வியாழன், 13 ஏப்ரல், 2017

மனதை அடக்குவது எப்படி ?

மனதை அடக்குவது எப்படி ?

நம்முடைய   உடம்பிலே மனம் எங்கே இருக்கின்றது என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். நம்முடைய உடம்பில்       நான்கு பிரிவுகள் உள்ளன அவை .இந்திரியங்கள் .கரணங்கள் .ஜீவன்.ஆன்மா என்பவையாகும்..இதில் மனம் கரணங்களில் உள்ளது.....அகம் என்பது ஆன்மா இருக்கும் இடம் .அவற்றை சுற்றி  நான்கு  வட்டம்  உள்ளன ..


அகம் என்னும் வட்டத்தில் ஆன்மா இயங்கிக்  கொண்டு உள்ளது ...அகப்புறம் என்னும் வட்டத்தில் ஜீவன் என்னும் உயிர் இயங்கிக் கொண்டு உள்ளன. .
புறம் என்னும் வட்டத்தில் கரணங்கள் என்னும் மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்,உள்ளம் என்னும் கருவிகள் இயங்கிக் கொண்டு உள்ளன. புறப்புறம் என்னும் வட்டத்தில் சூட்சம இந்திரியங்கள் இயங்கிக்
கொண்டு உள்ளன.இவைகள் யாவும்    உருவம் இல்லாத ஒளித்தன்மை உடையது .அந்த ஒளித்தன்மை ஒவ்வொன்றும் ,வெவ்வேறு  ஒளிததன்மை  கொண்டதாகும் .

ஆன்மா அக்கினி .ஜீவன் சூரியன் ,கரணங்கள் சந்திரன் ,  இந்திரியங்கள்
நட்சத்திரம் போன்ற ஒளிகளாகும். இவைகள் யாவும் அருட்பெருஞ்ஜோதி     ஆண்டவரின் ஆணைப்படி செயல்பட்டுக் கொண்டு  உள்ளன.

மனம்,புத்தி ,சித்தம் ,அகங்காரம்,உள்ளம்,     என்னும்   ஒளிக்கருவிகள் கரணங்களில் உள்ளன .இவைகள்  யாவும் உருவங்களான  இந்திரியங்களை வேலை வாங்கும் கருவிகளாகும் .கரணங்களின் ஆணைப்படிதான்    இந்திரியங்கள் வேலை செய்யும் .

மனம் .புத்தி,சித்தம்,அகங்காரம் ,உள்ளம்    என்னும் புறக்கருவிகள்     இந்திரியங்களின் துணைக் கொண்டு இந்த பஞ்ச பூத உலகப் பற்றில் ஆசைக் கொண்டு இயங்கும் அதனால் தான் துன்பம்,துயரம்,அச்சம், பயம் பின் மரணம் வந்து விடுகின்றது,...

மனதை அடக்க முடியாது மாற்ற முடியும் !

மனதை அடக்க முடியாது .மனதை மாற்ற முடியும்.மாற்ற வேண்டும் என்கின்றார் வள்ளலார் .

மனதை தவம்,யோகம்,தியானம்,புற உருவ வழிபாடுகள்   முதலியவற்றால்    மனதை அடக்க முடியாது.......

மனதை வள்ளலார் அடக்கிய பாடல் !


என்ற பாடல் வாயிலாக மனதை அடக்கும் விதத்தை சொல்லுகின்றார் .அடுத்து மனதை எங்கு தொடர்பு கொள்ள வேண்டும் என்பதையும் நமக்கு சொல்லுகின்றார் .



சிற்சபை  என்னும் அகம் என்னும் ஆன்மா இருக்கும் இடத்தில் இடைவிடாது தொடர்பு கொண்டால்  மட்டுமே மனதை அடக்க முடியும்.மாற்ற முடியும்.    வேறு வழிகளால்   மனதை மாற்ற முடியாது .அடக்க முடியாது  என்பதை தெளிவாக மேலே கண்ட பாடல்களின் வாயிலாக விளக்கம் தந்து உள்ளார் .

இந்த உண்மையை அறிந்து கொள்ள அறிவு வேண்டும் என்கின்றார் .   அறிவு   விளக்கம் பெற ,தெளிவு பெற ,ஜீவ காருண்யம் என்றும் ,ஜீவ காருண்ய     ஒழுக்கம் வேண்டும் என்கின்றார்.......

ஜீவ காருண்யம் விளங்கும் போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும் .அதனால் உபகார சக்தி விளங்கும் .அந்த உபகார சக்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும்  என்கின்றார்  வள்ளலார் .....

மேலும் அறிவு விளங்கிய ஜீவர்களுக்கு எல்லாம் ஜீவ காருண்யமே கடவுள்     வழிபாடு என்கின்றார் .    அறிவு விளங்கினால் மட்டுமே உண்மை எது ? பொய் என்பது ? என்பதை உணர்ந்து கொள்ள முடியும், .தெரிந்து கொள்ள முடியும்...

இந்த உண்மையை அறிந்து கொள்ளாமல் மனம் போனபடி மனதை அடக்க முடியாது .


தொடரும் ;----

1 கருத்துகள்:

14 ஏப்ரல், 2017 அன்று PM 7:44 க்கு, Blogger raja ganesh கூறியது…

அருமையான (ஆழ்ந்த) கருத்துக்கள்,நன்றி

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு