புதன், 19 ஏப்ரல், 2017

தமிழ் நாட்டு மக்களின் தவிப்பு !

தமிழ் நாட்டு மக்களின் தவிப்பு !
தமிழ் நாட்டு மக்களுக்கு .தண்ணீர் இல்லை,விவசாயம் இல்லை.உணவுக்கு வழி இல்லை,அன்றாடம் வெய்யிலின் தாக்கத்திற்கு குறைவு இல்லை.வெளியில் சென்று வேலை செய்ய வாய்ப்பு இல்லை, குடிக்க கூட தண்ணீர் இல்லாமல் தினம் தினம் மக்கள் அளவில்லா துயரத்திற்கும் துன்பத்திற்கும் ஆளாய் இருக்கின்றார்கள் .
விவசாயிகளும்,கீழ் தட்டு மக்களும் மாண்டு கொண்டு உள்ளார்கள்.
நம்முடைய ஆட்சியாளர்கள் மக்களின் துயரத்தை துடைக்க கவனம் செலுத்தாமல் .பதிவிக்காக,ஊழல் செய்வதற்காக ,மக்கள் பணத்தை சுரண்டுவதற்காக போராடிக் கொண்டு இருக்கின்றார்கள்,
இவர்களுக்கு மக்களின் மீது எந்த கவலையில் இல்லை.
இவற்றை மக்கள் கவனமாக கவனித்துக் கொண்டு உள்ளார்கள்.
மக்களால் தேர்ந்து எடுக்கும் ஆட்சி எப்படி உள்ளது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.
இனியாவது மக்கள், மக்கள் நலனுக்காக பாடுபடும் ஆட்சியை தேர்வு செய்ய வேண்டியது மக்களின் கையில் தான் உள்ளது.
சின்ன சின்ன இலவசத்திற்காக ஒருநாள் ஆசைக்காக .ஒருநாள் வருமானத்திற்காக பணம் பெற்றுக் கொண்டு ஓட்டுப்போடும் நிலை மாறினால் மட்டுமே நல்லாட்சி நாட்டிற்கு கிடைக்கும்.
மக்கள் திருந்தினால் மட்டுமே ,அரசியல்வாதிகளும்,ஆட்சியாளர்களும் திருந்துவார்கள் .
எல்லா குற்றங்களுக்கும் காரண காரியமாய் உள்ளவர்கள் மக்கள்தான் ...நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும் குற்றவாளிகளை தேர்வு செய்துவிடக் கூடாது என்பதில் கவனமாக் இருக்க வேண்டும்.
இனிமேலாவது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும்.நம் வாழ்க்கை நம் கையில் தான் உள்ளன், ..அரசியல் வாதிகளிடம் கை ஏந்தி ஏமாற்றம் அடையாதீர்கள்.
நீங்கள் இல்லையேல் அவர்கள் இல்லை என்பதை தெரிந்து உணர்ந்து புரிந்து செயல்படுங்கள்.
மண் உலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும்
வருத்தத்தை ஒரு சிறிதெனினும்
கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும்
கணமும் நான் சகித்திட மாட்டேன்
எண்ணுறும் எனக்கே நின் அருள் வலத்தால்
இசைத்த போது இசைத்த போது எல்லாம்
நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல வரந்தான்
நல்குதல் எனக்கு இச்சை காண் எந்தாய் !
வள்ளலார் ........இதுவே எங்களின் எண்ணம் .
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு