வெள்ளி, 16 ஜூன், 2017

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் !

கருணை உள்ள இடத்தில் கடவுள் வாழ்கிறார் !

உயிர் உள்ள ஜீவன்கள் !

கடவுள் தனியாக இல்லை.உயிர் உள்ள அனைத்து ஜீவன்கள் உள்ளும் க டவுள் இருக்கின்றார்.

வெளியில் கடவுளைத் தேடுகிறவர்கள் அறிவு இல்லாதவர்கள்.

எல்லா ஜீவன்களிலும் கடவுள் உள்ளார் எனபதை அறிந்து இயற்கையான அன்பு.தயவு.கருணை செலுத்துபவர்களே சிறந்த அறிவு உள்ள மனிதர்கள்.

உயிர்களின் மேல் கருணைக் காட்டாதவர்களைக் கடவுள் கண்டு கொள்வதே இல்லை.

கருணை இல்லாதவர்கள் .மனிதர்களாய் இருந்தும் மிருகங்களே.

கடவுளை வெளியில்்தேடாதே கிடைக்க மாட்டார்.

ஜீவன்கள் மேல் அன்பு காட்டு .கடவுள் உன்னைத் தேடி வருவார்.

வள்ளலார் பாடல்;-

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையேஅன்பெனும் குடில்புகும் அரசேஅன்பெனும் வலைக்குட் படுபரம் பொருளேஅன்பெனும் கரத்தமர் அமுதேஅன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலேஅன்பெனும் உயிர்ஒளிர் அறிவேஅன்பெனும் அணுவுள் ளமைந்தபே ரொளியேஅன்புரு வாம்பர சிவமே.!

மேலும் ஒரு பாடல்;-

எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர்அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம்எனநான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ. !

மேலே கண்ட இரண்டு பாடல்களையும் பல முறைப் படித்து பொருள் உணரந்து வாழ்க்கையை அமைத்து கொள்ளுங்கள்.

கடவுள் கருணையுடன் காப்பாற்றுவார்.என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்வாங்கு வாழலாம்.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு