திங்கள், 17 ஏப்ரல், 2017

தினகரன் அ இ அ தி மு க !

தினகரன் அ இ அ தி மு க !
தீவிரவாதம் ,பயங்கரவாதம்,ஊழல் வாதம்,நக்சல் பார்ட்டிகள் கொலை,கொள்ளை,கற்பழிப்பு ,போன்ற கொடூரமான செயல்களில ஈடுபட்டுக் கொண்டு இருக்கும் ஒரு அதிபயங்கர கூட்டம், தமிழ் நாட்டையே அதிர வைத்துள்ளது .
அரசியலையே பணம் கொடுத்து வாங்கும் கூட்டம், அரசாங்கத்தையே பணம் கொடுத்து வாங்கும்
கூட்டம்.தேர்தல் கமிஷ்னையே விலைக்கு வாங்கும் கூட்டம்.மக்களையே பணம் கொடுத்து வாங்கும் கூட்டம் தமிழ் நாட்டையே கலங்க வைத்து உள்ளது.
அகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைவியாக பொது செயலாளராக இருந்த, மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா அவர்கள் தான் முக்கிய தலைவியாக இருந்து .இந்த தீவிர வாதிகளை வளர்த்து விட்டு,கொள்ளைக் கூட்டத்தை,ஊழல் கூட்டத்தை தன்கட்டுப்பாட்டில் வைத்து கொண்டு,தமிழ் நாட்டையே கொள்ளை அடித்து ஆட்சியை நடத்திக் கொண்டு இருந்தார் .
அவர் சட்டத்தின் முன் தண்டிக்க பட்டார் .அவர் மரணம் கேள்விக் குறியாகவே உள்ளது .
ஒரு நாட்டின் முதல்வர் இயற்கை மரணமா ?செயற்கை மரணமா ? என்பது கூட அறியாமல்.மக்களை தவித்துக் கொண்டு உள்ளார்கள் .இது இந்திய நாடா ?தமிழ் நாடா என்பதே தெரியாத நிலையில் உள்ளன.
அவரால் வளர்த்துவிடப்படட ,கொலைக் கார கூட்டம்,கொள்ளைக்கார கூட்டமே அவரைக் கொன்று இருக்கலாம் என்ற செய்தி மக்கள் மத்தியில் உலாவிக் கொண்டு உள்ளது .
இந்த நிலையில் அடுத்தக்கட்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளராக,பண பலத்தைக் கொண்டு கொள்ளக்காரக் கூட்டத்தின் தலைவியாக,பொது செயலாளராக ''சசிகலா'' தேர்ந்து எடுக்கப்பட்டார் .
அவரும் அவரின் முன்னாள் தலைவியாக இருந்த ஜெயலலிதாவும்,சேர்ந்து கொள்ளை அடித்ததின் காரணமாக சசிகலவும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து உள்ளார்கள். .
அடுத்து அந்த கொள்ளைக் கூட்டத்தின் துணைப் பொது செயலாளராக தினகரன் வலுக்கட்டாயமாக பொறுப்புக்கு வந்து விட்டார் .அவர் கொள்ளைக் கூட்டத்தின் அனுமதிகளைப் பெறாமல் தன் விருப்பம் போல் செயல்பட ஆரம்பித்து விட்டார் .
அவற்றை பொறுக்க முடியாத ,ஏற்றுக் கொள்ள முடியாத அதேக் கொள்ளைக் கூட்டம் அவரைக் மத்திய அரசுக்கு காட்டிக் கொடுத்து விட்டது .
இப்போது மத்திய அரசாங்கம் தகுந்த நடவடிக்கை எடுத்து அதிமுக கொள்ளைக் கூட்டத்தை கலைத்து விடவேண்டும் என்பது மக்களின் விருப்பமாக உள்ளது..மத்திய அரசாங்கம் இதை செய்ய வேண்டியது அவசரம் அவசியமாகும்..
தமிழ் நாட்டையும்,தமிழ் மக்களையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் தான் உள்ளது.தார்மீக பொறுப்பு ஏற்று வஞ்சகம் செய்யாமல் தமிழ் நாட்டையும் தமிழ் மக்களையும் காப்பாற்ற வேணுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்.
இனிமேல்தமிழ் நாட்டை ஆட்சி செய்யும் அரசியல் வாதிகளுக்கு இது ஒரு பாடமாக இருக்க வேண்டும்.
வள்ளலார் பாடல் !
கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க--தெருள் நயந்த
நல்லோர் நினைத்த நலம் பெறுக நன்று நினைத்து
எல்லோரும் வாழ்க இசைந்து !
அச்சம் தவிர்த்தே அருளில் செலுத்துகின்ற
விச்சை அரசே விளங்கிடுக --நச்சரவம்
ஆதிக் கொடிய உயிர் அத்தனையும் போய் ஒழிக
நீதிக் கொடி விளங்க நீணடு !
நடுநிலை இல்லாக் கூட்டத்தைக் கருணை
நண்ணிடா அரையரை நாளும்
கெடு நிலை நினைக்கும் சிற்று அதிகாரக்
கேடரைப் பொய்யலால் கிளத்தாப்
படுநிலை அவரைப் பார்த்த போது எல்லாம்
பயந்தனன் சுத்த சன்மார்க்கம்
விடுநிலை உலக நடை எலாங் கண்டே
வெருவினேன் வெருவினேன் எந்தாய் !
என்று வள்ளலார் பதிவு செய்கின்றார் .
வள்ளலார் பிறந்த வாழ்ந்த இந்த புண்ணிய பூமியைக் காப்பாற்ற வேண்டியது ஒவ்வொருவரின் விருப்பமும் கடமையும் ஆகும்.
அன்புடன் ஆன்மநேயன்.ஈரோடு கதிர்வேல்...

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு