புதன், 21 ஜனவரி, 2015

ஒளி ,ஒலி எங்கே இருந்து வருகின்றது ?

ஒளி ,ஒலி எங்கே இருந்து வருகின்றது ?

குழந்தை பிறந்த உடன் சத்தம் போடுவதில்லை அழுவதில்லை .
தாயின் தொப்புள் கொடியை துண்டிக்கப்படும் போது தான் வெளியே உள்ள காற்றை குழந்தையின்  மூக்கின் வழியாக,  வாயின் வழியாக காற்று உள்ளே போகும்.அதன் பின்புதான் சத்தம் வரும். அந்த சத்தம் அந்த குழந்தைக்கு பால் வேண்டும் என்பதற்காக சத்தம் போடும் .அதை அறிந்து உடனே குழந்தைக்கு தாயின் மார்பகத்தில் இருந்து பால் கொடுக்கப்படும் .என்னே இயற்கையின் அதிசயம்.

குழந்தை பிறப்பதற்கு முன்னமே குழந்தைக்கு உணவு வேண்டும் என்பதற்காக தாய் உண்ணும் உணவை திரவமாக மாற்றி இரத்தமாக மாற்றி அதை வேதியல் முறைப்படி பாலாக மாற்றி குழந்தைக்கு வேண்டிய சுவையாக மாற்றி தாயின் மார்பகத்தில் சுரக்கும்படி செய்து கொடுத்த அற்புதத்தை எந்த சக்தியால்,எந்த ஆற்றலால் செயல்படுத்த முடியும் .

குழந்தை பிறந்து வளர்வதற்கு பால் குடித்து பழகிய குழந்தைக்கு நாம் உண்ணும் உணவை கொஞ்சம் கொஞ்சமாக கொடுத்து நம்முடைய பழக்கத்திற்கு கொண்டு வந்து விடுகின்றோம்.

குழந்தை எப்போது பேசுகின்றது !

சுக்கிலம் உண்டாவதற்குக் காரணம் !

தினம் தினம் குழந்தை உண்ணும் உணவை இரண்டரை நாழிகைக்குள் அந்த உணவில் உள்ள சத்தை திரவமாக்கி பின் இரத்தமாக்கி அதை பக்குவப் படுத்தி பிரித்து ஊட்ட வேண்டிய உறுப்புகளுக்கு அனுப்பிவிட்டு மீதமுள்ள மத்திய தரமாகிய நெகிழ்ச்சியைக் கொண்டு விந்துவாக மாற்றி சொட்டு சொட்டாக விந்து பையில் ஒரு பாகமும் நாபியில் ஒரு பாகமும் தலையில் உள்ள பிரமந்திரத்தில் அரையும் சேர்க்கின்றது .

சுக்கிலப் பையில் சேரும் விந்து அதிகமாகும் போதுதான்.சுக்கிலம் மூல ஆதாரத்தில் இருந்து ஆவியாகி தொப்புள் நாடி வழியாகவும் .முதுகம் தண்டு வழியாகவும் தலைப்பாகத்தில் சென்று உள் நாக்கின் வழியாக அந்த திரவம் இறங்குகின்ற போதுதான் குழந்தை பேசுவதற்கு சத்தமும், வெளிச்சமும் உண்டாகுகின்றது .

விந்து சக்தி உள் நாக்கின் வழியாக இறங்க இறங்க பேச்சு என்னும் சத்தமும்,ஒளி என்ற வெளிச்சமும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒளியும் ஒலியும் உண்டாகின்றது

சுக்கிலம் மேலே ஏறி உள் நாக்கின் வழியாக  வர வில்லை என்றால் அவர்களை ஊமை என்கின்றோம் .

இந்த தேகத்தில் ஜீவன் இருக்கின்ற ஸ்தானம் ஐந்து .அதில் முக்கியமானது இரண்டு .அவை யாதெனில் ?

கண்டம், சிரம்.---சிரத்தில் உள்ளது பரமாத்மா என்னும் சாமானிய ஜீவன்.இது இறக்காது ....கண்டத்தில் உள்ளது ஜீவாத்மா என்னும் விஷேச ஜீவன் இது இறந்து விடும் என்கின்றார் வள்ளலார் .

சாமானிய ஜீவன் என்பது ஆன்மா ! விஷேச ஜீவன் என்பது உயிர் ! விஷேச ஜீவன் என்னும் உயிரை இறக்காமல் பாது காப்பதே அருளின் தன்மையாகும் அந்த அருளைப் பெறுவதற்கு நன் முயற்ச்சி செய்ய வேண்டும்.

அருளைப் பெற வேண்டுமானால் ஆன்ம நெகிழ்ச்சி உண்டாக வேண்டும்.ஆன்ம நெகிழ்ச்சி எப்படி உண்டாகும் என்றால் ? விந்து என்னும் சக்தி ஆன்மா என்னும் ஒளியுடன் இணையவேண்டும் .அது கருணையினால் மட்டுமே மேலே ஏறி ஆன்மாவுடன் தொடர்பு கொண்டு சுத்த உஷ்ணத்தை உண்டாக்கும் அப்போதுதான் ஆன்ம நெகிழ்ச்சி உண்டாகும் .

இதைத்தான் வள்ளல்பெருமான் !

வானத்தின் மீது மயில் ஆடக் கண்டேன்
மயில் குயில் ஆச்சுதடி ...அக்கச்சி
மயில் குயில் ஆச்சுதடி

என்கின்றார் ..

வானம் என்பது ஆன்மா இருக்கும் இடம் அங்கே எழு வண்ணங்களாக அருள் இயங்கிக் கொண்டு உள்ளது அதை ஆடக் கண்டேன் என்கின்றார்.அங்கே குயில் என்னும் ஒலி  (சத்தம் ) விந்துவின் சேர்க்கையால்,ஆன்மா நெகிழ்ச்சி உண்டாகி பொருள் என்னும் உடம்பும் , ஆன்மாவில் உள்ள அருளும் சேர்ந்து   ஒளியும் ஒலியும் இணைந்து ஓங்காரம் என்னும் சத்தம் உண்டாகின்றது  .அங்கே ஆங்காரம் அழிந்து ஜீவ ஆன்மாவும் .பரமான்மா என்னும் அருட்பெருஞ்ஜோதியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து ஊன உடம்பு ஒளி உடம்பாக மாற்றம் பெறுகின்றது.

உயிர் என்னும் ஜீவன் ஆன்மாவுடன் இணைந்து ஒளியாக மாற்றம் அடைகின்றபோது மீண்டும் ஆன்மாவிற்கு பிறப்பு இறப்பு இல்லை என்பதாகும்.

இதுவே மரணம் இல்லாப் பெருவாழ்வாகும் .

சுருக்கமாக சொல்லி உள்ளேன் விரிக்கில் பெருகும் .

சிந்திப்போம் செயல்படுவோம்..

ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.


1 கருத்துகள்:

16 பிப்ரவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 12:58 க்கு, Blogger Anand Raj கூறியது…

பெண் குழந்தைக்கும் விந்து சேருமா

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு