செவ்வாய், 20 செப்டம்பர், 2016

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல் !  

வள்ளலார் ஆரம்ப காலத்தில் நான்  பின் பற்றி வந்த, சமய மத மார்க்கங்கள்,மற்றும் சமய மத  தெய்வங்கள் , யாவும் பொய்யானது என்பதை உணர்ந்து ,அவைகள் யாவும் துன்மார்க்கம் என்பதை அறிந்து .அனைத்தையும் தொலைத்து விட்டேன்,நீங்களும் என்னைப்போல் தொலைத்து விட்டு வாருங்கள்...

இப்போது இறைவனால் தோற்றுவிக்கப் பட்ட உண்மையான மார்க்கம் தான் 'சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் ' ''என்ற உண்மையான மார்க்கமாகும்..இந்த மார்க்கத்தை கண்டு வானத்தில் உள்ள வானாட்டார்களும் போற்றி மகிழ்ந்து கொண்டு உள்ளார்கள் ...நீங்களும் உண்மையை உணர்ந்து நன்மார்க்கம் என்னும் சன்மார்க்கத்தைப் பின்பற்றி  போற்றி மகிழ்ந்து வாழ்ந்து மரணத்தை வென்று வாழ்வாங்கு வாழ அனைவரையும் அழைக்கின்றார் நம்முடைய வள்ளலார் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ....
                 
சுத்த சிவ நிலை என்னும் தலைப்பில் '--பாடல் 20,,  

துன்மார்க்கம் எல்லாம் தொலைத்து விட்டேன் ...
சுத்த சிவ சன்மார்க்க சங்கம் தலைப் பட்டேன் ,,,,
என்மார்க்கம் நன் மார்க்கம்  என்றே வான் நாட்டார்
புகழ்கின்றார் ..மன் மார்க்கத்தாலே மகிழ்ந்து      

அடுத்த பாடல் ;----
பன் மார்க்கம் எல்லாம் பசை அற்று ஒழிந்தனவே ...
சன்மார்க்கம் ஒன்றே தழைத்த்துவே ...சொன் மார்க்கத்தில்
எல்லா உலகும் இசைந்தனவே எம் பெருமான் ..
கொல்லா நெறி அருளைக் கொண்டு .....என்கின்றார் ..

அடுத்த பாடல் ;----
சாதி குலம் என்றும் சமய மதம் என்றும்
உப நீதி இலா ஆச்சிரம நீட்டு என்றும்
ஓதுகின்ற பேய் ஆட்டம் எல்லாம் பிதிர்ந்து ஒழிந்த்துவே
பிறர் தமது வாயாட்டம் தீர்ந்தனவே மற்று ...

இன்று தொடங்கி இங்கே எம்பெருமான் எந்நாளும்
நன்று துலங்க நடம் புரிவான் ---என்றும் என் சொல்
சத்தியம் என்று எண்ணிச் சகத்தீர் அடைமின்கள்
நித்தியம் பெற்று உய்யலாம் நீர் .!

என்று பல பாடல்கள் வாயிலாக நம்மை எல்லாம் அழைக்கின்றார் , .

இப்படி நூற்றுக்கணக்கான பாடல்கள் வாயிலாக தெரியப் படுத்தி உள்ளார் ,தெளிவுப் படுத்தி உள்ளார் .....படித்து பயன் பெறுவோம்  ....

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் .

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு