திங்கள், 19 செப்டம்பர், 2016

இன்று ஒரு சிந்தனை !

இன்று ஒரு சிந்தனை !
நாம் நமக்கு அஜாக்கிரதையால் மரணம் வந்து விட்டால் மீண்டும் இந்த மனிதப் பிறப்பு கிடைக்குமா ? கிடைக்காதா ? என்ற கேள்வி மக்களிடம் அதிகமாக உள்ளது,
இதற்கு என்ன பதில் !
இதற்கு வள்ளலார் சொல்லி உள்ள பதில் !
இந்த மானிட தேகம் ஆண்டவர் கொடுத்த தேகம் அன்று ஆண்டவர் சிருஷ்டி அன்று என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
இந்த உலகத்தில் ஆன்மா வந்து வாழ்வதற்கு மாயையால் கட்டிக் கொடுக்கப்பட்ட தேகம்.அதற்கு மாயா சிருஷ்டி என்று பெயர் .
மரணம் அடைந்தால் முன் இருந்த ஞான, அஞ்ஞானத் தோடு தான் பிறப்பார்கள் பிறப்புக் கொடுக்கப்படும் ..இவைகள் யாவும் மாயையின் வேலைகள் ..
நாம் உண்மையான ஆண்டவராகிய அருட்பெருஞ்ஜோதியை தொடர்பு கொண்டு .கிஞ்சித்து ஞான விசேஷங்களை அறிந்து உண்மை ஒழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்ந்தால்,அடுத்த பிறப்பில் மாற்றம் உண்டாகும்...
மாயையினால் தேகம் கொடுக்கப்படும் போது ,உண்மையான ஆண்டவரைத் தொடர்பு கொண்டால் மட்டும் எப்படி தேகம் மாற்றிக் கொடுக்கப் படும் என்ற கேள்வி வரலாம் .இல்லையா ?
மனித தேகம் என்பது இறுதியான கடைசி தேகம் .இந்த தேகத்தில் ,இறைவனை தொடர்பு கொண்டு அருளைப் பெற்று என்றும் அழியாத சுத்த பிரணவ ஞான தேகம் பெற வேண்டும் என்பது ,அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் சட்டம் கட்டளை ,,,அந்த சட்டத்தை மீறாமல் மாயை ,மாமாயை,பெருமையை என்ற மூன்று நிர்வாகிகள் இந்த உலகத்தில் ,,,எல்லா ஆன்மாக்களுக்கும் வாழ்வதற்கு அதன் அதன் தகுதிக்கு தகுந்தாற் போல் தேகம் கொடுக்கப் படுகின்றது...மனித தேகத்திற்கு மட்டும் விதி விளக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
அசுத்தங்களை நீக்க வேண்டும் !
மனித தேகத்திற்கு மட்டும் உயர்ந்த அறிவு கொடுக்கப் பட்டு உள்ளது.,மனித தேகம் எடுத்தவர்கள் .அறம்,பொருள்,இன்பம்,வீடு என்ற நான்கு சுகங்களை அனுபவித்து பின்பு அவற்றை பற்று அற விட்டு,நம்மை அனுப்பிய ,இறைவனை தொடர்பு கொள்ள வேண்டும் என்பது இயற்கை சட்டம் .
நாம் இயற்கையின் உண்மை தெரியாமல் ,சாதி,சமயம்,மதங்கள் காட்டிய பொய்யான கொள்கைகளைக் பின்பற்றி வாழ்வதால்.மரணம் வந்து கொண்டே உள்ளது...மரணம் வந்தாலும் பரவாயில்லை.அடுத்த பிறப்பு என்னவென்றே தெரியாமல் மூடமாக வாழ்ந்து கொண்டு உள்ளோம்.
வள்ளலார் வந்துதான் உண்மை நெறியான சுத்த சன்மார்க்க புது நெறியை, தனி நெறியை,திரு நெறியை மனித தேகம் எடுத்த மக்களுக்கு,தெளிவாக பாடல்களாகவும்,உரை நடைப்பகுதிகளிலும் எழுதி வைத்து உள்ளார் ...நாம் படித்து ,அவற்றில் உள்ளதுபோல் வாழ்ந்து வந்தால் ,மாயை நமக்கு உண்மையான வழியைக் காட்டி , அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் அருளைப் பெரும் வழியையும் காட்டும்.
எனவே நாம் மனுஷ்ய வல்லபத்தால் தனக்கு இருக்கின்ற அசுத்தங்களை நீக்கிக் கொள்ள வேண்டும்,.அடுத்து இது நல்லது,இது கெட்டது என்று பகுத்து அறியும் ஞான விசேடத்தால் விஷய வாசனையில் கரணங்களை செல்ல வொட்டாமல் தடுத்துக் கொண்டால் ,மட்டுமே இறைவன் அருளைப் பெற மாயை வழியைக் காட்டும்..
அதன்பின் நாம் இடைவிடாது உண்மையான இறைவனை அறிவால் அறிந்து அன்பு செய்து ,தோத்திரம் செய்தும் நம்முடைய குறையை ஊன்றியும் ,இவ்வண்ணமாக ,இருக்கின்றபோதும்,படுக்கின்ற போதும்,இடைவிடாது இவ்விசாரத்தோடு ,ஆண்டவர் நமக்கு உண்மை தெரிவிக்க வேண்டும் என்கின்ற முயற்சியுடன் இருந்தால் ,ஆண்டவர் தெரிவிக்க வேண்டியதை தெரிவிப்பார் .அதன்பின் நாம் எல்லா உண்மைகளையும் தெரிந்து கொள்ளலாம் .
அடுத்த பிறப்பு என்ன என்பதும்,மரணம் எப்போது வரும் என்பதையும் தெளிவாக தெரிந்து கொண்டு மகிழ்ச்சியுடன் வாழலாம் .பிறப்பு இறப்பு என்பதுதான் எல்லோருக்கும் தெரியும்,ஆனால் என்ன பிறப்பு ,எங்கே பிறப்போம் என்பது யாருக்கும் தெரியாது .
சுத்த சன்மார்க்கிகள் சுத்த சன்மார்க்க நெறியை முழுமையாக கடைபிடித்தால் இப்பிறப்பிலே மரணத்தை வெல்லும் வழி கிடைக்கும்,கொஞ்சம் அஜாக்கிரதையால் மரணம் அடைந்தாலும் அடுத்து மனிதப் பிறப்பு கிடைக்கும் என்பதை உணர்ந்து ,வள்ளலார் காட்டிய ஜீவ காருண்ய உயிர் இரக்கத்தைக் கடைபிடித்து ,இடைவிடாது இறைவனைக் தொடர்பு கொண்டு வாழ்வோம் எல்லா நன்மைகளும் நம்மைத் தேடி வரும் என்பது சத்தியம்.
தொடரும்....
அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு