செவ்வாய், 18 ஏப்ரல், 2017

வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் ! பாகம் 1.

வள்ளலாரின் அருள் அறிவு விஞ்ஞானம் !

விஞ்ஞானம் என்றால் தகுந்த ஆதாரத்துடன்,உலக இயற்கை  உண்மையை வெளிப்படுத்துவது அறிவியல் சார்ந்த செயல்களாகும்.

அறிவியல் .விஞ்ஞானம் என்பது அறிவைக் கொண்டு கண்டு பிடிப்பதாகும் .அறிவைக் கொண்டு கண்டு பிடிப்பது முழுவதும் உண்மையாகி விடுமா ? என்றால் உண்மையாகாது ....அறிவு எந்த அளவிற்கு வேலை செய்கிறதோ ,அந்த அளவிற்குத்தான் உண்மை வெளிப்படும்.அதற்குமேல் உள்ள  இயற்கை உண்மை,இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம்,நிறைந்து இருக்கின்றது....அவையாவும் அறிவுக்கு அப்பாற்பட்டது.அவற்றை அருள் அறிவைக் கொண்டுதான் அறியமுடியும்.

இன்னும் அந்த உண்மைகளை எந்த அறிவியல் ஆராய்ச்சி யாளர்களும் ,ஆன்மீக அருளாளர்களும் கண்டு பிடிக்க முடியவில்லை.

அருள் அறிவு முழுமைப் பெற்றால் மட்டுமே உலக ரகசியங்களையும் .இயற்கை உண்மைகளையும்,இயற்கை விளக்கத்தையும்,இயற்கை இன்பத்தையும்  அறிந்து கொள்ள முடியும்.அதற்கு ''அருள் அறிவு'' என்பதாகும். அறிவு என்பது வேறு ! ...அருள் அறிவு என்பது வேறு ! அதற்குமேல் கடவுள் அறிவு என்பது என்பது உண்டு,அதுதான்  இறுதியான அறிவு .

அறிவைவிட அருள் அறிவு உயர்ந்தது .அருள் அறிவை விட கடவுள் அறிவு உயர்ந்தது.

அறிவு என்றால் என்ன ? அருள் அறிவு என்றால் என்ன ? கடவுள் அறிவு என்றால் என்ன ?

வள்ளலார் விளக்குகின்றார் !

அயர்வறு பேரறிவாகி அவ்வறிவுக்கு அறிவாய்
அறிவறிவு உள் அறிவாய் ஆங்கு அதனுக்குள்ளோர்அறிவாய்
மயர்வறு ஓர் இயற்க்கை உண்மைத் தனி அறிவாய்ச் செயற்கை
மன்னு அறிவு அனைத்தினுக்கும் வயங்கிய தாரகமாய்த்
துயரறு தாரக முதலாய் அம்முதற்கோர் முதலாய்த்
துரிய நிலை கடந்து அதன்மேல் சுத்த சிவ நிலையாய்
உயர்வறு சிற்றம்பலத்தே எல்லாம் தாமாகி
ஓங்குகின்ற தனிக்கடவுள் ஒருவர் உண்டே கண்டீர் .
/

மனிதன் உயர்ந்த அறிவு பெற்றவன்..அதற்குமேல் உயர்ந்த அறிவு ஒன்று  இருக்கின்றது என்பதை அறியாமலே மாண்டு போய் விடுகின்றான்.அதனால் அவனால் இயற்கை உண்மை .இயற்கை விளக்கம்,இயற்கை இன்பம் என்ன ? என்பதை அறியாமல்,அருள் அறிவு விளக்கம் இல்லாமல்  சென்று ,மாண்டு விடுகின்றான்....

ஆன்மீகம் என்றால் அருளைப் பெறுவது என்பதாகும்.அருளை பெறுவது  எப்படி என்று அவன் சிந்திக்கும் போது ,இறைவன் ஒருவன் இருக்கின்றான்.இறைவனைத் தொடர்பு கொண்டால் மட்டுமே அருளைப் பெற முடியும்.என்ற நிலைக்கு வந்து .உலகப் பற்றுகளை துறந்து .துறவிகளாக சந்நியாசிகளாய் வேடம் புண்டு .காடு,  மலை ,குகை, போன்ற இடங்களில் சென்று தவம்,தியானம்,யோகம்,முதலிய பயிற்ச்சிகளில் அதிக ஈடுபாடு கொண்டு இறைவனைத் தேடிக் கொண்டும்  வேண்டிக் கொண்டும் இருந்தார்கள் .

அவர்களுடைய  பெரு முயற்ச்சியால் தன்னுடைய உடம்பில் உள்ள  சில தத்துவங்களை அறிய முடிந்தது.அதற்குள் அவனுக்கு மூச்சு நின்று விட்டது,மூச்சு அடங்கி விடுகின்றது .மேலும்  மரணம் வந்து விடுகின்றது.. சில பேர் அப்படியே உட்கார்ந்தபடியே சமாதியாகி ஆகி விட்டார்கள் .அவர்களை பத்தர்கள் என்றும்,  சித்தர்கள் என்றும்,  முத்தர்கள் என்றும்  முத்தி அடைந்து விட்டார்கள் என்றும்.அருளைப் பெற்றவர்கள் என்றும் மக்கள் நம்பிக் கொண்டு  அவர்கள் சமாதி ஆன இடங்களில் பெரிய பெரிய ஆலயங்களை எழுப்பி, இறைவன் இருப்பதாக எண்ணி வழிபட ஆரம்பித்து விட்டார்கள்.

மேலும் அவர்கள் சொல்லிய சாதாரண ஒழுக்க நெறிகளைக் கொண்டு .மதத் தலைவர்களாகவும்,சமயத் தலைவர்களாகவும் .வைத்து போற்ற ஆரம்பித்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் கடவுளா >இறைவனா ? பிதாவா ? அல்லாவா ? என்றால் இல்லவே இல்லை ...அவர்கள் இயற்கை உண்மையான எல்லாம் வல்ல இறைவனுக்கு  ஒப்பானவர்கள் இல்லை .மிகவும் தாழ்ந்த தரத்தில் உள்ளவர்கள் என்பதை வள்ளலார் விளக்குகின்றார் .

அவர்களைப் பற்றி வள்ளலார் சொல்லும் பாடல் !

அறங்குலவு தோழி இங்கே நீ யுரைத்தை வார்த்தை
அறிவு அறியார் வார்த்தை எதனால் எனில் இம்மொழி கேள்
உறங்குவதும் விழிப்பதும் பின் உண்ணுவதும் இறத்தல்
உறுவதுடன் பிறத்தல் பல பெறுவதுமாய் உழலும்
மறங்  குலவு அணுக்கள் பலர் செய்த விரதத்தால்
மதத் தலைமை பதத்தலைமை வாய்ந்தனர் அங்கு அவர்பால்
இறங்கிலில் என் பேசுதலால் என் பயனோ நடஞ் செய்
இறைவரடிப் புகழ் பேசி இருக்கின்றேன் யானே !

மேலும் ;--

அளவிறந்த நெடுங்காலம் சித்தர் யோகர்
அறிஞர் மலர் அயன் முதலோர் அனந்த வேதம்
களவிறந்தும் கரணாதி இறந்தும் செய்யும்
கடும் தவத்தும் காண்பரிதாம் கடவுளாகி
உளவிறந்த எம்போல்வார் உள்ளத் துள்ளே
ஊருகின்ற தெள்ளமுத ஊரலாகிப்
பிளவிறந்த பிண்டம் அண்டம் முழுதும் தானாய்ப்
பிறங்குகின்ற பெருங்கருணைப் பெரிய தேவே !

என்ற பாடல்களின் வாயிலாக தெரியப்படுத்துகின்றார் .

வள்ளலார் கண்டு பிடித்த அருள் அறிவு விஞ்ஞானம் !

அணுக்களால் உண்டான மனித உடம்பை அழிக்காமல் அருளால் பிரிக்க முடியும் என்ற அருள் அறிவு விஞ்ஞானத்தைக் கண்டு பிடித்தவர் தான் வள்ளலார்,..அதற்க்கு ''சாகாக்கல்வி'' என்று பெயர் வைத்துள்ளார்.அதற்கு மரணம் இல்லாப் பெருவாழ்வு என்பதாகும். .இதுவரையில் எந்த அறிவியலும் ,விஞ்ஞானமும்,ஆன்மீகமும்  கண்டுபிடிக்க முடியாத செயலை, வள்ளலார் கண்டுபிடித்து வாழ்ந்து காட்டி உள்ளார் .வாழ்ந்தும் கொண்டும் உள்ளார் .

இது எப்படி சாத்தியம் ஆகுமா ? மனிதர்கள் மரணம் இல்லாமல் வாழ முடியுமா ? அப்படி வாழ்ந்தால் இந்த உலகம் என்ன ஆவது ? என்ற கேள்விகள் மக்களிடையே எழுந்து கொண்டு உள்ளது . ஏன் என்றால் பிறந்தவர்கள் எல்லோரும் இறந்து கொண்டே உள்ளார்கள் .மீண்டும் பிறந்து கொண்டே உள்ளார்கள் ...பிறப்பதும் தெரியும்.இறப்பதும் தெரியும்.மீண்டும் பிறப்பு எடுப்பது என்பது யாருக்கும் தெரியாது.என்ன பிறப்பு கொடுக்கப்படும் என்பதும் எவருக்கும் தெரியாது....

ஏன் என்றால் இதுவரையில் சாதாரண உலக  அறிவைக் கொண்டு  ''பொருள்'' ஈட்டும் கல்வியைத்தான் கற்றுத் தந்து உள்ளார்கள் .கற்றுக் கொண்டும் வருகின்றோம்.அதே அறிவைக் கொண்டு ''அருள்'' ஈட்டும் கல்வியை எந்த ஆன்மீக அருளாளர்களும்,அறிவியல் விஞ்ஞானிகளும் கற்றுத் தரவில்லை.ஏன் என்றால் அவர்களுக்கு அருள் ஈட்டும் கல்வியைப் பற்றி தெரியாது.. .

திருவள்ளுவர் வந்து சில உண்மைகளைத் தெரிவிக்கின்றார் .

அருள் இல்லாற்கு அவ்வுலகம் இல்லை --பொருள்
இல்லாற்கு இவ்வுலகம் இல்லை .....
என்று சொல்லிவிட்டு சென்று விட்டார் .அவரும் அருள்பெறும் வழியைக் காட்டவில்லை அதற்காக ஒரு அமைப்பையும் உருவாக்கவில்லை .வள்ளலார் வந்துதான் அருளைப் பெறுவதற்காகவே ஒரு மார்க்கத்தை தோற்று விக்கின்றார் .அந்த மார்க்கத்தின் வழியாகச் சென்றால் தான் அருளைப் பெற முடியும் என்கின்றார்.

சாகாக் கல்வி !

இந்த உண்மையை தெரிந்து கொண்டால் மட்டுமே பிறப்பு இறப்பு இல்லாமல் வாழும் வழியைத் தெரிந்து கொள்ள முடியும்.அந்த வழியைக் காட்டும் கல்விதான் 'சாகாக் கல்வி'' என்பதாகும்.அந்த கல்வியைக் கற்றுத் தரும் மார்க்கம் தான் ''சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் '' என்ற புதிய. புனித.சுத்த சன்மார்க்க தனிநெறி, ...திருநெறி,..சுத்த சிவநெறி,..பெருநெறி, ..இயற்கை   உண்மை நெறி என்றெல்லாம் சொல்லப்படுகின்றது. இயற்கை உண்மையை அறிந்து கொள்வதே அருள் அறிவு விஞ்ஞானம் என்பதாகும்.இவை எந்த பாட நூல்களிலும் கிடையாது.பலகலைக் கழகங்களிலும் கிடையாது..

ஆன்ம அறிவைக் கொண்டுதான் கற்றுக் கொள்ள வேண்டும்.அதற்கு சிற்றம்பலக் கல்வி என்றும் .சாகாக் கல்வி என்றும் பெயராகும்.

அந்தக் கலவியை எப்படிக் கற்றேன் என்பதை வள்ளலார் விளக்குகின்றார் !

கற்றேன் சிற்றம்பலக் கல்வியைக் கற்றுக் கருணை நெறி
உற்றேன் எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம்
பெற்றேன் உயர்நிலை பெற்றேன் உலகில் பிறநிலையைப்
பற்றேன் சிவானந்தப் பற்றே என் பற்று எனப் பற்றினனே !

இப்படி பல பாடல்கள் வாயிலாக மக்களுக்குத் தெரியப் படுத்துகின்றார்.
இந்த சாகாக் கல்வி கற்பதற்கு சுத்த சன்மார்க்க சாகாக்கல்வி என்றும் அவற்றை கற்பதற்கு சில இயற்கை சட்டதிட்டங்களை வகுத்து தந்து உள்ளார்.

இந்த சுத்த சன்மார்க்க நெறிக்கு என்றே .உண்மை ஒழுக்கம் என்றும்,உண்மையான கொள்கைகள் என்றும் பெயர் வைத்து உள்ளார் வள்ளலார்.அவற்றைக் கடைபிடிப்பவர்கள் மட்டுமே சுத்த சன்மார்க்கத்தில் சேர்ந்து சாகாக்கல்வி கற்கும் தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

சுத்த சன்மார்க்க கொள்கைகள் ;---

தொடரும்.;--



0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு