வியாழன், 22 செப்டம்பர், 2016

ஆன்மாவும் ஏழு திரைகளும்.!

ஆன்மாவும் ஏழு திரைகளும்.!
வள்ளலார் சொல்லும் சாகாக் கல்வி !

இந்தப் பவுதிக உடம்பில் இருக்கின்ற நீ யார் எனில் ? நான் ஆன்மா ,சிறிய அணு வடிவனன் .மேபடி அணு கோடி சூரியப் பிரகாசம் உடையது.'இருப்பிடம் லலாட ஸ்தானம்''  அதன் வண்ணம் கால் பங்கு பொன்மை ,முக்கால் பங்கு வெண்மை கலந்த வண்ணம் ,(அதாவது கோழி முட்டைப் போன்றது) இப்படிப்பட்ட ஆன்மப் பிரகாசத்தை மறைக்க மாயா திரைகள் ஆகிய ஏழு திரைகள் உண்டு ...

அவைகள் யாவன ;--

கறுப்புத் திரை ;---- ---மாயா சத்தி,அசுத்த மாயா சத்தி !.
நீலத்திரை ;---------- --சுத்தா சுத்த மாயா சத்தி !
பச்சைத்திரை ;--------கிரியா சத்தி !.
சிவப்புத்திரை ;--------பராசத்தி !
பொன்மைத்திரை;--  இச்சாசத்தி1
வெண்மைத் திரை;---ஞான சத்தி !
கலப்புத் திரை ;--------- ஆதி சத்தி 1

மேலே கண்ட திரைகள் ஒவ்வொன்றுக்கும் சத்தி என்று பெயர் ,இந்த சத்திகள் அனைத்தும்  அணுக்களின்  சேர்க்கையாகும், அந்த அணுக்கள் அனந்த வண்ண பேதமாக .ஏழு வண்ணங்களுக்கும் ஏழு விதமான அணுக்களின் கூருகளாகும்,,..அந்த அணுக்கள் எவைகள் என்பதை வள்ளலார் சொல்லி உள்ளார் .

இந்த பூத ஆகாயத்தில் இருக்கும் அணுக்கள்;--- சாதாரண அணு ,அசாதாரண அணுக்கள் என ஏழு வகையாய்ப் பிரியும் ,அவை ;---
வால் அணு ,,,திரவ அணு ...குரு அணு ,...லகு அணு ....அணு ...பரமாணு ...விபு அணு ,என ஏழு வகையாக உள்ளன .இதில் .காரிய அணு ,,காரிய காரண அணு..காரண அணு .என மூன்று பிரிவுகள் உள்ளன .

ஆன்மாக்களின் தன்மைக்கும் ,உயிரின் தன்மைக்கும் தகுந்தாற் போல் மனித தேகம் என்னும் வீடு கட்டிக் கொடுக்கப் படுகின்றது.

இந்த ஏழு விதமான அணுக்களும் சேர்ந்ததுதான் நம்முடைய உடம்பு ,..இந்த ஏழு அணுக்களில்.பஞ்ச பூத அணுக்கள் ஐந்தும் ,  ஆன்மாவும் ,உயிரும் சேர்ந்து  இரண்டு, மொத்தம் ஏழு விதமான அணுக்கள் அடங்கும்.

இதில் ஐந்து மலம் என்னும் செயல்கள் உள்ளன !

பசு என்பது ;----ஐந்து பங்கு  மலங்கள் உள்ளது !
ஜீவன் என்பது;---- மூன்று பங்கு  மலங்கள் உள்ளது !
ஆன்மா என்பது ;--ஒரு பங்கு மலம் உள்ளது ..!
சிவம் என்பது ;----முற்றும் மலம் நீங்கியது !
சுத்த சிவம் என்பது ;--- அருள் நிறைந்தது.!

மேலே கண்ட மலங்கள் நீங்கினால் மரணத்தை வெல்ல முடியும்...இந்த மலத்தை மறைத்துக் கொண்டு உள்ளது  அறியாமை ,அஞ்ஞானம் என்னும் திரைகளாகும் .

அந்த திரைகள் என்ன என்பதை அகவலில் விளக்கி உள்ளார் .

கரைவின் மா மாயைக் கரும் பெருந் திரையால்
அரைசது மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பேருறு நீலப் பெருந் திரை அதனால்
ஆருயிர் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பச்சைத் திரையால பரவெளி அதனை
அச்சுற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

செம்மைத் திரையால் சித்துறு வெளியை
அம்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

பொன்மைத் திரையால பொருளுறு வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

வெண்மைத் திரையால் மெய்ப்பதி வெளியை
அண்மையின் மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

கலப்புத் திரையால கருது அனுபவங்களை
அலப்புற மறைக்கும் அருட்பெருஞ்ஜோதி !

என்று தெளிவாக வள்ளலார்  விளக்கி உள்ளார்....ஒவ்வொருத் திரைக்கும் இடை வெளி உள்ளது .அந்த  இடை வெளியை நீக்க வேண்டும்...இவற்றை எல்லாம் மறைத்துக் கொண்டு உள்ளது எது எனில் ..அருட்பெருஞ்ஜோதிதான் மறைத்துக் கொண்டு உள்ளது ....அதனால்தான்  அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொள்ள வேண்டும் என்பதாகும்.....

இந்த திரைகளை நீக்க வேண்டுமானால் ,எது தேவை !  ''அருள்' என்னும்  அமுத திரவம் வேண்டும் ...அமுத திரவம் எங்கு உள்ளது ...ஆன்மாவில் உள்ளது ... ஊன உடம்பை ஒளி உடம்பாக மாற்ற வேண்டுமானால் ,அருள் அமுதம் வேண்டும் .....அந்த அமுதம் ஐந்து வகையாக, ஐந்து சுவையாக உள்ளது ,,

பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;--

1, வது அமுதம் நாக்கின் அடியில் இனிப்புள்ள ஊற்று ஜலம் போல் இருக்கும் !
2, வது அமுதம் உள் நாக்கின் மேல் இளகின இனிப்பு உள்ள சர்க்கரைப் பாகு போல் இருக்கும் !.
3,வது அமுதம் மூக்கு முனையில் காய்ச்சின சர்க்கரைப் பாகு போல் இருக்கும்! 4,வது அமுதம் நெற்றி நடுவில் முதிர்ந்த சர்க்கரைப் பாகு போல் இருக்கும் !
5, வது அமுதம் மகா இனிப்பு உள்ள மணிக் கட்டியாக இருக்கும் !  அதிக குளிர்ச்சியாகவும் இருக்கும் !

இந்த ஐந்தாவது அமுதத்தை உண்டவர்கள் என்றும் அழியாத தேக சித்தியைப் பெறுவார்கள் .....

மேலும் இந்த அமுதம் எந்த வகையால் கிடைக்கும் .எப்படி வாழ்ந்தால் கிடைக்கும் என்பதையும்.

பஞ்ச அமுத ஸ்தானங்கள் ;---
யோகா அனுக்கிரக பஞ்ச அமுத ஸ்தானங்கள் !

1,வது அமுதம் நாக்கு நுனியில் பக்குவ ஞானத்தால் சிருஷ்டி வல்லபப் பிரஞ்ஞையால் !
2,வது புவன அமுதம் நாக்கு மத்தியில் ,பக்குவ கிரியையால் ஸ்திதி  பிரஞ்ஞை உணர்ச்சியால் !
3,வது மண்டலா அமுதம் ,நாக்கின் அடியில் அக்குவ இச்சையால் சம்மார உணர்ச்சியால் !
4,வது ரகசியா அமிர்தம் உள் நாக்கின் அடியில் பக்குவ திரோபவம் உணர்ச்சியால் !
5,வது மவுனா அமிர்தம் உண்ணாக்குக்கு மேல் ,பக்குவ அனுக்கிரகம் ,அனுக்கிரக உணர்ச்சியால் ,,சுபாவத்தினது அனுபவம் துரிய நிலை !

மேலே கண்ட அமுதத்தை ,மேலே கண்டபடி நம்முடைய தலைப் பாகத்தில் இருந்துதான் பெற்று அனுபவிக்க வேண்டும்....இந்த அனுபவத்தைப் பெற்றால்தான், ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றி  மரணம் இல்லாப் பெருவாழ்வு என்னும் பேரின்ப சித்திப் பெருவாழ்வு கிடைக்கும்..இதற்கு அனுபவ நிலைகள் நிறைய உண்டு ,,

மேலும் வர்ணமாகிய எழுத்தாலும்,வண்ணமாகிய ரூபத்தாலும்,தொழில் ஆகிய பெயராலும் ஆனந்தமாக விரியும்,இவைகள் யாவும் ராகம் என்கிற திரை நீங்கினால் ஒருவாறு தோன்றும்,மேலும் இவைகள் படிப்பால் அறியக் கூடாது ..

அறிவது எப்படி எனில் ;;  ஒழுக்கம் நிரம்பிக் கருணையே வடிவாக நிற்கும் விசார சங்கல்பம் உண்டானால் நாம் தாழும் குணம் வரும் .அத் தருணத்தில் திருவருட் சத்தி பதிந்து அறிவு விளங்கும் ,ஆதலால் இடைவிடாது கருணை நன் முயற்சியில் பழக வேண்டும் .....

கருணை எப்படி எப்போது உண்டாகும்.!

நம்முடைய உடம்பு அசுத்த பூத காரிய அணுக்களால் பின்னப்பட்டது ...அசுத்த பூத காரிய அணுக்களை சுத்த பூத காரிய அணுக்களாக முதலில் மாற்ற வேண்டும் ,,..அதற்கு ஜீவ காருண்யம் என்னும் உயிர் இரக்கம் கொள்ள வேண்டும்...பிற உயிர்களைக் காப்பாற்றினால் நம்முடைய உயிர் காப்பாற்றப் படும்..அதற்கு மேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை இடைவிடாது தொடர்பு கொள்ள வேண்டும்...

உண்மையான இயற்கையான உணர்வோடு,உயிர்களுக்கு உண்டாகும்  பசி, கொலையைத் தவிர்த்து, இந்திரிய ஒழுக்கத்தையும்,கரண ஒழுக்கத்தையும் கடை பிடித்து வாழ்பவர்களுக்கு,முதலில் மேலே  சொல்லிய ஒன்றாவது அமுதமாகிய  இனிப்பு உள்ள ஊற்று ஜலம் போன்ற அமுதம் சுரக்கும். அவற்றை அனுபவித்தவர்களுக்கு   சுத்த தேகம் உண்டாகும்.அவை தான் இம்மை இன்ப வாழ்வு ,இம்மை இன்ப லாபம் என்பதாகும்.....

அதற்கு மேல் ,சாதி,சமயம், மதம், இனம்,குலம்,  நாடு, மொழி,கோத்திரம்,சூத்திரம்,சாத்திரம் ,மார்க்கம்,உயர்வு,தாழ்வு முதலிய  போன்ற வேறுபாடுகள் இல்லாமல்,ஜீவ ஒழுக்கத்தைக் கடைபிடித்து வாழ்ந்தால், எல்லாம் தானாக நின்றால்  இரண்டாவது அமுதம்,...முன்றாவது அமுதம்,...உட் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும்,

அவற்றை உட் கொண்டால் பிரணவ தேகம் என்னும் என்றும் அழியாத ,யாராலும் அழிக்க முடியாத தேகம் கிடைக்கும், தேகம் கண்களுக்குத் , தெரியும் ,பிடிபடாது,அந்த தேகத்திற்கு மறுமை இன்ப வாழ்வு ,...மறுமை இன்ப லாபம் என்று பெயராகும்.

அடுத்து ;--எண்பத்து நான்கு நூறு ஆயிரம் யோனி பேதங்களில் உள்ள ஆன்மாக்களிடமும் இரங்கி ,ஆன்மாவே சபையாகவும் அதன் உள் ஒளியே பதியாகவும்,கண்டு கலந்து பூரணமாக நின்றால் ,நான்காவது அமுதமும்,ஐந்தாவது அமுதமும் ,சுரக்கும்.அந்த அமுதத்தை அருந்தியவர்களுக்கு ,சுத்த தேகம்,..பிரணவ தேகம்..ஞான தேகம் ..என்னும் முத்தேக சித்தி கிடைக்கும்.அதற்குத்தான் பேரின்ப வாழ்வு,பேரின்ப லாபம் .என்பதாகும்....

இந்த ஐந்து வகையான அமுதமும் பூரணமாக அனுபவித்தவர்களுக்கு ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் அடைந்து ,ஒளி தேகம் பெற்று ,கடவுள் நிலை அறிந்து அம்மயம் ஆகலாம் ....

அந்த அருள் ஆன்மாவில் இருந்து சுரக்கும் போது உடம்பு என்னவெல்லாம்  மாற்றம் அடையும் என்பதை ,,அருட்பெருஞ்ஜோதி அகவலில் வள்ளலார் பதிவு செய்து உள்ளார் ..அவற்றைப் பார்ப்போம் ;---

தோல் எல்லாம் குழைந்திடச் சூழ் நரம்பு அனைத்தும்
மேல் எலாம் கட்டவை விட்டு விட்டு இயங்கிட

என்பு எலாம் நெக்கு நெக்கி இயல் இடை நெகிழ்ந்திட
மென்புடைத் தசை எலாம் மெய் உறத் தளர்ந்திட

இரத்தம் அனைத்தும் உள் இறுகிடச் சுக்கிலம்
உரத்து இடை பந்தித்து ஒரு திரள் ஆயிட

மடல் எலாம் மூளை மலர்ந்திட அமுதம்
உடல் எலாம் ஊற்று எடுத்து ஒடி நிரம்பிட

ஒண்ணுதல் வியர்த்திட ஒளி முகம் மலைந்திடத்
தண்ணிய உயிர்ப்பினில் சாந்தம் ததும்பிட

உண்ணகை தோற்றிட உரோமம் பொடித்திடக்
கண்ணில் நீர் பெருகிக் கால் வழிந்து ஓடிட

வாய் துடித்து அலறிட வளர் செவித் துணைகளில்
கூயிசைப் பொறி எலாம் கும்மெனக் கொட்டிட

மெய் எலாம் குளிந்திட மென் மார்பு அசைந்திடக்
கை எலாம் குவிந்திடக் கால் எலாம் சுலவிட

மனம் கனிந்து உருகிட மதி நிறைந்து ஒளிர்ந்திட
இனம் பெறும் சித்தம் இயைந்து களித்திட

அகங்காரம் ஆங்காங்கே அதிகரிப்பு அமைந்திடச்
சகங் காண உள்ளம் தழைத்து மலர்ந்திட

அறிவு உரு அனைத்தும் ஆனந்தம் ஆயிடப்
பொறி யுறும் ஆனம தற்போதமும் போயிடத்

தத்துவம் அனைத்தும் தாம் ஒருங்கே ஒழிந்திடச்
சத்துவம் ஒன்றே தனித்து நின்று ஓங்கிட

உலகு எலாம் விடயம் உளவு எலாம் மறைந்திட
அலகிலா அருளின் ஆசை மேற் பொங்கிட

என்னுளத்து எழுந்து உயிர் எல்லாம் மலர்ந்திட
என்னுளத்து ஓங்கிய என்தனி அன்பே

பொன்னடி கண்டு அருள் புத்தமுத உணவே
என்னுளத்து எழுந்த என்தனி அன்பே

தன்னையே எனக்குத்  தந்து அருள் ஒளியால்
என்னை வேதித்த எனதனி அன்பே

என்னுளே அரும்பி என்னுளே மலர்ந்து
என்னுளே விரிந்த என்னுடை அன்பே

என்னுளே விளங்கி என்னுளே பழுத்து
என்னுளே கனிந்த என்னுடை அன்பே

தன்னுளே நிறைவுறு  தரம் எலாம் அளித்தே
என்னுளே நிறைந்த என்தனி அன்பே

துன்புள அனைத்தும் தொலைத்து எனது உருவை
இன்புரு வாக்கிய என்னுடை அன்பே

பொன்னுடம்பு எனக்குப் பொருந்திடும் பொருட்டாய்
என்னுளங் கலந்த என்தனி அன்பே !

என்னும் அகவல்  வரிகளில் உடல் மாற்றத்தைப் பற்றி  தெளிவாக அனுபவித்து தெரிவித்து உள்ளார் நமது அருள் வள்ளலார் ....

தொடரும் ;---

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


1 கருத்துகள்:

1 பிப்ரவரி, 2024 அன்று PM 8:38 க்கு, Blogger B.Rameshkavitha கூறியது…

ஆன்மா திரைகள் விலகிட உள்ளம் கனிந்து ஓங்கிட மனம் ஒடுங்கி அருள் பெரும் ஜோதியில் கலந்திட நானும் கலந்து விட்டோம்... நன்றி நன்றி மேலும் எனக்கு தெரிவிக்கவும்... எனது ஆன்ம சபையில் ஒளியை கண்டு உவந்திடவைப்பீர்...

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு