வெள்ளி, 9 செப்டம்பர், 2011

சுவாமி அழகப்பன் ஐயா அவர்களுக்கு !


சுவாமி அழகப்பன் ஐயா அவர்களுக்கு !
ஐயா அவர்களே சுத்த சன்மார்க்கம் எனபது எதுவென்று நீங்கள் விளக்க முடியுமா .உங்களால் விளக்க முடியாது .ஏன் விளக்க முடியாது. கிழே உள்ள பாடலைப் பாருங்கள் அந்தப் பாடலில் உள்ளபடி வாழ்ந்தால் விளக்க முடியும் நீங்கள் அப்படி வாழ்க்ரஈர்களா என்பதை உணருங்கள் !
ஆகமாந்தமும் வேதத்தின் அந்தமும் அறையும்
பாகமாம் பரவெளி நடம பரவுவீர் உலகீர்
மாக மாந்தருக்கு உரைத்திலேன் இது சகம் முன்னும்
யோக மாந்தருக்குக் காலம் உண்டாகவே உரைத்தேன் .
என்கிறார் வள்ளலார் .இதில் நீங்கள் எந்த நிலையில் இருக்கிறீர்கள் என்பதை உணருங்கள் .உலகியல் இன்பங்கலையே விடமுடியாமல் வாழ்ந்து கொண்டு சுத்த சனமார்க்கத்தை மற்றவர்களுக்கு உரைத்தால் அவை நிறைவு பெறுமா ,சிந்திக்க வேண்டும் .நாம் உண்ணாமல் உறங்காமல இருக்குரோமா?நரை திரை பிணி .மூப்பு,பயம் இல்லாமல் இருக்கிறோமா ?என்பதை நம்மை பரிசோதித்துக் கொள்ளவேண்டும் .நாம் பணம் பொருள் .வீடு இல்லாமல் இருககிரோமா ?நாம் என்றும் இளமையோடு இருக்குரோமா ?என்பதை உணர்ந்தால் நாம் சுத்த சன்மார்க்கத்தை போதிக்க தகுதியுள்ளவர்களா என்பது புரியும் .
நாம் முதலில் கொலை புலைத் தவிர்க்க மக்களுக்கு போதிப்போம் .ஒழுக்கம் தானே வரும் அதன் பின் மக்கள் உண்மை எது பொய் எது என்பதை உணர்வார்கள் .அதன் பின் சுத்த சன்மார்க்கத்தை நாம் பெற்று மற்றவர்களுக்கு போதிப்போம் .
அன்புடன் ஆனமநேயன் .கதிர்வேலு
 ·  · பகிர்தல் · நீக்க

1 கருத்துகள்:

11 செப்டம்பர், 2011 அன்று PM 11:02 க்கு, Blogger http://machamuni.blogspot.com/ கூறியது…

மதிப்பிற்குரிய ஐயா சுத்த சன்மார்க்கம் என்பது தன்னுயிரை கொல்லப்படாமல் காத்துக் கொள்வதே!மற்ற உயிர்களை தன்னுயிர் போல எண்ணி செயல்படுதல்.இவை மட்டுமன்றி நாம் கொல்லாவிட்டாலும் அந்த உயிர் ஒரு நாள் இறந்தே தீரும்.நம் உயிரின் இறப்பையே தடுக்க முடியாத நம்மால் அடுத்த உயிரை மரணத்திலிருந்து எப்படி காக்க முடியும்.சுத்த சன்மார்க்கம் எது என என்னால் விளக்க முடியாது என்ற தீர்மானத்தில் இருக்கும் உங்களுக்கு என்னால் விளக்க முடியுமா என்று தெரியவில்லை.இல்லறத்தில் இருந்தாலும்,வீடு இருந்தாலும்,பணம் பொருள் இருந்தாலும் ஞானம் சித்திக்காது என்று யார் உங்களுக்கு சொன்னதோ?அவை இருந்தாலும் அவற்றின் மீது பற்றில்லாமல் இருக்க வேண்டும் என்பதே உண்மை!உடல் எப்போதும் பிணியின் வசப்படக் கூடியதே.சைவ உணவு சாப்பிடுபவரையும் வியாதி என்னும் விதி விடுவதில்லை.

""""பஞ்ச மாபாதகங்கள் பன்னூறு கோடி செய்யினும் பஞ்சு போல் பறக்கும் என்று நான்மறைகள் பன்னுமே""" என்ற சிவ வாக்கிய சித்தரின் மணி மொழிகளைக் கேட்டதில்லையா?படித்ததில்லயா?உணர்ந்ததில்லயா?கழிந்து போகும் பிராணனை தடுத்து நிறுத்தி தனது மரணத்தை வெல்ல வல்லான் எவனோ அவனே சுத்த சன்மார்க்கன். அது மட்டுமல்ல பாடல்கள் பல எழுதியதை மேற்கோள் காட்டலாம்,அவற்றின் உண்மைப் பொருளை அறிவதற்கு சித்தர்களின் சாவி தரப்பட வேண்டும்.வள்ளலாரும் எங்கள் மச்ச முனிச் சித்தரின் வழி வந்த சித்த புருஷரே!அவர் கூறியிருப்பதிலும் பல உண்மைப் பொருளை அறியாமல் எதையும் புரியாமல் கொலை புலை தவித்தல்,பக்தி,வழிபாடு, பசிப்பிணி தீர்த்தல் என்று பல வழிகளில் அவரைத் தொடர முயன்று கொண்டிருக்கிறார்கள்.உண்மைக் கருத்து அதுவல்ல.இவை எல்லாம் அவர் ஆரம்ப காலத்தில் கையாண்டவை,அவர் உண்மைப் பொருள் உரைத்திருப்பது அவரது ஆறாவது தந்திரத்தில் மட்டுமே.ஆறாவது தந்திரம் படித்து,அது புரிந்தால்? மட்டுமே சுத்த சன்மார்க்கன் ஆகலாம்.(விதி இருந்தால்தான் மதியும் வேலை செய்யும்).""""மற்றவர்களை எப்போதும் நீங்கள் எடைபோடாதீர்கள்.(don't judge others)""" என்று எங்களது மாஸ்டர் லின் மங் டாங் அவர்கள் கூறுவார்கள்.அதையே உங்களுக்கு நான் சொல்லுகின்றேன்.
மிக்க நன்றி
என்றென்றும் பேரன்பினால்
சாமீ அழகப்பன்

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு