வியாழன், 8 செப்டம்பர், 2011

போதும் என்ற மனமே பொன செய்யும் மருந்து !

இவ்வுலகில் ஞானம் ,கல்வி,விஞ்ஞானம்,தத்துவம் ,இவைகளில் தேர்ச்சி அடைந்தவர்கள் எல்லாம் கவலை இல்லாமல் வாழ்கிறார்களா ?பெரிய கோட்டீஸ்வரன், தான் கவலைப் படாமல் சந்தோசமாக வாழ்கிறார்களா ? என்பதை தெரிந்தால் சொல்லுங்கள் .யாராலும் சொல்ல முடியாது.

ஒரு சாதாரண மனிதன் கல்வி அறிவில்லாதவன் உலகியல் ஞானமோ ,விஞஞானமோ,எதுவும் தெரியாதவன் சூரியன் ஏன் கிழக்கில் தோன்றி மேற்கில் மறைந்து பின் மீண்டும் கிழக்கில் உதிப்பது ஏன் என்ற அடிப்படை விஞஞானம் கூடத தெரியாதவன் அன்றாடம் உழைத்து ஏதோ கிடைப்பதைச சாப்பிட்டு விட்டு சந்தோசமாக இருக்கிறான்.அவன் திருப்தி அவன் முகத்தில் தெரிகிறது .என்ன காரணம் ?எதையுமே அவன் பெரியதாக அலட்டிக் கொள்வதில்லை எதையும் பொருட்படுத்தாமல் வாழ்கிறான் அவன் மனத் திருப்தியே காரணமாகும் .

ஒவ்வொருவரும் தனக்கு ஏற்ப்பட்டுள்ள வாய்ப்பு வசதிகளைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும்,மனது திருப்தி யானால் மன அமைதி உண்டாகும்.கவலைகள் மறைந்து போகும். .நமக்கு கிடைத்த வாய்ப்புகளை கொண்டு நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளவேண்டும்.புதியதாக நமது தேவைகளை பெருக்கிக் கொண்டு அதை அடைய முடியவில்லையே என கவலை கொள்ளுதல் கூடாது.அதற்காக ஏங்கி பெருமூச்சு விடவும் கூடாது.

தன்னை விட எத்தனை பேர் இந்த அடிப்படை வசதிகள் இன்றி உணவின்றி,,இருக்க நிழல் இன்றி, கஷ்டப் படுகிறார்கள் என்பதை கவனியுங்கள்.எத்தனை பேர் தீராத நோய்களினால் வாடுகிறார்கள் என்பதை கவனியுங்கள் .இவர்களை விட நாம் எத்தனையோ மடங்கு மேன்மை நிலையில் இருக்கிறோம் என்பதை உணர்ந்து திருப்தி அடையுங்கள்.மகிழ்ச்சியடையுங்கள்.கவலைகள் யாவும் பறந்து ஓடிவிடும் .

உலகில் நாம் பிறந்ததே இன்பமாக சந்தோசமாக வாழ்வதற்கே பிறந்துள்ளோம்.அதற்கான சகல வசதிகளும் இவ்வுலகில் உள்ளது.நாம் தேர்ந்தெடுக்கும் முறையிதான் தவறு செய்கிறோம் .

உலகம் ஒரு பாலைவனம் 'இங்கு இன்பமே இல்லை வரண்டு கிடக்கிறது ,என தனக்குத் தானே எண்ணிக கொண்டு உலகை வெறுத்தல் ஆகாது .மகிழ்சியை தருவது எது ?அதை எப்படி அடையவேண்டும் என்ற வழியைப புரிந்து கொண்டால். ;போதும் போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து ;;இதை உணர்ந்தவர்களுக்கு இவ்வுலகம் சொர்க்க பூமியாகவே தெரியும் .    

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு