மலிவு விலை உணவு திட்டம் பாராட்ட வேண்டியது !
மலிவு விலை உணவு திட்டம் பாராட்ட வேண்டியது !
வள்ளலார் கொள்கைக்கு தொடர்பு உடையதாகும்.நாங்கள் ஈரோட்டில் இந்த திட்டத்தை கொண்டு வருவதற்கு ஐந்து வருடத்திற்கு முன் முயற்சி செய்தோம்.காலதாமதமாகிக் கொண்டே வந்தது.இப்போது அரசாங்கமே கொண்டு வந்துள்ளது பெருமையாகவும் பாராட்டும்படியாக உள்ளது.இந்த திட்டம் வரவேற்க வேண்டிய திட்டம் .இதை தொய்வு இல்லாமல் நடத்த அரசாங்கம் விழிப்புடன் செயலாற்ற வேண்டும்..
பட்டினி உற்றார் பசித்தனர் களையால் பரதவிக்கின்றனர் என்றே ஒட்டிய பிறராற் கேட்ட போதெல்லாம் உளம் பகீர் என நடுக்குற்றேன் ,இட்ட இவ்வுலகில் பசிஎனில் எந்தாய் என்னுளம் நடுங்குவது இயல்பே ..வள்ளலார்
இறைவன் படைத்த உலகில் எந்த உயிர்களும் பசியோடு வருந்து கின்றதை பார்த்துக் கொண்டு இருக்க முடியாது என்பதால்தான் ,1867,ஆம் ஆண்டு வடலூரில் இலவச தருமச்சாலையை தோற்றுவித்து இன்றுவரை தொடர்ந்து தொய்வு இல்லாமல் நடந்து வருகிறது.
அதேபோல் இந்த மலிவு விலை உணவு சாதாரண ,அசாதாரண மக்களுக்கும் பயன் உள்ளதாக இருக்கும்.இவை ஓர் அற்புதமான திட்டம்.இந்த திட்டத்தை கொண்டு வந்த தமிழக முதல்வருக்கு நன்றியையும் பாராட்டுதலையும் ,வாழ்த்துகளையும் ,சன்மார்க்கி எனற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன் .வாழ்க பல்லாண்டு.
ஆண்மநேயன் ;--கதிர்வேலு.
2 கருத்துகள்:
நல்ல திட்டம்... சிறப்பாக நடைபெற வேண்டுகிறேன்...
உங்கள் நல்ல எண்ணம் நிறைவேறட்டும் ,நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்.நன்றி வாழ்த்துக்கள்.
அன்புடன் ஆண்மநேயன்.கதிர்வேலு.
கருத்துரையிடுக
இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]
<< முகப்பு