மனிதன் குற்றம் செய்வதற்கு அடிப்டைக் காரணம் !
மனிதன் குற்றம் செய்வதற்கு அடிப்டைக் காரணம் !
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் பிறந்த நாள் தொடங்கி இறந்து போகிற வரை உணவு என்னும் ஆகாரம் உண்டு .
உண்ணும் உணவிலே காரம்,உப்பு,புளிப்பு,துவர்ப்பு,இனிப்பு,கசப்பு போன்ற ஆறு சுவைகள் உள்ளன.அந்த ஆறு சுவை உணவின் தன்மைக்குத் தகுந்தாற்போல் இரத்தமாக மாற்றம் அடைந்து ,அதன் தன்மைக்குத் தகுந்தாற்போல் சுக்கிலம் என்னும் விந்துவாக ரசாயன மாற்றம்போல் சுக்கிலப் பையில் சேர்ந்து விடுகின்றன.
அந்த சுக்கிலத் தனமைக்குத் தகுந்தாற்போல் ஒவ்வொருவரின் செயல்பாடுகளும் வெவ்வேறு விதமாக செயல்பட்டுக் கொண்டு இருக்கும்.
ஆறு சுவைகளிலே காரம், உப்பு,புளிப்பு அதிகமாக உண்பவர்கள் அதிக மான குற்றங்களைச செய்வார்கள்.காரம்,உப்பு,புளிப்பு ,துவர்ப்பு,இனிப்பு,கசப்பு,சமமாக கலந்த உணவை உட்கொள்பவர்கள்,சிறிய குற்றங்களை செய்பவர்கள்.கசப்பும் ,இனிப்பும் மட்டும் உண்பவர்கள் குற்றங்களை செய்யமாட்டார்கள்.
மேலும் காரம் ,உப்பு, புளிப்பு கலந்த ,மசாலா கலந்த மாமிசம் அதிகம் உண்பவர்கள் கொலைக் குற்றவாளிகளாகவும்,தீவரவாதி களாகவும்,நக்சல் பார்டிகளாகவும்,பயங்கர வாதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும்,திருடர்களாகவும்,கொள்ளை காரர்களாகவும் அதிகமான மனிதாப மானமற்ற கொடுரமான செயல்களில் ஈடுபடுவார்கள்.
எல்லா குற்றங்களுக்கும் அடிப்டைக் காரண காரியம் உண்ணும் உணவே காரணமாகும் .உணவினால் உண்டாகும் சுக்கிலம் என்னும் விந்துதான் குற்றம் செய்வதற்கு தூண்டுகோலாக இருக்கின்றன.அதுவே இளமை மாறி முதுமை அடைந்து இறுதியில் மரணத்திற்கும் காரணமாக இருகின்றன.இளமையில்,ஆண்கள் ,பெண்கள், காதல் என்னும் வலையில் சிக்குவதற்கு காரணமாக இருப்பதும் சுக்கிலமாகிய விந்துவே காரண காரியமாக செயல்படுகின்றன,என்பதையும் அறிந்து கொள்ளவேண்டும்.
பொருள் உணவு உண்ணாமல் அருள் உணவு உண்பவர்களுக்கு மரணம் நீங்கும் என்கிறார் வள்ளல் பெருமான்.அவர் சொல்லுவதைப் பாருங்கள்.
காரமும் மிகுப்புளிச் சாரமும் துவர்ப்பும்
கைப்போடே உப்போடே கசப்போடே கூட்டி
ஊரமுதுண்டு நீ ஒழியாதே அந்தோ
ஊழி தோறு ஊழியும் உலவாமை நல்கும்
ஆரமுது உண்டு என்னோடே ஆடடேடி பந்து
அருட்பெருஞ் ஜோதி கண்டு ஆடடேடி பந்து !
என்றும் ,
சோற்று ஆசையோடு காமச் சேற்றாசைப்
படுவாரைத் துணிந்து கொள்ளக்
கூற்றாசைப் படும் என நான் கூறுகின்றேன்
உண்மை இனிக் கொண்டு நீவீர்
நேற்றாசைப் பட்டவருக்கு இன்று அருள்வார்
போலும் அன்றி நினைத்த வாங்கே
பேற்றாசைக் அருள்புரியும் ஞானசபா
பதிப்புகழைப் பெசுவீரே !
என்பதை தெளிவுப்படுத்தி உள்ளார் நமது வல்லபெருமான்.
மனிதன் தவறு செய்வதற்கும்,குற்றம் செய்வதற்கும் அடிப்படைக் காரணம் உணவுதான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ஆண்மநேயன் ;--கதிர்வேலு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு