடல் கோள் கபாடபுரத்தையுள்ளிட்ட பெருநிலப் பரப்பை அழித்தது. அதன்பிறகு பிறந்த மூன்றாவது உகம் கண்ணதேவனுடைய ஆட்சியின் முடிவோடு முடிந்தது. ஆனால், அப்போது கடல்கோள் ஏதும் நிகழவில்லை. ஆனால், மனிதர்களின் மனத்தளவில் பெரிய கடல்கோள் ஏற்பட்டு எல்லாத் தெய்வீகப் பண்புகளையும் அழித்தது. அதற்குப் பின் நான்காவது உகம் பிறந்தது. மூன்றாவது உகத்தில் தோற்றுவிக்கப் பட்ட மூன்றாவது தமிழ்ச் சங்கம் எவ்வித அழிவுமின்றி நான்காவது உகத்திலும் செயல்பட்டிட்டது....” பதினெண்சித்தர் பீடத்தை உருவாக்கிய சித்தர் சிவபெருமானால் பஃறுளி யாற்றங்கரையிலிருந்த தொன்மதுரையில் [தென்மதுரை, தென்மருதை, தொன்மருதை என்ற பாடவேறுபாடு இதற்குண்டு] தோற்றுவிக்கப் பட்ட முதல் தமிழ்ச் சங்கத்து நூல்களும்; பதினெண்சித்தர் பீடாதிபதிகளில் ஒருவரான கபாடபுரத்துச் சித்தர் கருவூறார் அவர்களால் தோற்றுவிக்கப் பட்ட இரண்டாவது தமிழ்ச் சங்கத்து நூல்களும்; பதினெண்சித்தர் பீடாதிபதிகளில் ஒருவரான சித்தர் தாமிரபரணி யாற்றங்கரைக் கருவூறார் அவர்களால் வைகையாற்றங் கரையிலுள்ள மதுரையில் தோற்றுவிக்கப் பட்ட மூன்றாவது தமிழ்ச் சங்கத்து நூல்களும் ஆரியப் படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியனால் தொகுத்து வகுத்து வகை செய்யப் படலாயின. இம்மாபெரும் பணியினைப் பத்தாவது பதினெண் சித்தர் பீடாதிபதியான குருமகா சன்னிதானம் சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் முன்னின்று செயல்படுத்தினார். அதாவது, அவர் இப்பணியினை மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரைக் கொண்டு செயல்படுத்தினார். ஆனால், வட இமயமலைச் சாரலைச் சார்ந்த பிராகிருத மொழிக் களப்பிறர்களும்; கங்கை கடலோடு கலக்கும் கடற்கரைப் பகுதியைச் சார்ந்த பாலிமொழிக் களப்பிறர்களும் [23/12, 11:57] ‪+91 94427 78420‬: பாண்டியப் பேரரசைத் தாக்கி மூன்றாவது தமிழ்ச் சங்கத்தை எரியூட்டியும், தமிழ்ப் புலவர்களைக் கொன்று குவித்தும் தமிழை வலிமைப்படுத்தும் பணியினைச் சிதைத்தனர். மூன்றாவது தமிழ்ச்சங்கம் அழிந்த பின்னர் நூற்றைம்பது ஆண்டுகள் வாழ்ந்திட்ட சித்தர் அமராவதி யாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் கரந்தமலைக் குகையில் மதுரைக் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரை வாழவைத்து எஞ்சிய தமிழ் நூல்கள் அனைத்தும் வகையோடு வாழ வழிசெய்தார். ...” “மூன்றாவது தமிழ்ச் சங்கம் அழிவதற்கு எழுநூறு ஆண்டுகளுக்கு முன் அதியமான் நெடுமானஞ்சி - ‘கருநெல்லிக்கனி’ எனும் காயகல்ப மூலிகையை ஔவையாருக்குக் கொடுத்துத் தமிழ் என்றும் செழித்து வாழ வகை செய்தான். ஔவையும் மூன்றாவது தமிழ்ச் சங்கம் அழிந்தபின் எண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் வளர்த்துச் சேரமான் பெருமால் நாயனாரோடும், சுந்தரமூர்த்தி நாயனாரோடும் திருக்கயிலாயம் சென்று முத்தியுற்றிட்டார்.... காயகல்ப மூலிகையால் ஔவையார் பன்னெடுங்காலம் வாழ்ந்தது கண்டும் கூடப் பதினெண் சித்தர்களின் ‘சித்தர் மருத்துவத்தையும்’, ‘சித்த மருத்துவத்தையும்’ முறையோடு கையாண்டு நிறை வாழ்வு வாழ்பவர் அருகிவிட்டனரே ....” இக்குறிப்புக்கள் தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் நூல்களில் பல இடங்களில் காணப்படுகின்றன. குறிப்பாக, 1. குருபாரம்பரியம், 2. அரச பாரம்பரியம், 3. முச்சங்க வரலாறு, 4. பதினெண்சித்தர் வரலாறு, 5. சித்தர் நெறி, 6. சித்தர் மருத்துவம், 7. சித்த மருத்துவம், 8. தமிழிலக்கிய வரலாறு ... முதலியவற்றில் இவையுள்ளன. -----------------------------------பதினெண் சித்தர் இயக்கம். இறுதியாக 18ஆம் நூற்றாண்டில்.தோன்றிய ஞான சித்தர்.திருஅருட்பிரகாச வள்ளலார்.உலக உண்மைகளையும்.அதன் வரலாறுகளையும் மிகத் தெளிவாக விளக்கி உள்ளார். இறைவனால் தோற்றுவிக்கப்பட்ட தமிழையும்.அதன் பெருமையும்.உலகிற்கு பரை சாற்றுகின்றார்.எல்லா உண்மைகளையும்.தாம் எழுதிய திருஅருட்பா என்னும் நூலில் எழுதிவைத்துள்ளார் அதில் உள்ள இறை உண்மையும்.உலகத்தை படைத்த விபரங்களையும் படித்து தெரிந்து கொண்டால் எல்லாம் வெட்ட வெளிச்சமாக தெரிந்து கொள்ளலாம்.!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு