செவ்வாய், 6 செப்டம்பர், 2011

தாவரங்களும் உயிர்கள்தான் /


தாவரங்களும் உயிர்கள்தான் /


அன்புள்ள நண்பரே தாவரங்களும் உயிர்கள்தான் அதையும் வேரோடு பிடுங்கி சாப்பிடக் கூடாது.தாவரங்களில் உள்ள காய் கனி, கீரைகள் இவைகளை உண்ணலாம் ,அது உயிர்க் கொலை அல்ல ,எதுபோல் என்றால் .நம் உடம்பில் உள்ள நகம ,முடி இவைகள் வெட்டுவதால் நமக்கு துன்பம் இல்லை அதுபோல் தாவரங்களை பரிப்பதால் உயிர்க் கொலை அல்ல,,
அடுத்து தானியங்களை உண்ணலாம் அதில் உயிர் இல்லை அது விதைத்தால் ஐம பூதங்கள்,மண் ,நீர் கனல் ,காற்று ,ஆகாயம் இவைகள் ஒன்று  சேரும்போதுதான் உயிர் உண்டாகும் .

அடுத்து நம்மால் ஒரு உயிரை உருவாக்க முடியாததை அதை அழிக்க நமக்கு உரிமையும் இல்லை.இயற்கை சட்டமும் இல்லை அப்படியும் மீறி செய்தால் நமக்கு இயற்கை தண்டனை உண்டு .அதுதான் துன்பமும் துயரமும் ,அச்சமும் பயமும் வந்து நம்மை மரணத்திற்கு கொண்டு செல்கிறது இதுவே பெரிய தண்டனையாகும் .

அடுத்து பிறவி எது என்பதே தெரியாத சண்டாள தேகம் கிடைக்கும் .மறுபடுயும் உயர்ந்த பிறப்பாகிய மனித தேகம் கிடைப்பது அறியதாகும் அதனால் மனித அறிவு கிடைத்த நாம் எந்த உயிரையும் கொள்ளக் கூடாது என்பது இறைவன் ஆணையாகும் .அதையும் மீறி செய்தால் அதனால் வரும் துன்பத்தை அடைந்தே தீர வேண்டும் .

மனித பிறப்புகள் பல கோடி ஆண்டுகள் கடந்து கிடைத்த மாபெரும் பொக்கிஷமாகும் .அதை காப்பாற்றிக் கொள்வது அவரவர்களின் முக்கிய செயல்களாகும் காப்பாற்றுவோம் கரை சேருவோம் .

அன்புடன் கதிர்வேலு

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு