வியாழன், 15 செப்டம்பர், 2016

ஆசைப்படு !

ஆசைப்படு !

ஆசைக்கு மறு பெயர் பற்று!
எதை பற்ற வேண்டும்.

பற்று அற்றவனைப் பற்ற வேண்டும்.அதற்கு அன்பு காதல் என்பதாகும்.

ஆசை இருந்தால்தான் அன்பு.காதல் வரும்.ஆசை இல்லாமல் எதையும் அடையமுடியாது.

ஆசைப்படு எவை நமக்கு தேவை என்பதை அறிந்து.தெரிந்து.புரிந்து ஆசைப்பட வேண்டும்.

ஆசைதான் அழிவுக்கு காரணம் என்று நம் முன்னோர்கள் சொன்னார்கள் .அவை முற்றிலும் தவரானது .

 பொருள் சம்பாதிப்பதில்  ஆசை இருக்க வேண்டும் பேராசை இருக்கக் கூடாது .

அருள் சம்பாதிப்பதில் அதிகமான பேராசை இருக்க வேண்டும் ,

வள்ளலார் "அருள்""
 பெருவதற்கு ஆசை படுங்கள் என்கிறார் .பேராசைப் படுங்கள் என்கிறார்

ஆசை இல்லை என்றால் அவன் மனிதன் இல்லை .அவன் உணர்வு இல்லாத ஜடமாக மாறிவிடுவான்

 வள்ளலார் பதிவு செய்து உள்ள பாடல் !

 ஆசை உண்டேல் வம்மின் இங்கே அருட்ஜோதிப்பெருமான் அம்மையுமாய் அப்பனுமாய் அருளும் அருளாளன்

ஏசற நீத்து எனை ஆட்கொண்டு எண்ணியவாறு அளித்தான் எல்லாம் செய் வல்ல சித்தன் என் உயிரில் கலந்தான்

தேசுடைய பொதுவில் அருட் திரு நடனம் புரியத் திருவுளம் கொண்டு எழுந்து அருளும் திருநாள் இங்கு இதுவே

மோச உரை என நினைத்து மயங்காதீர் உலகீர் முக்காலத்தினும் அழியா மூர்த்தம் அடைந்திடவே !

என்ற பாடல் வாயிலாக உலக மக்களை அழக்கின்றார் வள்ளலார் .

எனவே ஆசைப்படுங்கள் !

இறைவனை காதலிக்க ஆசை படுங்கள் ! உண்மை இறைவனைக் கண்டு உண்மையான காதல் கொள்ள  ஆசைப்படுங்கள் என்கின்றார்

ஆசை  வேண்டும் .ஆசை வேண்டும் அசைக்க முடியாத ஆசை வேண்டும் .

இறைவனுடன் இணைவதற்கும் அணைவதற்கும்  ஆசைப்படுங்கள் !

அப்போது தான் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளை வாரி வழங்குவார்

பற்று அற்றவனை பற்ற ஆசைப்படுங்கள் .

இறைவனைக் காதலிப்பவர்களே அறிவு உள்ளவர்கள் .

அதுதான் அழியாத பேரின்ப காதல் .

அந்தக் காதலை எவராலும் பிரிக்க முடியாது .அழிக்க முடியாது .

நீ என்னை விடமாட்டாய்.நான் உன்னை விட மாட்டேன் இருவரும் ஒன்றானோம் என்பார் வள்ளலார்


காதல் கரைகடந்து போகின்றது இனி தாங்கமுடியாது.நீ கண்டுகொளாய் எனிலோ என் உயிரையும் விட்டுவிடுவேன்.உன்மேல் ஆணை என்று சத்தியம் வைத்து சொல்லுகின்றார்.

இறைவனிடம் இனைந்தால்.சேர்ந்தால் தான் அருள் என்னும் திரவம்.ஆன்மாவில் இருந்து அருள் சுரக்கும்.அந்த அருள் சுரந்து அனுபவிக்கும் இன்பம் அழியாத பேர் இன்பம்...


அழியும் இன்பத்தை விட்டு அழியாத பேர் இன்பத்திற்கு ஆசைப்படுங்கள் .

அந்த அருள் இன்பம் கிடைத்தால் மட்டுமே .இந்திரிய இன்பம்.கரண இன்பம்.ஜீவ இன்பம்.ஆன்ம இன்பம்.கிடைக்கும்.

அதற்கு ஆன்ம இன்ப வாழ்வு என்று பெயர்.அந்த இன்பம் பூர்த்தி அடைந்தால் மட்டுமே.மரணம் இல்லாப் பெருவாழ்வு கிடைக்கும்

அன்புடன் ஆன்ம நேயன் ஈரோடு கதிர்வேல்
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு