புதன், 12 ஏப்ரல், 2017

பசி என்பது ஓர் உபகாரக் கருவி !

பசி என்பது ஓர் உபகாரக் கருவி !

பசி என்பது இறைவனால் கொடுக்கப்பட்ட ஓர் உபகாரக் கருவி என்கிறார் வள்ளலார்.

பசி என்பது இல்லை என்றால் .ஒருவரை ஒருவர் நேசிக்க மாட்டார்கள்.உறவு என்பது இல்லாமல் போய் விடும்.மனித நேயம்.ஆன்ம நேயம் இல்லாமல் போய் விடும்.

மனித நேயம் ஆன்ம நேயம் இல்லாவிட்டால். இறைவன் அருள் கிடைக்காது.

இறைவனால் அனுப்பபட்ட ஆன்மாக்களுக்கு.ஜீவன் என்னும் உயிர் கொடுக்கப் படுகின்றது. .உயிர்களுக்கு உபகாரகருவி என்னும் பசியை இறைவன் கொடுத்துள்ளார்.

எனவேதான் உயிர்களுக்கு உண்டாகும் பசியைப் போக்க வேண்டும் என்றார் வள்ளலார். அதற்கு ஜீவ காருண்யம் என பெயர் வைத்துள்ளார்.

இறைவன் அருளைப் பெற்று மரணத்தை வெல்ல வேண்டும் என்றால் . இறைவன் மேல் அன்பு செலுத்த வேண்டும்.அன்பை பெறுவதற்கு உண்மையான அறிவு வேண்டும்.அன்பும் அறிவும் ஓங்கினால் தான் கருணை என்னும் அருள் சுரக்கும்.அருளை மறைத்துக் கொண்டு இருப்பது அறியாமை.அஞ்ஞானம் என்னும் ஏழு திரைகள்.

திரைகளை அகற்ற .அன்பு.இரக்கம் அறிவு .அருள் வேண்டும். அவற்றை பெறுவதற்கு அவசியம் ஜீவகாருண்யம் செய்ய வேண்டும். என்கிறார் வள்ளலார்.

அன்பும் அறிவும் விளங்கும்!

அதனால் சீவகாருணிய ஒழுக்கமே சன்மார்க்கம் என்றறிய வேண்டும்.

சீவகாருணியம் விளங்கும்போது அறிவும் அன்பும் உடனாக விளங்கும்; அதனால் உபகாரசத்தி விளங்கும்; அந்த உபகாரசத்தியால் எல்லா நன்மைகளும் தோன்றும். சீவகாருணியம் மறையும்போது அறிவும் அன்பும் உடனாக நின்று மறையும்; அதனால் உபகாரசத்தி மறையும்; உபகாரசத்தி மறையவே எல்லாத்தீமைகளுந் தோன்றும்.

ஆகலில் புண்ணியமென்பது சீவகாருணிய மொன்றே என்றும், பாவமென்பது சீவகாருணிய மில்லாமை யொன்றே என்றும் அறிய வேண்டும்.

அன்றி, சீவகாருணிய ஒழுக்கத்தினால் வரும் விளக்கமே கடவுள் விளக்கமென்றும், அதனால் வரும் இன்பமே கடவுள் இன்பமென்றும், இவ்விளக்கத்தையும் இன்பத்தையும் பலகாலறிந்து அடைந்து அனுபவித்து நிறைவு பெற்ற சத்திய ஞானிகளே மேற்குறித்த பேரின்பலாபத்தைப் பெற்ற முத்தர்களென்றும், அவர்களே கடவுளை அறிவாலறிந்து கடவுள்மயமானவர்க ளென்றும் சத்தியமாக அறியவேண்டும். என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் பாடல் !

எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே இலகிய இறைவனே உலகில்பட்டினி உற்றோர் பசித்தனர் களையால் பரதவிக் கின்றனர் என்றேஒட்டிய பிறரால் கேட்டபோ தெல்லாம் உளம்பகீர் எனநடுக் குற்றேன்இட்டஇவ் வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவ தியல்பே.!

வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம் வாடினேன் பசியினால் இளைத்தேவீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்நீடிய பிணியால் வருந்துகின் றோர்என் நேர்உறக் கண்டுளந் துடித்தேன்ஈடின்மா222 னிகளாய் ஏழைக ளாய்நெஞ் சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்.!

அடுத்து....

கருணையே வடிவாய்ப் பிறர்களுக் கடுத்த கடுந்துயர் அச்சமா திகளைத்தருணநின் அருளால் தவிர்த்தவர்க் கின்பம் தரவும்வன் புலைகொலை இரண்டும்ஒருவிய நெறியில் உலகெலாம் நடக்க உஞற்றவும் அம்பலந் தனிலேமருவிய புகழை வழுத்தவும் நின்னை வாழ்த்தவும் இச்சைகாண்எந்தாய்.!

எனவே உயிர் இரக்கம் பற்றி ஆயிரக் கணக்கானப் பாடல்களை பாடி பதிவு செய்து உள்ளார்.

அன்பு.தயவு.அருள் ஆகிய மூன்றும் உள் அடங்கியது கருணை என்பதாகும்.

 எனவே  என்னை மேலே ஏற்றி விட்டது கருணை தான் என்கிறார்.

எனவே இறைவனால் கொடுக்கப்பட்ட பசி என்னும் உபகாரக் கருவியைக் கொண்டுதான்.அன்பு.தயவு.இரக்கம்.அறிவு என்னும் அருளைப் பெற்று.கருணையே வடிவமாகி.ஒளி உடம்பு பெற்று மரணத்தை வென்று. இறைவனுடன் கலந்து.பேரின்ப லாபத்தை பெற முடியும்.

வேறு எந்த குறுக்கு வழியாலும் மரணத்தை வெல்ல முடியாது.

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு