வியாழன், 29 செப்டம்பர், 2016

அறிவை அறிந்து கொள்ளும் வழி !

 ஆடாதீர் சற்றும் அசையாதீர் வேறு ஒன்றை
நாடாதீர் பொய் உலகை நம்பாதீர் . . வாடாதீர்
சன்மார்க்க சங்கத்தைச் சார்வீர் விரைந்து இனி இங்கு
என்மார்க்கமும் ஒன்றாமே !

அடுத்த ஒரு பாடலைப் பதிவு செய்கின்றார் !

கண்டது எல்லாம் அநித்தியமே கேட்டது எல்லாம் பழுதே
கற்றது எல்லாம் பொய்யே நீர் களித்தது எல்லாம் வீணே
உண்டது எல்லாம் மலமே உட் கொண்டது எல்லாம் குறையே
உலகியலீர் இது வரையில் உண்மை அறிந்திலிரே
விண்டதினால் என் இனி நீர் சமரச சன்மார்க்க
மெய் நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நண்கு உணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே என் தந்தை அருள் அடைமின்
இறவாத இன்பம் உறலாமே !

என்னும் பாடல்கள் வாயிலாக உலக மக்களுக்கு உண்மையான விளக்கத்தை தருகிறார் .


அறிவை அறிந்து கொள்ளும் வழி !

மனித பிறப்பு உயர்ந்தது ,மனித அறிவு உயர்ந்தது !

மனித தேகம் கொடுக்கும் போதே இறைவன் எல்லோருக்கும் ஒரே மாதிரியான ,ஒரே அளவான அறிவுதான் கொடுத்து படைத்து உள்ளார் .

உடம்பு !

எண்சான்   உடம்பிற்கு சிரசே பிரதானம் என்பது எல்லோருக்கும் தெரியும் .எண் சான் என்பது ,ஒவ்வொருவர் உடம்பும் அவரவர் கையில் அளந்தால எட்டு சான்தான் இருக்கும் .அதேபோல் இறைவன் எல்லோருக்கும் பொதுவான அறிவைத்தான் வழங்கி உள்ளார்

 இறைவன் கொடுத்து உள்ள அறிவு தான் உண்மையானது .உயர்வானது .என்பது தெரியாமல் ,மற்றவர்களின் அறிவை தேடிக் கொண்டு உள்ளோம் .

உயர்ந்தவர்களின் அறிவு !

நம்மிடம்  உள்ள அறிவை அறிந்து கொள்ளாமல் ..திருவள்ளுவர் சொன்னார் ,திருமூலர் சொன்னார் .மாணிக்கவாசகர் சொன்னார் ,நபிகள் சொன்னார் .ஏசு சொன்னார் .புத்தர் சொன்னார்,சித்தர் சொன்னார்  என்றும் .குருநாதர் சொன்னார் என்றும் ,மற்றவர்களின் கொள்கைகளிலும் ,வழிகாட்டுதல் களிலும் பின் பற்றி பின் தொடர்ந்து கொண்டே உள்ளோம் ,.எல்லோரும் நம்மைப் போன்ற மனிதர்கள் தானே !

மேலே கண்ட அருளாளர்கள் ஒவ்வொருவரும் வேறு வேறு விதமான கொள்கை உடையவர்கள் .

அவர்கள் எல்லோரும் அவர்களின் அறிவை பயன்படுத்தி அருளாளர்கள் என்று பெயர் பெற்று உள்ளார்கள் .

நம்மிடம் உள்ள உண்மையான பேர் அறிவை தெரிந்து கொள்ளாமல் ,மற்றவர்களின் அறிவை பின்பற்றி வாழ்வதால் நம்முடைய அறிவுக்கு வேலை இல்லாமல் போயிற்று .

ஆதலால் தன்னை அறியாமல் தன்னுடைய உண்மையான தந்தை, தாய் யார் என்பது தெரியாமல் ,வாழ்ந்து கொண்டு உள்ளோம் .அதனால் தன்னை அறிந்து கொள்ள முடியாமல்,அறிவை இழந்து  அழிந்து கொண்டே உள்ளோம் .

ஆண்டவர் வருகை !

தன்னுடைய குழந்தைகளின் அறியாமையைக் கண்டு ,அறியாமையைப் போக்க வேண்டும் என்பதற்காக ,உண்மையான இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் . என்னும் அருள் பேர் ஒளியானது வள்ளலார் உருவம் தாங்கி இவ் உலகிற்கு வந்துள்ளது .அதனால் வள்ளலார் என்னும் உருவம் அருட்பெருஞ்ஜோதியே எனபதை நாம் அறிவால் அறிந்து புரிந்து தெரிந்து கொண்டால் ,நம்முடைய குழப்பங்களுக்கு எல்லாம் விடை கிடைத்து விடும் .

நம்மிடம் உள்ள ஆன்மாவையும் ,உயிரையும்   அறிவையும் ,அருளையும் தெரிந்து கொள்வது   எப்படி என்பதையும் ,அதற்கு உண்டான வழி என்ன என்பதையும்  வள்ளலார்  தெளிவாக விளக்கி உள்ளார் . வாழ்ந்தும் காட்டி உள்ளார் .

ஆண்டவரே வந்து சொல்லியும் .நாம் அவற்றை பின் பற்றாமல் இருப்பது தான் ,அறியாமை என்றும்  அஞ்ஞானம் என்றும் சொல்லப்படுகிறது .அறிவை மறைத்துக் கொண்டு உள்ளதை . . அந்த மறைப்பைத்தான்  மாயாத் திரைகள் என்று வள்ளலார் சொல்லுகின்றார் .

அந்த மாயா திரைகள் தான் நம்முடைய ஆன்மாவையும ,உயிரையும்  அறிவையும் ,அருளையும் மறைத்துக் கொண்டு உள்ளது .

அந்த திரைகளை நீக்குவதற்கு நாம் முன்னாடி உள்ள பெரியவர்கள் .மற்றும் அருளாளர்கள் ,குருமார்கள் போன்ற யாருடைய கொள்கைகளையும் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை .என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் சொல்லி உள்ளார் .

நம்முடைய அறிவைத் தெரிந்து கொள்ள நாம் தான் முயற்சி செய்ய வேண்டும் .

தன்னை அறிந்து இன்பம் உற வெண்ணிலாவே ,ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே !என்று  வள்ளலார் இறைவன் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் இடமே கேட்கின்றார் ,தந்திரத்தை சொல்லுகின்றார .அதாவது தந்திரம் என்றால் உளவு என்பதாகும் ,

அந்த உளவுதான் ஜீகாருண்யம் .சத்விசாரம் என்பதாகும் .இந்த இரண்டு வழிகளையும் .முறைகளையும் ,துறைகளையும் ,அவற்றை அறிந்து கொள்ளும் துணிவு இருந்தால் அறிவு தானே விளங்கும் .

அந்த உண்மை அறிவானது பூரணத்துவம் பெறுகின்ற போது தான் .ஆன்மாவை மறைத்துக் கொண்டு உள்ள திரைகள் விலகி அருள் சுரக்கும் .அருள் பூரணம் பெறுகின்ற போதுதான் மரணத்தை வெல்ல முடியும் ,

வள்ளலார் சொல்லிய வண்ணம் வாழந்தால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும் .

வேறு எந்த வழியில் சென்றாலும் மரணத்தை வெல்ல முடியாது .

தொடரும் :---

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு