செவ்வாய், 31 ஜனவரி, 2012

வடலூரில் உண்ணா விரதம் !



வடலூரில் உண்ணா விரதம் !

நாள் ;--8--2--1990.--வியாழன் .அன்று உண்ணா விரதப் போராட்டம் !

திருஅருட்பிரகாச வள்ளலார் திருஅருட்பாவில் எழுதி உள்ளபடி,வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள் 118,ஆண்டுகளாக செயல் படவில்லை என்பதை கண்டித்து வடலூர் தருமச்சாலை முன் உண்ணாவிரதப போராட்டம்

சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தின் உலகப் பிரச்சார இயக்கத்தின் சார்பாக சங்கத்தின் தலைவர் பொதுச்செயலாளர்,ஆன்மநேயர் திரு, செ,கதிர்வேல் அவர்கள் தலைமையின் கீழ் கண்ட கோரிக்கைககளை முன் வைத்து உண்ணாவிரதம் போராட்டம் நடை பெற்றது .

1) வடலூர் சத்திய ஞான சபையில் ஜோதி வழிபாடு தவிர உருவ வழிபாடு          செயல் பட கூடாது

2) சத்திய ஞானசபையின் உள்ளே அன்ன அபிஷேகம் .நெய்வேத்தியம் ,சித்தரா அன்னம் ,படைத்தல் முதலிய சாதி,சமய,மத ஆசாரங்கள் செய்யக் கூடாது.

3) சத்திய ஞானசபையில் பூசகராக இருப்பவர் 12, வயதுக்கு உட்பட்ட சிறுவர் அல்லது 72, வயதுக்கு மேற்பட்ட பெரியவரைக கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் .

4} சத்திய ஞானசபை பூசகர் சாதி,சமய ,மத இனம் பொழி ,போகம் முதலியவை இல்லாதவராக இருக்க வேண்டும் .

5) சத்திய ஞானசபையில் ஜோதி தரிசனம் பார்ப்பதற்கு பணம் கட்டணம் வசூலிக்க கூடாது ..

6) சத்திய ஞானசபையிலும்,சத்திய தருமச்சாலையிலும் கண்டாமணி,கைமணி,ஒலியும்,
மேலதாள ஓசைகளும் சமகிருஷ்த ஆசார சங்கற்ப விகற்பங்களும் ஆராவாராமும் ஊர்வலமும் .செயல்படக் கூடாது .

7) வடலூரில் உள்ள தருமச்சாலை, சத்திய ஞானசபை,அடங்கிய  பெருவெளியை சுற்றிலும் பாதுகாப்பான மதில் சுவர்கள் அமைக்க வேண்டும்

8) ஞானசபையில் பகதர்கள் ஜோதி தரிசனம் பார்ப்பதற்கு வசதியாக பகல் முழுவதும் ஞானசபைக் கதவு திறந்தே இருக்க வேண்டும் .

9) வடலூர் மாதப் பூசத்திற்கும்,தைப் பூசத்திற்கும் வரும் பக்தர்களுக்கு நிரந்தரமான கழிப்பிட வசதி செய்து கொடுக்கப்பட்ட வேண்டும் .

10 ) சத்திய தருமச்சாலை ஐந்து ஆண்டுகளாக பழுது பார்க்காமலும் ,புதுப்பிக்காமலும்,இருக்கிறது உடனடியாக புதிய தருமச்சாலைக் கட்டிடம் பெரிய அளவில் கட்டப்பட வேண்டும்.

11)சத்திய தருமச்சாலையில் நடக்கும் ஊழலையும் ,அனைத்து மக்களுக்கும் பொதுவான உணவு வழங்கும் முறையும்,சுகாதார முறையில் உணவு  வழங்கவும் ஆவண செய்யவேண்டும் .

12)  இந்து சமய அறநிலையத் துறையிடம் உள்ள வடலூர் வள்ளலார் அமைப்புகள் அனைத்தும் தெய்வ நிலைய தலைமைச சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் ,

13) வடலூர் தெய்வ நிலையங்கள் சாதி சமய,மதம் ,இனம், மொழி,நாடு போன்ற வேறுபாடு அற்ற உலகப் பொது நிலையங்களாக மாற்ற வேண்டும்.

14)தற்போது உள்ளவர்களும் இனி வருபவர்களுமான அரசு ஊழியர்களும் .அறங்காவலர்க் குழுவும் மது, மாமிசம் உண்ணாதவர் களாக இருக்க வேண்டும் .

15) மாதப் பூசத்திற்கும் தைப பூசத்திற்கும் வடலூர் பெருவெளிக்கு உட்புறம் வெளியில் இருந்து வரும் கடைகள் எதுவும் வைக்க கூடாது.அப்படி வைத்தால் சமயக் கோவில்கள் போலாகி விடும் .

16) வள்ளலார் தெய்வ நிலையங்கள் உலக அதிசிய சுற்றுலா மையமாக அமைக்க அறிவிக்க வேண்டும் .

17) திருஅருட்பா சம்பந்தமான நூல்கள் யாவும் தெய்வ நிலையங்கள; சார்பில் வெளியிட வேண்டும் .

18)சென்னையில் வள்ளலார் வாழ்ந்த இல்லத்தை வள்ளலார் நினைவு இல்லமாக தமிழக அரசு அமைக்க அறிவிக்க வேண்டும்.

19) வடலூர் தெய்வ நிலையங்களை சுற்றிலும் தனியார்கள் ஒலி பெருக்கி அமைக்க காவல் துறை அனுமதி வழங்கக் கூடாது.

20) வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கும் ,வெளி நாட்டில் இருந்தும் வருபவர்கள் தங்குவதற்கும் வசதியாக தங்கும் விடுதிகள் அமைத்து வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும் .

21, வடலூர் விருத்தாசலம் ரோட்டினை அகலப்படுத்த ,.தனியார கடைகளை அப்புறப் படுத்தி ,மக்கள் போக்குவரத்துக்கு வசதி செய்து கொடுக்க வேண்டும் .

மேலே கண்ட கோரிக்கைகளை தமிழக அரசுக்கும்,அறநிலையத் துறைக்கும் பொது மக்களுக்கும் தெரியப் படுத்த, தைப்பூசத்தன்று உண்ணா விரதம் இருக்க   வடலூர் காவல் துறையிடம் அனுமதி கேட்டோம் ,அனுமதி தர மறுத்து விட்டார்கள் மற்ற நாட்களில் செய்யுங்கள் அனுமதி தருகிறோம் என்றார்கள் .

நாங்கள் மற்ற நாட்களில் உண்ணா விரதம் இருந்தால் மக்களுக்கு தெரியாது ஆதலால் நீங்கள் அனுமதி தந்தாலும் தராவிட்டாலும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட நேரத்தில் உண்ணா விரதம் இருப்போம் என்று சொல்லி விட்டோம் தைப்பூசம் நெருங்கும் தருணத்தில என்னை னைத்து செய்ய காவல் துறையினர் தேடிக் கொண்டே இருந்தார்கள் .அவர்கள் கண்களில் சிக்காமல் குறிப்பிட்ட நேரத்தில் தருமச்சாலையின் முன் புறத்தில் திடீர் என எங்கள் துணைவியார் அமுதா, எங்கள் மாமானார் அருணாச்சலம்,சென்னை அன்பர்கள் சீனிவாசன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் உண்ணா விரதத்தை தொடங்கினோம் .

மக்கள் குவிந்து விட்டனர் ,காவல் துறையும் குவிந்து விட்டனர்.எங்களை உண்ணாவிரதம் இருக்க தடை செய்தனர் நாங்கள் மறுத்தோம் .எங்களை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றார்கள் .காவல் துறை  அலுவகத்திலே மாலை வரை உண்ணா விரதம் இருந்தோம் மாலை சுமார் ஆறு மணிவரை இருக்க அனுமதி வழங்கி ,காவல்துறை ஆய்வாளர் மாலையில் எங்களுக்கு பாலும் பழமும் கொடுத்து உண்ணா விரதத்தை நிறைவு செய்து வைத்தார் அவர்களுக்கு நன்றியும் வணக்கத்தையும் தெரிவித்து விடைப பெற்றோம் .இவை உண்ணாவிரதம் செய்த காட்சியாகும் மேலும் விரிக்கில் பெருகும்

உண்ணா விரதம் முடிந்து சில மாதங்களில் தருமச்சாலை புதிய கட்டிடம் கட்டப்பட்டது முதல் துகையாக என்னுடைய சிறு தொகையுடன் மற்றும் சன்மார்க்க அன்பர்கள் கருணைத் தொகையுடன் இனிதே கட்டிடம் நிறைவு பெற்றது

அடுத்து ஞானசபை பூசகர் மாற்றப் பட்டது .அன்பர்கள் தங்கும் விடுதி பத்து அறைகள் கட்டப்பட்டுள்ளது .சபைமுன் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. தருமச்சாலை மேடை கட்டப்பட்டுள்ளது கல்பட்டு ஐயா சமாதி விரிவு படுத்தப்பட்டுள்ளது தருமச்சாலையில் அமர்ந்து உணவு உண்ணும வகையில் டேபிள ,சேர போடப்பட்டுள்ளது .ஞானசபை முன் உள்ள விருத்தாசலம் நெடுஞ்சாலையில் உள்ள கடைகளை அகற்றி அகலப்படுத்தப் பட்டுள்ளது,மேலும் நிறைய சீர் திருத்த பணிகள் ஏராளம் உள்ளன ,

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களை தமிழக அரசும் ,இந்து அறநிலையத் துறையும் தனி கவனம் செலுத்த வேண்டும்

வள்ளலார் தமிழ் நாட்டில் தோன்றியதற்கு தமிழ் நாட்டு மக்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும் .உலகமே தமிழ் நாட்டில் உள்ள வள்ளலார் கொள்கைகளை பின் பற்ற வேண்டும் என்று வருகை புரியும் காலம் நெருங்கிக் கொண்டே இருக்கிறது .

ஆன்மநேயன்;--கதிர்வேலு.
  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு