திங்கள், 3 ஜூலை, 2017

நடராஜர் எங்கு உள்ளார் ?.

நடராஜர் எங்கு உள்ளார் ?.

நடராஜர் என்னும் பெயருடைய இறைவன் தமிழ் நாட்டில் உள்ள சிதம்பரம் என்னும் கோவிலில் இல்லை ..

உலகில் உள்ள எல்லா உயிர்களிலும் உள் ஒளியாக (ஆன்மா) இருந்து இயங்கிக் கொண்டு இருக்கும் அருட்பெரும்ஜோதி என்னும் ஒளியே நடராஜர் என்பதாகும்.

நடமாடும் ஜீவர்கள் இடத்தில் நடராஜர் உள்ளார்...

அதுவே சிதம்பரத்தில் சிதம்பரம் ரகசியம் என்று பெயர் வைத்து உள்ளார்கள்.

அந்த தத்துவ உண்மையை ஐந்து மாத குழந்தையாக இருந்த போதே கண்டு களித்தவர் வள்ளலார்.

அந்த உண்மையை தன்னுடைய 48 ஆவது வயதிலே அருள் விளக்க மாலையில் பாடலாக பதிவு செய்கிறார்.

தாய்முதலோ ரொடுசிறிய பருவமதில்282தில்லைத்தலத்திடையே திரைதூக்கத் தரிசித்த போதுவேய்வகைமேல் காட்டாதே என்றனக்கே எல்லாம்வெளியாகக் காட்டியஎன் மெய்உறவாம் பொருளேகாய்வகைஇல் லாதுளத்தே கனிந்தநறுங் கனியேகனவிடத்தும் நனவிடத்தும் எனைப்பிரியாக் களிப்பேதூய்வகையோர் போற்றமணி மன்றில்நடம் புரியும்சோதிநடத் !தரசேஎன் சொல்லும்அணிந் தருளே.!

அந்த சிதம்பர ரகசியமாக வைத்துள்ள நடராஜர் என்னும் தத்துவ உண்மையை  வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தி்.உண்மைக்கடவுள் ""அருட்பெரும்ஜோதி"' என்று பெயர் வைத்துள்ளார்.

அந்த அருட்பெரும்ஜோதி ஆண்டவர் இருக்கும் இடம் எது? என்பதையும் வள்ளலார் நடராஜபதி என்னும் தலைப்பில் பாடலாக பதிவு செய்து உள்ளார்.

அருள்நிலை விளங்குசிற் றம்பலம்எ னுஞ்சிவசுகாதீத வெளிநடுவிலே

அண்டபகி ரண்டகோ டிகளும் சராசரம்அனைத்தும்அவை ஆக்கல்முதலாம்பொருள்நிலைச் சத்தரொடு சத்திகள் அனந்தமும்

பொற்பொடுவி ளங்கிஓங்கப்புறப்புறம் அகப்புறம் புறம்அகம் இவற்றின்மேல்பூரணா காரமாகித்தெருள்நிலைச்

சச்சிதா னந்தகிர ணாதிகள்சிறப்பமுதல் அந்தம்இன்றித்திகழ்கின்ற மெய்ஞ்ஞான சித்திஅனு பவநிலைதெளிந்திட வயங்குசுடரே

சுருள்நிலைக் குழலம்மை ஆனந்த வல்லிசிவசுந்தரிக் கினியதுணையேசுத்தசிவ சன்மார்க்க நிதியே அருட்பெருஞ்சோதிநட ராஜபதியே.!

என்னும் பாடல்வாயிலாக நடராஜபதி யார் ? எங்கு இருந்து செயல் பட்டுக் கொண்டு உள்ளது  என்பதை வெளிப் படுத்தி உள்ளார்.

எனவே சிதம்பரத்தில் நடராஜபதி என்னும் உண்மைக் கடவுள் இல்லை அங்கே சென்று வழிபடுவதால் எந்த பயனும் இல்லை.

அங்கே பணம் பறிக்கும் சுயநல வாதிகளின் கூடாரமாக உள்ளது.எனவே அங்கே பணத்தை செலவு செய்து விரயம் ஆக்காமல் ஏழைகளின் துன்பத்தை.துயரத்தை.வேதனையைப் போக்குங்கள் ்கடவுள் வேண்டிய வரத்தை வேண்டிய அளவு கொடுப்பார்.

சிதம்பரம் மட்டும் அல்ல எல்லா கோவில்களிலும் கடவுள் பெயரை வைத்து பணம் பறிக்கும். சுரண்டும் வேலைதான் நடந்து கொண்டு உள்ளன.

மக்களே உண்மைத் தெரியாமல் பணத்தை விரயம் செயாயாதீர்கள் என்கிறார்.உங்கள் பணத்தை உங்கள் நண்மைக்காக செலவு செய்யுங்கள்

அதற்கு ஒரே வழி ஏழைகளின் கண்ணீரை துடைப்பதுதான்.அதுதான் வழிபாடு.என்பதை ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்றும்.....உயிர் இரக்கமே கடவுள் வழிபாடும் என்றும் வள்ளலார் தெளிவாக மக்களுக்கு புரிய வைத்துள்ளார்....

மேலும் உறுதி கூறல் என்னும் தலைப்பில் ஒரு பாடல்!


வட்டிமேல் வட்டிகொள் மார்க்கத்தில் நின்றீர்வட்டியை வளர்க்கின்ற மார்க்கத்தை அறியீர்

பெட்டிமேல் பெட்டிவைத் தாள்கின்றீர் வயிற்றுப்பெட்டியை நிரப்பிக்கொண் டொட்டியுள் இருந்தீர்

பட்டினி கிடப்பாரைப் பார்க்கவும் நேரீர்பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர்

எட்டிபோல் வாழ்கின்றீர் கொட்டிபோல் கிளைத்தீர்எத்துணை கொள்கின்றீர் பித்துல கீரே.!.....என்கிறார் வள்ளலார்

எனவே ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை காண முடியும். ஏழைகளை மகிழ வைப்பதே ஜீவ காருண்யம்...

அறிவு உள்ள ஜீவர்களுக்கு ஜீவ காருண்யமே கடவுள் வழிபாடு என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும்..அதுதான் அறிவு நிலை..

எல்லா உயிர்களிலும் இறைவன் இருக்கிறார் என்பதை உணர்த்த வந்தவர்தான் வள்ளலார்.

இந்த உண்மையை உணர்ந்தவன் எவனோ அவனே  சாதி்.சமய.மதங்களில் இருந்து விடுபடுகிறான்

அவனே சுத்த சன்மார்க்கி என்கிறார் வள்ளலார்.

சாதியும் மதமும் சமயமும் பொய் என ஆதியில் உணர்த்திய அருட்பெரும்ஜோதி !

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே குவலயம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன்
ஈரோடு கதிர்வேல்
9865939896...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு