செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

முருகன் .பேரறிவாளன் ,சாந்தன் அவர்களின் தூக்குதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் !


முருகன் .பேரறிவாளன் ,சாந்தன் அவர்களின் தூக்குதண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் !

இந்திய ஜ்னாதிபதியின் பதிவி மிகவும் உயர்ந்த பதவி ஆனால் அவர்கள் அந்த அதிகாரத்தை பயன் படுத்துவதில்லை ஆளும் கட்சிக்கு சாதகமாகவே இருக்கிறார்கள் .ஒரு கருணை மனு போனால் அதை ஆதரிக்கவோ நிகாரிக்கவோ அவர்களுக்கு முழு அதிகாரம் உள்ளது அதுவும் தூக்கு தண்டனை என்று வந்தால் நிச்சயம் மனிதாபமான முறையில் தடுக்கலாம் .அதற்கு சட்டம் தேவை இல்லை ஆயுள் தண்டனை வழங்கலாம் .குற்றவாளி ஆயுள் முழுவதும் சிறையில் இருப்பதே பெரிய தண்டனை ஆகும் .தூக்குதண்டனையை விட அதுவும் கொடுமையான தண்டனைதான் .இருந்தாலும் அவர்களை பெற்று வளர்த்த தாய் தந்தையர்கள் என்மகன் உயிரோடு இருக்கிறான் என்ற மகிழ்ச்சியோடு இருப்பார்கள் .இந்த உலகத்திற்கு அவர்கள் வருவதற்கு காரண காரிய மாக இருந்த அவர்களுக்கு இந்த நாட்டில் துன்பமும் துக்கமும் இல்லாமல் வாழ்வதற்கு வழி காட்டுவதுதான் ஒரு அரசாங்கத்தின் மனிதாபிமான நீதியாகும் .அதை இந்த அரசாங்கம் ஏன் செயல்படக் கூடாது.இந்திய குடிமகன் என்ற பொறுப்பில் உள்ள குடியரசு தலைவர் அவர்கள் ஆண்மநேயத்தொடு இந்த மூவருக்கும் துக்கு தண்டனையை தவிர்த்து ஆயுள் தண்டனை தருவதில் எந்த சிக்கலும் இல்லை .இவை மனிதாபமான செயல் என்று உலகமே போற்றுமே தவிர தூற்றாது .இந்தியாவுக்கே பெருமையாகும் இந்திய அரசாங்கம் இதை நினைவில் கொள்ள வேண்டும்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு