சனி, 24 ஜூன், 2017

மனிதன் அறிவை முடக்கியது யார்? யார் ?

[24/06, 5:40 p.m.] aanmaneyan kathirvelu: மனிதன் அறிவை முடக்கியது யார்? யார் ?

இறைவன் படைப்பில் எல்லோரும் நல்லவரே !

உயர்ந்த அறிவு படைத்தவர்களே மனிதர்கள் !

தாழ்ந்த நிலைக்குப் போய்.தாழ்ந்த நிலையில் வாழ்ந்து கொண்டு உள்ளார்கள்.

அதற்குக் காரணம் சமய.மதங்களை தோற்றுவித்த ஆன்மிகவாதிகள். அவர்கள் காட்டிய நெறிகள் அனைத்தும் பவ நெறிகள் அதாவது பொய் நெறிகள்..அதனால் செந்நெறி தெரியாமல் பிறந்நு பிறந்து இறந்து இறந்து வீண் போய் கொண்டு உள்ளார்கள்.

மனிதர்கள் குற்றவாளிகள் அல்ல !

மக்களுக்கு வழிக்காட்டியவர்கள்.ஆன்மீக. பொய்யான அருளாளர்கள் என்பவர்கள.தான் குற்றவாளிகள்.

பொய்யான சாதி.சமய.மதங்களால் படைக்கப்பட்ட புன்நெறியை  அழித்தால் மட்டுமே மனிதர்கள் மனிதனாக வாழ முடியும்.

வள்ளலார் தோற்றுவித்த புனிதம் உறும் சுத்த சன்மாரக்கத்தை கடைபிடித்து வாழ்ந்தால் மட்டுமே முன்னேற முடியும். வேறு மார்க்கங்கள் மனிதர்களை அழித்துக் கொண்டேதான் இருக்கும்.

பழைய ஆன்மீக குப்பைகள் தான் ஆன்மாவைத் திரைகளாக மறைத்துக் கொண்டு உள்ளன.
[24/06, 5:56 p.m.] aanmaneyan kathirvelu: வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

பன்னெறிச் சமயங்கள் மதங்கள்என் றிடும்ஓர்

பவநெறி இதுவரை பரவிய திதனால்

செந்நெறி247 அறிந்திலர் இறந்திறந் துலகோர்

செறிஇருள் அடைந்தனர் ஆதலின் இனிநீ

புன்னெறி தவிர்த்தொரு பொதுநெறி எனும்வான்

புத்தமு தருள்கின்ற சுத்தசன் மார்க்கத்

தன்னெறி செலுத்துக என்றஎன் அரசே

தனிநட ராஜஎன் சற்குரு மணியே.!

மேலே கண்ட பாடலில் தெளிவாக பதிவு செய்து உள்ளார்.

சாதி.சமயம்.மதம்...இதுதான் சுத்த சன்மார்க்கத்திற்கு முக்கிய தடைகள்.என்கிறார்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என்கிறார்

சாதி சமய சழக்கை ஒழித்தேன் அருட் ஜோதியைக் கண்டேன் என்கிறார்.

வள்ளலாரைப்போல் நாமும் சாதி சமயம் மத்த்தை ஓழித்தால் மட்டுமே .ஆன்மா பரிசுத்தமாகி அருள் சுரக்கும்.அருள் கிடைத்தால் மட்டுமே.மரணத்தை வெல்ல முடியும்.

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு