வியாழன், 22 செப்டம்பர், 2016

வேதம் ஆகமம் !

வேதம் ஆகமங்கள் இரண்டு வகை!

 வேதம் ஆகமங்களை இரண்டாக பிரிக்கின்றார் வள்ளலார் .

இந்தியரவில் உள்ள வேதம் ஆகமங்கள் தனியாகவும் .

வெளிநாட்டில் தோன்றிய வேதம் ஆகமங்கள் வேறாகவும் பிரிக்கின்றார் .

வள்ளலார் சூட்சுமமாக சொல்லுகின்றார் இந்து வேதம் ஆகமங்களில் மாத்திரம் தான் ஏமசித்தி ,தேக சித்தி,  ஞான சித்தி முதலிய சித்திகளைசித்திகளைச் சொல்லி இருக்கின்றது .

மற்ற எந்த சமயங்களிலும் மேற்படி சித்திகளையும் சாகாக் கல்வியையும் சொல்ல வில்லை என்கிறார்

ஒரு வேளை அப்படி இருக்கிறதாகக் காணப்படும் ஆகில் அது இந்து வேதம் ,ஆகமங்களில் சொல்லி இருப்பதின் ஏக தேசங்கள் என்பது உண்மை என்கிறார் .

கிருத்தவ மதம் .இஸ்லாம் மதம் இரண்டிற்கும் அவர்களின் நூலுக்கு வேதம் ,ஆகமங்கள் என்றும் பெயர் வழங்கப் படுகிறது .

அந்த வேதம் ,ஆகமங்களை வள்ளலார் சூதாக சொல்லி உள்ளதாக சாடுகின்றார் , ஏன் எனில் அவர்களின் வேதங்கள் ஆகமங்கள் உயிர்களை கொலை செயவதற்கு தடையாகவும் இல்லை .மாமிசம் அதாவது புலால் உண்பதற்கும் தடையாக இல்லை .

கொலைக்கு  காரண காரியமாக உள்ளது எனபதால் மிகவும் வேதனை யுடன் திட்டு கின்றார் .

வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல்கள் !

வேதம் ஆகமங்கள் என்று வீண் வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவு அறியீர் . . சூதாகத்
சொன்னது அலால் உண்மை வெளி தோன்ற உரைத்தது இல்லை
என்ன பயனோ இவை !

என்று சொல்லுகின்றார் .

அடுத்து :-- அண்ணிய உலகினர் ஆகிய மதங்களும் உண்மை இறைவன் யார் ? என்பது தெரியாது உளறுகிறார்கள் என்கிறார் ____ பாடல் !

நண்ணிய மத நெறி பல பல வகையே
நன்று அற நின்றன செனறன சிலவே
அண்ணிய உலகினர் அறிகிலர் நெடு நாள்
அலை தருகின்றனர் அலைவற மகனே
புண்ணியம் உறு திரு அருள் நெறி இதுவே
பொது நெறி என அறிவுற முயலுதி நீ
தண்ணிய அமுது உணத் தந்தனம் என்றாய்
தனி நடராஜ என் சற்குரு மணியே !

என்றும் பதிவு செய்து உள்ளார் .


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு