புதன், 28 ஜூன், 2017

சுத்தசன்மார்க்ககொள்கைகள்!

[28/06, 5:50 p.m.] Apj Arul. Madurai: :::::: தியானம்:::::

தியானஞ் செய்யவேண்டுமானால், ஏதாவது ஓர் உருவத்தைத் தியானிக்கவேண்டும். நிஷ்களமா யிருக்கப்படாது. உருவமாக இருக்க வேண்டும். அருவமாகத் தியானிக்கப்படாது. பின், உருவங் கரைந்து அருவமாகும். துவைதமாக இருந்தால், அத்துவைதம் தானே ஆகும். எப்படி எனில், பார்க்கும் தான் கெடுவது அத்வைதம். பார்க்கப்படும் பொருளும் கெடுவது அதீதம். சத்தியம்.

- திருவருட்பிரகாச வள்ளலார்
[28/06, 5:50 p.m.] Apj Arul. Madurai: சன்மார்க்க சாதனம்

சாதனங்கள் ஒன்றும் வேண்டாம். ஏதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாம். அதைக் கண்டு பல்லிளித்து இறுமாந்து கெட நேரிடும். ஆதலால், காலந் தாழ்க்காது எல்லா உயிரையும் தன்னுயிரைப் போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக் கொள்ளுதல் வேண்டும். இதுவே சாதனம். இந்தக் குணம் வந்தவன் எவனோ அவன்தான் இறந்தவரை எழுப்புகிறவன்; அவனே ஆண்டவனுமாவான்.

102. சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை

ஒருவன் பிரார்த்தனை செய்வதில் அவனுக்காக மட்டும் செய்வது சரியல்ல. இந்த உலகமெலாம் வாழும்படி பிரார்த்தனை செய்தல் வேண்டும். அப்படிச் செய்வதால், அதில் ஒருவனுக்கு வேண்டியவை எல்லாம் அடங்கி விடுகின்றன. பிரார்த்தனை செய்ய வேண்டுமாகில் இப்படித்தான் செய்ய வேண்டும்.

பாதி இரவி லெழுந்தருளிப் பாவி யேனை யெழுப்பியருட்
சோதி யளித்தென் னுள்ளகத்தே சூழ்ந்து கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான் பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போலிவ் வுலகம் பெறுதல் வேண்டுவனே.*

என்பதே என் பிரார்த்தனை யாகும்.
[28/06, 5:51 p.m.] Apj Arul. Madurai: சன்மார்க்கக் கொள்கை

சர்வசித்தியையுடைய தனித்தலைமைப் பதியாகிய ஆண்டவரை வேண்டித் தபசுசெய்து சிருட்டிக்குஞ் சித்தியைப் பெற்றுக்கொண்டவன் பிரமன்; சிருட்டி, திதி, ஆகிய சித்தியைப் பெற்றுக்கொண்டவன் விஷ்ணு; சிருட்டி, திதி, சங்காரம் ஆகிய சித்தியைப் பெற்றுக் கொண்டவன் ருத்திரன். இவர்கள் ஏற்படுத்திய சமய மார்க்கங்களை அனுட்டிக்கின்றவர்கள் இவர்களை அந்தந்தச் சமயங்களுக்குத் தெய்வங்களாக வணங்கி வழிபாடு செய்துவந்தார்கள். இம் மூர்த்திகளுடைய சித்திகள் சர்வசித்தியையுடைய கடவுள் சித்தியின் இலேசங்கள்; அதில் ஏகதேசம்கூட அல்ல. ஆகையால், இவர்கள் அந்தச் சர்வசித்தியையுடைய கடவுளுக்கு ஒப்பாகார்கள்; கோடி கோடிப் பங்கு தாழ்ந்த தரத்தில் இருக்கின்றார்கள். ஆகையால், சமயத்தெய்வங்களை வழிபாடு செய்து, அந்தச் சமயத் தெய்வங்கள் பெற்றுக்கொண்ட அற்ப சித்தியில் அவர்கள் மயங்கி மகிழ்ந்து அகங்கரித்து மேலேறவேண்டிய படிகளெல்லாம் ஏறிப் பூரண சித்தியை யடையாமல் தடைப்பட்டு நிற்றல்போல் நில்லாமல், சர்வசித்தியையுடைய கடவுளொருவர் உண்டென்றும், அவரை உண்மையன்பால் வழிபாடு செய்து பூரண சித்தியைப் பெற வேண்டுமென்றும் கொள்ள வேண்டுவது சன்மார்க்க சங்கத்தவர்களுடைய கொள்கை. இதை யாண்டவர் தெரிவித்தார்.

ஆங்கீரச வருடம் ஆவணி மாதம் **. இதற்குப் பிரமாணம்: அருட்பிரகாச வள்ளலார் அருட்பாவில் "சன்மார்க்க சங்கத்தீர் சிற்றடியேன்" "அறங்குலவு தோழியிங்கே நீயுரைத்த வார்த்தை" என்னும் இரண்டு திருப்பாசுரங்களின் தாத்பர்யத்தால் காண்க.

96. சுத்த சன்மார்க்க முடிபு

சன்மார்க்கத்தின் முடிபு சாகாத கல்வியைத் தெரிவிப்பதேயன்றி வேறில்லை. சாகிறவன் சன்மார்க்க நிலையைப் பெற்றவனல்லன்.சாகாதவனே சன்மார்க்கி.

97. சாகாத கல்வி

வேதங்கள் முக்கியம் சாகாதகல்வியைச் சொல்லியிருக்கின்றன. தேவர் குறளில் முதல் அதிகாரத்தில் சாகாத கல்வியைக் குறித்துச் சொல்லியிருக்கிறது. அதைத் தக்க ஆசிரியர் மூலமாய்த் தெரிந்து கொள்ளலாம்.

98. சாகாக்கல்விக்கு ஏது

தூக்கத்தை ஒழித்தால் ஆயுசு விருத்தியாகும். ஒருவன் ஒரு நாளைக்கு இரண்டரை நாழிகைதூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருடஞ் சீவித்திருப்பான். எப்போதும் மறப்பில்லாமல் ஆசானுடைய திருவடியை ஞாபகஞ் செய்துகொண்டி ருப்பதே சாகாத கல்விக்கு ஏதுவாம்.

(வேறுகுறிப்பு)

ஒருவன் இரண்டரை நாழிகை தூங்கப் பழக்கஞ் செய்வானானால், அவன் ஆயிரம் வருஷம் ஜீவித்திருப்பான். எப்போதுஞ் சலிப்பில்லாமல் சுத்தக் கரணமாய் அருள் வடிவாய்த் தானாக நிற்றலே சாகாக் கல்விக்கு ஏது.

99. சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகள்

சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய தடையாகிய சமயம் மதம் முதலிய மார்க்கங்களை முற்றும் பற்றறக் கைவிட்டவர்களும், காமக் குரோதம் முதலியவைகள் நேரிட்ட காலத்தில் ஞான அறிவினால் தடுத்துக்கொள்பவரும், கொலை புலை தவிர்த்தவர்களும் ஆகிய இவர்கள் தான் சுத்த சன்மார்க்கத்துக்கு உரியவர்கள் ஆவார்கள். மரணம், பிணி, மூப்பு, பயம், துன்பம் - இவை முதலியவைகளைத் தவிர்த்துக் கொள்வார்கள். அதாவது, செயற்கையாகிய குணங்களை நன்முயற்சியால் தடுத்துக் கொள்பவர்களுக்குக் கேவலாதிசார மரணம் நீங்கும். அப்படி இல்லாது இவ்விடம்* காத்திருப்பவர்கள் மரணத்தைத் தவிர்த்துக்கொள்ள மாட்டார்கள். அருள் விளங்குங் காலத்தில் அவரவர்கள் பரிபாகத்துக்குத் தக்கதாக இகலோக போகத்தை மட்டும் அனுபவிக்கக்கூடும். பரலோக போகமாகிய ஞானசித்திகளைப் பெறமாட்டார்கள்.
[28/06, 5:51 p.m.] Apj Arul. Madurai: 101. சுத்தசன்மாக்க சாதனம் (பரோபகாரம், சத்விசாரம்)

பரோபகார மென்பது யாது? தேகத்தாலும் கரணத்தாலும் இந்திரியத்தாலும் திரவியத்தாலும் ஆன்மாக்களுக்கு உபகரித்தல், திரவியம் நேராத பட்சத்தில், திரிகரண சுத்தியாய் ஆன்மநேய சம்பந்தமான தயா விசாரத்தோடு எல்லாச் சீவர்களினது வாட்டத்தைக் குறித்தும் பிரார்த்தித்தல். சத்விசாரமென்பது கடவுளினது புகழையும் ஆன்மாவின் தரத்தையும் நமது சிறுமையையும் கடவுளின் தரத்தையும் இடைவிடாது விசாரித்து, நமது குறையெல்லாம் கடவுளின் திருவடியில் விண்ணப்பிப்பது. சிவானுபவமாகிய தேகத்திரயம் பெறுவதற்கு மேற்குறித்த இரண்டு துவாரந் தவிர வேறில்லை. மேலும் தயவென்பது இரண்டு வகைப்படும். யாவெனில் கடவுள் தயை ஜீவ தயை ஆகிய இரண்டு. கடவுள் தயை யென்பது இறந்த உயிரை எழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பட்சி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் நியதியின்படி அருட்சத்தியால் ஊட்டி வைத்தல், சோம சூரி யாக்கினிப் பிரகாசங்களைக் கால தேச வண்ணம் பிரகாசஞ் செய்வித்தல், பக்குவிகளுக்கு அனுக்கிரகித்தல், அபக்குவிகளைச் செய்ய வேண்டிய அருள் நியதியின்படி தண்டனை செய்வித்துப் பக்குவம் வருவித்தல். ஜீவதயை யென்பது தன் சத்தியினளவு உயிர்க்கு உபகரித்தல் அல்லது ஆன்மநேய சம்பந்தம் பற்றித் தயாவடிவமாயிருத்தல்.

சுத்த சன்மார்க்க சாதனம்

சுத்த சன்மார்க்க சாதனம் 2 வகைப்படும்: பரோபகாரம், சத்விசாரம், பரோபகாரம் என்பது தேகத்தாலும், வாக்காலும், திரவியத்தாலும் உபகாரஞ் செய்வது. சத்விசாரம் என்பது நேரிடாத பக்ஷத்தில் ஆன்மநேய சம்பந்தமான தயாவிசாரத்தோடு இருப்பது. கடவுளது புகழை விசாரித்தல், ஆன்மாவின் உண்மையை விசாரித்தல், தன் சிறுமையைக் கடவுளிடத்தில் விண்ணப்பித்தல். இந்த மார்க்கத்தால்தான் சுத்தமாதி மூன்று தேகங்களைப் பெற வேண்டும்.

கடவுள் தயவும் ஜீவ தயவும்

கடவுள் தயை, ஜீவதயை யென்பது: கடவுள்தயை யென்பது இறந்தவுயிரை யெழுப்புதல், தாவரங்களுக்கு மழை பெய்வித்தல், மிருக பக்ஷி ஊர்வன வாதிகளுக்கு ஆகாரம் கொடுத்தல், கால சக்கிரத்தின்படி சோமன் சூரியன் அக்கினிப் பிரகாசங்களை அளவு மீறாமல் நடத்தி வைத்தல் முதலியன. இவற்றை விரிக்கில் பெருகும். ஜீவதயை யென்பது தன் சத்தியளவு உயிர்க்கு உபகரித்தல், ஆன்ம நேய தயா விசாரத்தோடு இருத்தல், அன்னிய ஜீவதோஷ விசாரம் கனவிலும் செய்யாதிருத்தல் முதலியவாம்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 103. சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம்

ஜீவகாருண்யத்தால் பிரமன் ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணு ஆயுசும், ஈசுர பக்தியால் ருத்திரன் ஆயுசும் பிரம்மஞானத்தால் என்றுமழியாத சுவர்ண தேக முதலியவைகளைப் பெற்றுக்கடவுள் மயமாகலாம். எப்படியெனில்: கடவுள் சர்வ ஜீவதயாபரன், சர்வ வல்லமையுடையவன்; ஆகையால், நம்மையும் சர்வ ஜீவதயையுடையவர்களாய்ச் சர்வவல்லமையையும் பெற்றுக் கொள்ளும்படி மனித தேகத்தில் வருவித்தார். ஞானிக்குத் தயவு அதிகப்பட்டிருக்கிறபடியால், கேளாதகேள்வி முதலிய மஹா அற்புதங்களான இறந்தாரெழுதல் முதலிய அற்புத வல்லமையைப் பெற்றிருக்கின்றார். எந்த ஜீவர்களிடத்தில் தயாவிருத்தியாகிய அருள் விசேஷம் விளங்குகின்றதோ, அந்த ஜீவர்களிடத்தில் கடவுள் விளக்கம் விசேஷமாயிருக்கும். மற்றவர்களிடத்தில் காரியப்படாது. ஆதலால் மலஜல சங்கல்ப காலங்கள் தவிர மற்றக் காலங்களில், கடவுளிடத்தில் அன்பும் ஜீவர்களிடத்தில் பக்தியும் செலுத்த வேண்டும். ஆதலால் பக்தியென்பது மன நெகிழ்ச்சி, மனவுருக்கம், அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி, ஆன்மவுருக்கம். எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதலே யீசுர பக்தியாம். அந்தக்கரண சுத்தியின் பிரயோசனம் பக்தியை விளைவிப்பது. ஜீவகாருண்யமுண்டானால் அருளுண்டாகும், அருளுண்டானால் அன்புண்டாகும், அன்புண்டானால் சிவானுபவமுண்டாகும். தத்துவவொழுக்கம்பற்றிச் சமயங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழிலொழுக்கம் பற்றிஜாதிகள் ஏற்படுத்தப் பட்டிருக்கின்றன.தயவை விருத்தி செய்வதற்குத் தடையாயிருப்பன சமய ஏற்பாடு ஜாதியேற்பாடு முதலிய கட்டுப்பாட்டு ஆசாரங்கள். அவையாவன: ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரம ஆசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாஸ்திராசாரம் முதலிய ஆசாரங்கள். ஆதலால் மேற்குறித்த ஆசாரங்கள் ஒழிந்து, சுத்தசிவசன்மார்க்க சத்திய ஞான ஆசாரத்தை வழங்கிப் பொது நோக்கம் வந்தால், மேற்படி காருண்யம் விருத்தியாகிக் கடவுளருளைப் பெற்று, அனந்த சித்தி முத்திகளைப் பெறக்கூடுமேயல்லது, இல்லாவிடில் கூடாது.

கடவுள் மயமாவது

ஜீவ காருண்யத்தால் பிரமாவினுடைய ஆயுசும், பாசவைராக்கியத்தால் விஷ்ணுவுடைய ஆயுசும், ஈசுரபத்தியால் ருத்திரனாயுசும், பிரமஞானத்தால் என்று மழியாத சுவர்ண தேகம் முதலியவையும் பெற்றுக் கடவுள் மயமாகலாம்.

தயவும் கடவுளும்

கடவுள் சர்வஜீவ தயாபரர். ஆகையால் சர்வ வல்லபமுடையவர். அதுபோல் நம்மையும் சர்வ ஜீவ தயையுடையவர்களாய்ச் சர்வ வல்லபத்தையும் பெற்றுக் கொள்ளும்படி செய்வார். ஞானிக்குத் தயை அதிகப்பட்டிருப்பதால், அவர் இறந்தவர்களை யெழுப்புதல் முதலிய அற்புதங்களைச் செய்யும் வல்லப முடையவரா யிருக்கின்றார். யாரிடத்தில் தயவு அதிகப்பட்டிருக்கின்றதோ, அவரிடத்தில் கடவுள் இருக்கின்றார். அந்தத் தயை யில்லாதவர்களிடத்துக் கடவுளிருந்து மில்லாமையா யிருக்கிறார். கடவுளிடத்தில் சதா அன்பும் பத்தியும் செலுத்த வேண்டும்.

பத்தி

பத்தி என்பது மனநெகிழ்ச்சி மனவுருக்கம். அன்பு என்பது ஆன்ம நெகிழ்ச்சி ஆன்மவுருக்கம். ஈசுவரபத்தி என்பது எல்லாவுயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருப்பதை அறிதல். ஜீவகாருண்யமுண்டானால் அருள் உண்டாகும்; அருள் உண்டானால் அன்புண்டாகும்; அன்புண்டானால் சிவானுபவம் உண்டாகும். அந்தக்கரண சுத்தியின் பிரயோஜனம் பத்தியை விளைவிப்பது.

(வேறு குறிப்பு)

தத்துவ நியாயத்தை அனுசரித்துச் சமயங்க ளேற்படுத்தப்பட்டிருக்கின்றன. தொழில் நியாயத்தை அனுசரித்து ஜாதிகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தயவை விருத்தி செய்வதற்குத் தடையாக இருப்பன சமய ஏற்பாடு ஜாதி ஏற்பாடு முதலியவைகள் ஆதலால், இவைகளை விட்டொழித்துப் பொது நோக்கம் வந்தாலொழிய, காருண்ணியம் விருத்தி ஆகிக் கடவுள் அருளைப் பெற்று அனந்த சித்தி வல்லபங்களைப் பெறமுடியாது.

சத்திய ஞானாசாரம்

ஜாதியாசாரம், குலாசாரம், ஆசிரமாசாரம், லோகாசாரம், தேசாசாரம், கிரியாசாரம், சமயாசாரம், மதாசாரம், மரபாசாரம், கலாசாரம், சாதனாசாரம், அந்தாசாரம், சாத்திராசாரம் முதலிய ஆசாரங்களொழிந்து, சுத்த சன்மார்க்க சத்திய ஞானாசாரம் ஒன்றே இது தொட்டு வழங்க வேண்டும். அதாவது, பெருந்தயவே வடிவமாக இருக்க வேண்டும். அந்நியரின் தோஷம் விசாரியாமல் இருக்க வேண்டும்.

104. ஆன்ம இயற்கையாகிய தயாமூலதன்மம்

தர்மமென்பதற்குப்பொருள் சீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரம தர்மம், சாதிதர்மம் முதலியவாக விரியும். இதில் அதிணுண்மை அதின் தன்மை... தன்மை என்பது அதின் சுபாவம். சுபாவமென்பது இயற்கைக் குணம். அதுவென்பது ஆன்மா. ஆதலால்,ஆன்மாவுக்கு இயற்கைக் குணம் தயை.ஆன்மாவின் இயற்கையென்பதே தர்மத்திற்குப் பொருள். ஆன்ம இயற்கையோடு இருந்தால் சிவமாகலாம். இதைப் பலவாகத் தர்மமென்று பெயரிட்டார்கள். அருள்வெளியாகிய ஆன்ம இயற்கையால் சிவானுபவத்தைப் பெறுவது உண்மை. இதற்கு வேதாகமங்களில் பலபட விரிந்த நாமங்கள் அனந்தம். அவற்றில் சில:- அருட்சத்தி, அருள்வெளி, விருஷபம், தர்மதேவதை, அனாதியியற்கைக்குணம், பரஞானம், அகரவுகரம், அருள்நடம், அன்பு, ஆன்மநெகிழ்ச்சி, ஆன்மஅசைவு, சுத்ததத்துவம், ஆன்மஅறிவின்பேதம் - என இதை விரித்தார்கள். அருள்வடிவாய்ச் சிவமாகிப் பின்னமன்றிப் பூரணமாயிருப்பது நிரதிசயானந்தம். ஆனந்தமென்பது சந்தோஷம். நிரதிசயமென்பது ஆனந்தமின்மை(?). சீவர்களுக்குத் திருப்தி யின்பத்தை நேர்ந்தவரையில் செய்வது ஆனந்தானுபவம்.

தருமம்

தர்மமாவது ஜீவதர்மம், குலதர்மம், சாஸ்திர தர்மம், ஆசாரதர்மம், ஆசிரமதருமம், ஜாதிதருமம் முதலாகப் பலவகையாம். இதனது உண்மை ஆன்மாவின் தன்மை. தன்மை என்பது ஆன்மாவின் சுபாவம். சுபாவமென்பது ஆன்மாவின் சுபாவகுணம். சுபாவகுணமென்பது ஆன்மாவின் இயற்கைக்குணம் தயை. ஆன்மாவினியற்கை என்பதே தருமத்துக்குப் பொருள். தருமத்தோடு கூடியவன் தேக நஷ்டத்தை அடையமாட்டான்.

அருளொளி

அருள்வெளியில் சன்மார்க்கத்திலுள்ள அனுபவங்களைப் பெறலாம். இதற்கு அருட்சத்தி என்றும், அருள்வெளி என்றும், ரிஷப மென்றும், அதின் தன்மை என்றும், அனாதி இயற்கை என்றும், பரஞான மென்றும், பூர்ண நிஷ்டை என்றும், அகர உகர மென்றும், அருள்நடன மென்றும், ஆன்ம நெகிழ்ச்சி என்றும், ஆன்ம அசைவென்றும் பலபட விரிந்த நாமங்கள் உண்டு. அருள்வெளியின் வடிவாய் உண்மை என்னும் சிகாரமாகிய பதியோடு கூடி மௌனானந்தத்தி லிருப்பதே உண்மை.

ஆனந்தம்

ஆனந்தமென்பது சதா சந்தோஷத்தோடு எதிரிட்ட ஜீவர்களைத் திருப்தியால் சந்தோஷ’ப்பித்துத் தானதிசயமின்றி நிற்றல்.

105. ஜீவகாருண்யமே முத்திக்கு முதற்படி

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு அவரெழுந்தருளி இருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையா லடைவதரிது. இவ்வன்பு ஜீவகாருண்யத்தாலல்லது வேறுவகையால் வாராது. ஜீவகாருண்யத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ய முண்டாவதற்கு ஏது அல்லது துவாரம் யாதெனில்: கடவுளுடைய பெருமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தலே. அன்னியவுயிர்களுக்கு இம்சை உண்டாகாது நடத்தலே ஜீவ காருண்யம். இதுதான் முத்தியடைவதற்கு முதற் படியாயிருக்கின்றது. ஆதலால் இதைப் பாதுகாத்தல் வேண்டும்.

ஜீவகாருண்யமும் சித்தியும்

நம்முடைய தலைவராகிய கடவுளை நாமடைவதற்கு, அவர் எழுந்தருளியிருக்கும் கோட்டையின் சாவியாகிய அருள் வேண்டும். அவ்வருள் அன்பினாலல்லது வேறு வகையாலடைவது அரிது. அவ்வன்பு ஜீவகாருண்ணியத்தாலல்லது, வேறு வகையில் வாராது. ஜீவகாருண்ணியத்தின் லாபமே அன்பு. இந்த ஜீவகாருண்ணியம் உண்டாவதற்கு மார்க்கம் யாதெனில்: கடவுளினது பெருமையையும் வல்லமையையும் தரத்தையும் நம்முடைய சிறுமையையும் தரத்தையும் ஊன்றி விசாரித்தல்தான். அன்னிய உயிர்களுக்கு இம்சை உண்டாகாமல் நடத்தலே ஜீவகாருண்ணியம். இதுதான் சித்தி பெறுவதற்கு முதற்படியாகவிருக்கின்றது. ஆதலாலிதைப் பாதுகாத்தல் வேண்டும்.

106. ஞானசித்தியும் ஒளிநிலையும்

இரவில் தீபமில்லாத விடத்தில் இருக்கக்கூடாது. ஏனெனில், அஃது பிராண நஷ்டம் பண்ணும். ஆதலால், நமது கிருகத்தில் தீபம் வைத்து இருளைப் போக்கி ஆனந்த மயமாய் நித்திரையில்லாதிருந்தால், ஆயுள் விருத்தியாம். இஃது சாத்தியனுக்கு. சாதகன் ஒருவாறு நித்திரை செய்தல் வேண்டும். கிருகத்தில் இருளில்லாது எங்கும் பிரகாசமாய் தீபம் வைத்தால், மேற்படி இருள் அந்தத் தீபத்தில் அடங்கும். அதுபோல் ஜீவதீபமாகிய நாம் வசிக்கிற கிருகத்தில் பிரகாசமில்லாவிட்டால், மேற்படி இருள் ஜீவப் பிரகாசமாகிய நம்மிடத்தில் சேர்ந்து நஷ்டத்தைப் பண்ணும். அதுபோல் ஆன்ம வாசமாகிய இந்தத் தேகமாகிற கிருகத்தில் அருட்பிரகாச மில்லாது மருளாகிய அஞ்ஞான சம்பந்தமுடைய இருள் சேர்ந்தால் பிராண நஷ்டம் சீக்கிரமாம்.

ஆதலால், நாம் நெற்றியிலிருக்கும் நடுக்கண்ணை ஆசாரியர் அனுக்கிரகத்தால் திறக்கப் பெற்றுக் கொள்வது நலம்.ஏனெனில், மேற்படி நெற்றிக் கண்ணைத் திறக்கப்பெற்றுக் கொண்டவனுக்கு எல்லா அனுபவங்களும் பட்டப்பகல்போல் தெரியும். அவன்தான் சுத்தஞானி. மேற்படி ஞானி தயவோடு ஒரு பிரேதத்தைப் பார்த்த மாத்திரத்தில் பிரேதம் உயிர்பெற்றெழும். மேற்படி ஞானிக்கு ஆன்மாக்களினது அபக்குவ பரிபாகத்தால் சினம் தோன்றினால். உடனே அந்த ஜீவன் பஸ்பமாகி விடுவன். மேற்படி ஞானிக்கு மேற்குறித்த அடையாளங்களுள. மேற்படி கண்ணைத் திறப்பதற்கு ஒரு கதவும் பூட்டுமுளது. மேற்படி பூட்டை அருளென்கிற திறவுகோலைக் கொண்டு திறக்க வேண்டும். ஆதலால், மேற்படி அருளென்பது ஆன்ம இயற்கையாகிய பெருந்தயவு. நாம் தயாவடிவமானால் மேற்படி அனுபவம் நேரும்.

மேலும் அந்தச் சுத்தஞானி இறந்த உயிர்களை எழுப்புவதற்குப் பிரமாணம் யாதெனில்: ஒருவாறு தீபப் பிரமாணத்தா லறிக. தீபப் பிரமாணமென்பது யாது? தீபத்தினிடத்தில் காரியஒளி, காரிய காரண ஒளி, காரணஒளி என மூன்று. மேற்படி ஒளியாவன ஒளி, சோபை, பிரகாசம். ஆதலால் கடவுள் காரியமாய்ப் பிரகாசம்போல் சுவர்ணதேகியாய்த் தோன்றினால், அதிதூரத்திலிருக்கிற இருளென்னும் அஞ்ஞானத்தைப் போக்கி ஆன்ம அனுபவத்தை வருவிப்பது பிரகாசமயம். அதுபோல் ஒளி மேற்படி பிரகாசத்திலடங்கிச் சோபை காரிய காரணமாய் இருக்கின்றதுபோல், ஆன்மாக்கள் அஞ் ஞானத்தில் கட்டுண்டு அறிவாகிய தீபத்தைக் கருதினால் மேற்படி அறிவாகிய தீபம் தோன்றின கணமே அதன் மயமாவார்கள். அதுபோல் கடவுளின் சோபையைக் கண்டால், பஞ்சகிருத்தியமுஞ் செய்யக்கூடும். ஒளியைத் தொட்டால் சுடுவதுபோல், இறந்த பிரேதத்தை அவர்க்குச் சமீபிக்கச் சேர்த்தால், தக்கணமே அது ஜீவிக்கும். மேலும் பிரகாசம் எங்குமுள்ளது. எந்த இடத்தில் புலை கொலை அகற்றிய சீவர்கள் பிரார்த்தித்தாலும் தக்கணமே அவரது காரண உருவமாகிய பிரகாசத்தில் நின்று காரிய உருவமாகிய ஒளி வடிவாய்த் தோன்றி அருள் செய்வர். இதற்குப் பிரமாணம்: சித்தமார்க்கத்திலுள்ள துருசுச் சுண்ணத்தை மஞ்சளில் தோய்த்த நூலை நெடுந்தூரங்கட்டி, அங்கங்கு காயாது உபகரணம் பூசி, மனிதர்களை நிற்க வைத்து, மேற்படி சுண்ணத்தை அடியில் காட்டின தக்ஷணமே நுனியில் சிவப்பேறும்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 128. சகஜ நிலை

சமாதிப் பழக்கம் பழக்கமல்ல. சகஜக் பழக்கமே பழக்கம்.

129. சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்

சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல்என்பவற்றிற்குப்பொருள் யாதெனில்:- அடியில் வருவனேயாம். சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திரதத்துவம், வித்யாகலை, வஸ்து, அருளானந்தம், காரணாக்கினி, சிவாக்கினி. வேகாக்காலென்பது மகேசுவரபாகம், மகேசுவரதத்துவம், சாந்திகலை. ஆன்மா, அன்பு, காரணவாயு. போகாப்புனலென்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம், பிரதிஷ்டாகலை, ஜீவன், இரக்கம், காரணோதகம். இவை மூன்றும் சாகாத கல்வியைத் தெரிவிக்கும். ஆத்ம தத்துவாதி சிவகரணம் 36, நிர்மல குருதுரியாதீதம் 7; ஆக நிலைகள் 43. இந்த 43 நிலைகளில் ஒவ்வொரு நிலைகளிலும் மேற்குறித்தவை உள. மேலும் இவை மூன்றும் பிண்டத்தில் நாலிடத்திலும் அண்டத்தில் நாலிடத்திலும் உள. அவைகள் பிண்டாண்ட ருத்திர சதாசிவ பேதம். சாகாக் கல்வியைக் குறித்த 43 நிலைகளில் முதல்நிலை அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனது காலம் ஒரு கல்பம். இப்படி 43 நிலைகளையுமேறி அனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்த காலாதீதன்.

மேற்குறித்த மூன்றும் பரமார்க்கமாகிய ஞானயோகக் காட்சியில் உண்டாகும் யோகானுபவங்களின் உண்மைப் பொருள். அபர மார்க்கத்தில் சிலர் உப்பு வகைகளின் பேதமென்றும் ஓஷதி பேதமென்றும் பூதபேத மென்றும் சொல்லுவது உபாயமார்க்கம். அக அனுபவமே உண்மை. உபாய வகையாகிய அபரமார்க்கம் தேக பூஷணாதி காமிய சித்தியைத் தரும். உண்மை, நீக்கமற்ற சொரூப ஞானத்தைத் தருமென்றறிக. மேற்படி உபாயங்களை ஒருவாறு தெரிவிப்பதும் சைவ சமயங்கள் தவிர வேறு எவ்வித சமயங்களிலுமில்லை. அப்படி யிருப்பதாகச் சொல்லியிருப்பதும் ஏகதேசமென்றறியவும். மேற்படி ஏகதேசங்கள்... மந்திரங்களிலும் மேற்படி மூன்றும் வழங்குகின்றபடியால், ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தையடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க, மகத்துவங்க ளுண்டாகும். மேலும் மேற்படி உயர்வுடைய தங்கத்தில் விக்கிரகஞ் செய்து வைத்து ஓஷதியாதி லவணங்களை அதற்குச் சேர்த்து வைத்தால், விசேஷ சித்தி விளங்கும். இஃது திரிசியக் காட்சி. சுத்த சன்மார்க்கத்திற்கு உபாய வகைகளான அபரமார்க்கக் காட்சி கூடாது. பரமார்க்கமாகிய அக அனுபவமே உண்மை. மேற்படி மூன்றையும் இலக்ஷியமாகவே கொள்க. உபாய வகையான வாச்சிய திரிசியக் காட்சிகள் பரோபகாரம். (?) ஆதலால், சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனலென்பவை இரண்டு புறத்திலுமுள. உபாய வகையை நம்புதல் கூடாது; உண்மையை நம்புதல் வேண்டும். இஃது ரகசியம்.

ஆங்கிரச ஸ்ரீ புரட்டாசி மாதம் 5ஆம் நாள்.

வேதாகமச் சிறப்பு

இந்து வேதாகமங்களில் மாத்திரந்தான் ஏமசித்தி ஞானசித்தி முதலிய சித்திகளைச் சொல்லியிருக்கின்றது. மற்ற எந்தச் சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாத கல்வியையும் சொல்லவில்லை.ஒருவேளை அப்படி யிருக்கிறதாகக் காணப்படுமாகில், அது இந்து வேதாகமங்களில் சொல்லியிருப்பதின் ஏகதேசங்களென்பது உண்மை.

பொன்னும் மகத்துவமும்

ஒன்பது மாற்றுக்கு மேற்பட்ட பொன்னால் செய்த விக்கிரகங்கள் வைத்திருக்கும் தேவாலயங்களில் மகத்துவங்க ளுண்டாகும். மகத்துவத்தின் உயர்வு தாழ்வு பொன்னினது மாற்றுயர்வு தாழ்வாகவேயிருக்கும். மாற்றுயர்ந்த தங்கரேக்கில் பஞ்சாக்ஷரத்தை அடைத்து விக்கிரகத்தின் அடியில் வைக்க மகத்துவங்களுண்டாகும். இது ரகசியம்.

சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல்

சாகாத்தலை ஆகாசம், வேகாக்கால் வாயு, போகாப்புனல் அக்கினி. சாகாத்தலையென்பது ருத்திரபாகம், ருத்திர தத்துவம். வேகாக்கால் என்பது மயேசுரபாகம் மயேசுரதத்துவம். போகாப்புனல் என்பது சதாசிவபாகம், சதாசிவதத்துவம். இம்மூன்றும் சாகாக்கல்வியைத் தெரிவிக்கின்றது. ஆத்மதத்துவாதி சிவகரணம் 36-ம் நிர்மல குரு துரியாதீதம் 7-ம் சேர்ந்து ஆனநிலை 43-ல் ஒவ்வொரு நிலையிலும் இவைகளுண்டு. மேலும் சாகாத்தலை, வேகாக்கால், போகாப்புனல் என்கிற தத்துவங்கள் பிண்டத்தில் 4 இடத்திலும், அண்டத்தில் 4 இடத்திலும் ஆக 8 இடத்திலும் உண்டு. இவைகள் பிண்டருத்திரர்கள் அண்டருத்திரர்கள் முதலிய ருத்திர மயேசுர சதாசிவ பேதமென்றறிக. சாகாக்கல்வியைக் குறித்த இந்த நாற்பத்துமூன்று நிலைகளில் முதனிலையின் அனுபவத்தைப் பெற்றுக் கொண்டவன் பிரமன். அவனுக்கு ஆயுசு 1 கற்பம். இப்படி 43 நிலைகளும் ஏறியனுபவத்தைப் பெற்றவன் காலங்கடந்தவன், காலரகிதன். சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் என்பவற்றிற்குப் பொருள் சிலர் உப்பு வகைகளின் பேதமென்று சொல்லுவது பிசகு. அவைகளினுண்மைப் பொருளை மேற்குறித்தபடி யோகக் காட்சிகளில் அனுபவிக்கலாம். ஆகையால் இவைகள் யோக அனுபவங்களேயென்று அறியவேண்டும்.
[28/06, 5:52 p.m.] Apj Arul. Madurai: 130. மூவகைச் சித்தி

கர்மசித்தி, யோகசித்தி, ஞானசித்தி எனச் சித்திவகை மூன்றாம்.

கர்மசித்தியாவது:-

அணிமா - துரும்பை மேருவாக்குகிறது

மகிமா - மேருவைத் துரும்பாக்குகிறது

கரிமா - மேருவை ஒன்றுமில்லாமல் செய்கிறது

லகிமா - ஒன்றுமில்லாத இடத்தில் அனேகங்களாகச் செய்கிறது

பிராத்தி - வேண்டுவன அடைதல்

ஈசத்துவம் - குளிகை வல்லபத்தாலெங்கும் செல்லுகிறது

பிராகாமியம் - பரகாயப்பிரவேசம்

வசித்துவம் எழுவகைத் தோற்றமாகிய தேவமானுஷ்ய நரக மிருக பக்ஷி ஊர்வன விருக்ஷம் முதலியவற்றைத் தன்வசப்படுத்துகிறது.

தேகத்தைக் கல்பசித்தி செய்து கொள்ளுதல்; அபரமார்க்கி; சதாசிவாந்த அனுபவம்; சதாசிவகால வரை; பிரேதத்தை உயிர்ப்பித்தல்; சித்தி காலம் 3 3/4 நாழிகை முதல் 3 3/4 வருஷத்திற்குள்.

யோக சித்தி விவரம்:- 64 சித்திகளையும் தன் சுதந்தரத்தில் நடத்துகிறது; சங்கல்பகுளிகை; பிராணகல்பதேகி; பிரமகாலம்; பராபரமார்க்கி சித்திகாலம் 12 வருஷ முதல் 108 வருஷத்திற்குள்; புதைத்த தேகத்தை நாசமடையாமுன் உயிர்ப்பித்தல்.

ஞானசித்திகளின் விவரம் - அறுபத்து நாலாயிரம் சத்திகளையும் தன் சுதந்திரத்தில் நடத்துகிறது. 647 கோடியாகிய*, 688 கோடி (?) பேதமாகிய மகாசித்திகளையும் தன்னிஷ்டம்போல் நடத்துகிறது; காலம் கடந்தது; அடிநிலை முடிநிலை சுத்தகர்ம, சுத்தயோக, சுத்தஞான சித்திவல்லபங்களைத் தன் சுதந்தரத்தால் நடத்துகிறது.

* ஆடுறு சித்திகள் அறுபத்து நான்கெழு
கோடியும் விளங்கக் குலவுமெய்ப்பொருளே
- அருட்பெருஞ்ஜோதி அகவல் 911-2


131. சுத்தமாகி தேகங்கள்

சுத்தமாதி மூன்று தேக விவரம்: சுவர்ணதேகம், பிரணவதேகம், ஞானதேகம்.


சுவர்ண தேகம் பிரணவ தேகம் ஞானதேகம்


காரிய ரூபம் காரிய காரண ரூபம் காரண ரூபம்
பரதேகம் பரம்பர தேகம் எங்கும் பூரண
பர உணர்ச்சி பரம்பர உணர்ச்சி வியாபகம்
பர அறிவு பரம்பர அறிவு பராபர அறிவு
பரத்துவம் பரம்பர தத்துவம் பராபர தத்துவம்
பொன் வண்ணம் 16 முதல் 108 வரையில் அளவு கடந்த மாற்று
அபரஞ்சி மாற்று மாற்று, உரைபடாதது
12 வயது பருவம் 5 முதல் 8 வயது சப்த மயதரிசனம்
நரை, திரை, பிணி, தேகம் தோற்றும், உருவம் தோற்றியும்
மூப்பு, மலம், ஜலம், பிடிபடாது. தோற்றாமலும் இருக்கும்
வியர்வை, ஆகாரம்,
நித்திரை, தாகம்,
சாயை முதலியன
இல்லாமை
ரோம வளர்ச்சி
தாழ்ச்சி இல்லாமை
கர்மசித்தி சர்வ சித்தி சர்வ மகாசக்தி, சர்வ
கல்பதேகி பிராண கல்பதேகி சுதந்தரம்
அபரமார்க்கி பர அபர மார்க்கம் காலாதீதன்

132. சுவர்ண தேகிகள் ஆயுள்

சுவர்ண தேகிகள் ஆயுள்.

ஒரு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

இரண்டு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

மூன்று மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - பன்னிரண்டு லக்ஷத்து தொண்ணூற்று ஆறாயிரம்.

நான்கு மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஐந்து மாற்றுள்ள சுவர்ண தேகிகள் வயசு - நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதாயிரம்.

ஐந்து பூதங்களின் பேதம் பன்னிரண்டு லக்ஷத்து இரண்டாயிரத்து எண்ணூற்று ஐம்பது கோடியாய் இருக்கின்றது.

133. அணுபக்ஷ சம்புபக்ஷ அனுபவ விவரம்

ஐந்து மாற்றுள்ள சுவர்ணதேகி பிரமன் வயசு - நாலு லக்ஷத்து முப்பத்தீராயிரம்.

ஆறு மாற்றுள்ள சுவர்ணதேகி விண்டு வயசு - எட்டு லக்ஷத்து அறுபத்து நாலாயிரம்.

ஏழு மாற்றுள்ள சுவர்ணதேகி ருத்திரன் வயசு - பன்னிரண்டு லக்ஷத்துத் தொண்ணூற்று ஆறாயிரம்.

எட்டு மாற்றுள்ள சுவர்ணதேகி மயேசுரன் வயசு - பதினேழு லக்ஷத்து இருபத்தெட்டாயிரம்.

ஒன்பது மாற்றுள்ள சுவர்ணதேகி சதாசிவன் வயசு - நாற்பத்து மூன்று லக்ஷத்து இருபதினாயிரம்.

இவர் அணுபக்ஷத்தார்.

அணுபக்ஷத்தில் நாற்பத்து மூவாயிரத்து இருநூறு லக்ஷங்கோடி விந்து சத்தியின் அளவு; அளவிறந்த கோடி நாதத்தின் அளவு.

அணுபக்ஷத்தில் பரவிந்து சுத்தமாயையைக் கடந்தது; பரநாதம் சுத்தமகாமாயையைக் கடந்தது.

சம்பு பக்ஷத்தில் பிரமன், விண்டு, ருத்திரன், மயேசுரன், சதாசிவன், விந்து, நாதம், பரவிந்து, பரநாதம் என்பவற்றில்:

பிரமன், விண்டு - சுத்த மகா மாயையைக் கடந்த ஞான அனுபவ பேதம்.
ருத்திரன் - சித் அனுபவம்
மயேசுரன் - ஆனந்த அனுபவம்
சதாசிவன் - சத் அனுபவம்
விந்து - சிதானந்த அனுபவம்
நாதம் - சதானந்த அனுபவம்
பரவிந்து - சச்சிதானந்த அனுபவம்
பரநாதம் - சிவானுபவம். இவை ஒருவாறு.

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு