செவ்வாய், 20 செப்டம்பர், 2016

சுத்த சன்மார்க்கம் !

சுத்த சன்மார்க்கம் !
வள்ளலார் சொன்னது உண்மை மார்க்கம் .அதற்கு வள்ளலார் வைத்து உள்ள பெயர் "சமரச சுத்த� சன்மார்க்க சத்திய சங்கம் "என்று பெயர் வைத்து உள்ளார்
இந்த மார்க்கத்தின் வழியாகத்தான் இறைவன் உண்மையான கருத்துக்களை உலகிற்கு .வள்ளலார் மூலமாக வெளிப்படையாக வெளிப்படுத்துகின்றார் .
எனவே உலகில் உள்ள மார்கங்கள் அனைத்தும் துன்மார்கத்தையே போதிக்கின்றது .போதித்து உள்ளது .
வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !
சன்மார்க்கம் நன்மார்க்கம் நன்மார்க்கம் !
சகமார்க்கம் துன்மார்க்கம் துன்மார்க்கம் !
என்று வள்ளலார் சொல்லி உள்ளார் .
அதற்கு மேலும் சொல்லுகின்றார்
நடராஜர் பாட்டே நறும் பாட்டு
ஞாலத்தார் பாட்டு எல்லாம் வெறும் பாட்டே !
சிதம்பரப் பாட்டே திருப்பாட்டு
ஜீவர்கள் பாட்டு எல்லாம் தெருப்பாட்டு "!
அம்பலப் பாட்டே அருட்பாட்டு
அல்லாத பாட்டு எல்லாம் மருட்பாட்டு !
என்று நிறைய பாடல்கள் பதிவு செய்துள்ளார் .
சாதி சமயம் மதம் போன்ற கலவை இல்லாத ஒரே மார்க்கம் ,வள்ளலார் தோற்றுவித்த" சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் "என்னும் மார்க்கமாகும் .
இங்கு வந்தால் மட்டுமே அசுத்தம் நீங்கி சுத்தம் உள்ளவர்களாக வாழ முடியும் .
ஆன்ம நேயன்� ஈரோடு கதிர்வேல்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு