செவ்வாய், 30 ஆகஸ்ட், 2011

ஒரே கடவுள் !நண்பருக்கு கேள்வி பதில் !


ஒரே கடவுள் !

கடவுள் ஒன்று என்று மக்கள் என்று உறுதியாக உணர்கிரார்களோ அன்று மனிதன் தெளிவடைந்து விட்டான் என்பது பொருளாகும் .உண்மைக்கு புறம்பான கடவுள் கொள்கைகளை சுய நலத்திற்காக நம் முன்னோர்கள் படைத்து விட்டார்கள்.பாமர மக்கள் அதை உண்மை என்று நம்பி விட்டார்கள்.அதனால் ஏற்பட்ட குழப்பம்தான் இத்தனைக்கும் காரண காரியங்களாகும் .


நம் உடம்பிற்குள் ஒரு உயிர்தான் இருப்பது எப்படி உண்மையோ அதே போல் இந்த உலக்த்திற்கு ஒருகடவுள்தான் உண்மையான கடவுள் என்பதை உணரவேண்டும் .அப்படி உணர்ந்தால் நம்மிடம் உள்ள வேறுபாடுகள் இல்லாமல் ஒற்றுமையாக வாழலாம்.
28 ஆகஸ்டு 2011, 11:13 க்கு Kathir Kathirveluஆல்
இதைத்தான் வள்ளலார் ஒருமையில் உலகெலாம் ஓங்குக என்றார் .
அன்புடன் ஆன்மநேயன் ;-கதிர்வேலு .
 ·  · பகிர்தல் · நீக்க
  • Saravanan St இதை விரும்புகிறார்.
    • விஜயக் குமார் கடவுள் ஒன்று என்று தாங்கள் அனுபவ பூர்வமாக உணர்ந்து சொல்கிறிர்களா அல்லது , நூல்களில் படித்ததை சொல்கிறிர்களா ?.
      ஞாயிறு, 11:29 க்கு ·  ·  ஒருவர்
    • Kathir Kathirvelu அனைத்தும் அனுபவம்தான் .அறிவை தெளிவுபடுத்தினால் அனுபவம் தானே வரும் .இதற்கு நூல்கள் தூண்டுதல் தானே ஒழிய அனுபவம் தானே வர வேண்டும் .அனுபவித்தால்தான் உண்மையை உணர முடியும்.படிப்பால் அறிவது உண்மையல்ல அனுபவத்தால்அறிவதுதான் உண்மையாகும் .
      ஞாயிறு, 12:31 க்கு ·  ·  ஒருவர்
    • விஜயக் குமார் 
      கடவுள் ஒருவர் உள்ளார் என்றும் , அவர் ஒருவர் தான் , என்பதும் தாங்கள் படித்த நுல்களின் வாயில்லாக தங்கள் கொண்டிருக்கும் '' நம்பிகையே '' தவிர உண்மை அல்ல ..அதையும் தாங்கள் அனுபவமாக உணர்ந்ததாக சொல்லவது நகைப்பிற்கு உரியதே . தங்கள் அறிவின் வழியே கடவுளை அறிந்திருதால் , அதுவும் ''அனுபவமாக '' உணர்திருந்தால் , தாங்களே இவ் வுலகின் மாமனிதர் .இவ்வுலகில் எளியோரகிய எம்போன்றவற்கு கடவுளை அறிந்த , அதிலும் அவர் ஒருவரே என அறிவு , அனுபவம் மூலம் தெளிவாக தெரிந்த தாங்கள்,பிறரும் பயனுற அவ்வழிதனை விளக்கிட வேண்டுகிறேன் ..
      ஞாயிறு, 15:10 க்கு ·  ·  ஒருவர்
    • Kathir Kathirvelu 
      அனுபவம் என்பது அவரவர்கள் அறிவில் விளங்குவது அதை மற்றவர்கள் சொல்லி உணரமுடியாது .அப்படி சொன்னாலும் அவர்களால் உணரமுடியாது அதை அனுபவித்தால்தான் தெரியும் .ஒரு பழம் ருசியாக இருக்கிறது என்று சொன்னால் அதை ருசிக்காமல்அறியமுடியாது .ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் .நம் உடம்பில் உயிர் இருக்கிறது அதை பார்க்க முடிகிறதா பார்க்கமுடியவில்லை என்பதால் உயிர் இல்லை என்பதாகாது .நான் என்னுடைய உயிரைப் பார்க்கிறேன் என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள் ஆனால் நான் என்னுடைய உயிரைப் பார்க்கிறேன் .அந்த உயிரைப் போல்தான் அனைத்து உயிர்களிலும் கடவுள் ஒளியாக உள்ளார் அவரே அருட்பெரும்ஜோதியாக உள்ளார் .அவர் மனித உருவம் அல்ல,இந்த அண்டங்களை இயக்கம் மாபெரும் ஆற்றல் உடைய ஒளியாகும் .அதை எப்படி நான் உங்களுக்கு காட்ட முடியும் .அதை நாம் எந்த பற்றும் இல்லாமல் ஒழுக்கமுடன் வாழ்ந்தால் அறியலாம் .நம்மிடம் எந்த பொருளும் இல்லாமல்,எல்லாம் கடவுள் உடையது அதை நாம் சொந்தம் கொண்டுவாழ்வது தவறானது என்பதை உணர்ந்து நம்முடைய உயிர்தான் நம்மை இயக்குகிறது அதுவே கடவுளாகும் என்பதை அறிவு மூலமாகஉணரவேண்டும் .அதுவே அனுபவமாகும் .
      ஞாயிறு, 23:11 க்கு · 
    • விஜயக் குமார் தங்களின் கூற்றை படிக்கும் பொது , தாங்கள் எத்தனை குழம்பி போயுள்ளிர்கள் என தெரிகிறது .
      முன்னுக்கு பின் முரணான கருத்துக்கள் ..
      நேற்று 15:03 மணிக்கு · 
    • விஜயக் குமார் 
      தங்களுக்கு உயிர் உள்ளது , நம்புகிறேன் ,அதுப்பற்றி எமக்கு சந்தேகமில்லை .
      எம் கேள்வி மிக எளிமையானது , கடவுள் ஒருவர் தான் என்று சொல்கிறிர்களே அது நூலறிவா ,அல்லது அனுபவமா என்றேன் , அதற்கு தாங்கள் அனுபவமே என்று சொன்னிர்கள் .
      அவ்வாறெனில் கடவுள் உள்ளார் என்பதை அறிந்த ஒருவரால் மட்டுமே கடவுள் ஒருவரா/ பலரா என கூறமுடியும் . தாங்கள் கடவுள் ஒருவர் தான் என்றும் , அதுவும் அறிவின் துணைகொண்டு அனுபவமாக உணர்ந்ததாக சொல்கிறிர்கள் .எனவே ,
      தங்களால் இவ்வுலகு பயனுற தாங்கள் கடவுளை அறிந்த வழிதனை கேட்கிறேன் .ஆனால் வழிதனை சொல்ல மறுக்கிறிர்கள்.
      இவ்வுலக மாந்தர் அனைவர்க்கும் அனுபவம் பொதுவாகவே அமையும் , உதாரணம் : அனைவரிடமும் சர்க்கரையை கொடுத்து சுவைக்க சொன்னால் , அனைவரும் இனிப்பாக உள்ளதாக சொல்வர் . நான் தங்களிடம் கேட்பது சர்க்கரையை ( வழி தனை ) தானே ஒழிய , அதன் சுவையை அல்ல .
      ஒழுக்கமும் , பற்றற்று இருந்தால் கடவுளை அறியலாம் (இதுவே முரண் ,முதலில் அனுபவம் என்று சொல்லிவிட்டு பின்னர் அறியலாம் ? என சொல்வது ) என சொன்னால் , இவ்வுலகில் உள்ள ஒழுக்கமான பற்றற்ற அனைவர்க்கும் ,கடவுள் உள்ளார் என்றும் , அவர் ஒருவர் தான் என்னும் அனுபவம் ஏற்பட்டிருக்க வேண்டுமே .?
      அல்லது உலகில் தாங்கள் மட்டும் தான் பற்றற்ற , ஒழுக்கமுடைவரா ?
      அப்ப நாங்களெல்லாம் ?எங்களுக்கு என் கடவுள் அனுபவம் ஏற்படவில்லை ?
      கடைசில ஒன்ன சொன்னிங்க பாருங்க" உயிர் தான் கடவுளுன்னு " அட இராமா.....
      16 மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      அட ராமா என்பது படித்துவிட்டு பழக்கத்தில்வந்தது .பழக்கம் என்பது வேறு உண்மை அறிவது வேறு உயிர்தான் கடவுள் என்பதை கிண்டல் செய்கிறீர்கள் உயிர் இல்லாமல் நீங்கள் இயங்க முடியுமா உயிர் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது .அந்த உயிர் என்பது என்ன அதன் தன்மை என்ன அதன் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்தால்தான் கடவுள் நிலையை உணர முடியும் .உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும் .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள் .கடவுள் அருள் என்னும் ஒளியாக உள்ளார் அதன் துளிகளாக உயிர் ஒளியாக அனைத்து உடம்பிறகுள்ளும் இயக்கமாக இயங்கிக் கொண்டு உள்ளது .இத அறிய வேண்டுமானால் ஒழுக்கம் வேண்டும் .அறிவை மறைக்கும் உணவை உண்ணக கூடாது.இவைபோல் நிறைய கடைபிடிக்க வேண்டும் இதற்கு மனம் பக்குவப் படவேண்டும் .உழைக்காமல் எதுவும் கிடைக்காது .முயற்ச்சி செய்து பார்த்து விட்டு பிறகு பேசுங்கள் .வெருமென பேசுவதும் கேள்வி கேட்பதும் புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடுங்கள் .உண்மையை உணர உண்மையுடன் வாழவேண்டும் .போளியே உண்மையென்று நம்பிக் கொண்டு இருப்பதால் உண்மை தெரிவதில்லை .உன்னைதேடுங்கள் உன்னுள் இருக்கும் உண்மையைத் தேடுங்கள் .பின் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும் .;--அன்புடன் கதிர்வேலு.
      8 மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      அட ராமா என்பது படித்துவிட்டு பழக்கத்தில்வந்தது .பழக்கம் என்பது வேறு உண்மை
      அறிவது வேறு உயிர்தான் கடவுள் என்பதை கிண்டல் செய்கிறீர்கள் உயிர் இல்லாமல்
      நீங்கள் இயங்க முடியுமா உயிர் இல்லாமல் எதுவும் இயங்க முடியாது .அந்த உயிர்
      என்பது என்ன அதன் தன்மை என்ன அதன் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்தால்தான் கடவுள்
      நிலையை உணர முடியும் .உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை
      உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும்
      .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன
      தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள்
      .கடவுள் அருள் என்னும் ஒளியாக உள்ளார் அதன் துளிகளாக உயிர் ஒளியாக அனைத்து
      உடம்பிறகுள்ளும் இயக்கமாக இயங்கிக் கொண்டு உள்ளது .இத அறிய வேண்டுமானால்
      ஒழுக்கம் வேண்டும் .அறிவை மறைக்கும் உணவை உண்ணக கூடாது.இவைபோல் நிறைய
      கடைபிடிக்க வேண்டும் இதற்கு மனம் பக்குவப் படவேண்டும் .உழைக்காமல் எதுவும்
      கிடைக்காது .முயற்ச்சி செய்து பார்த்து விட்டு பிறகு பேசுங்கள் .வெருமென
      பேசுவதும் கேள்வி கேட்பதும் புத்திசாலித்தனம் என்பதை மறந்து விடுங்கள் .உண்மையை
      உணர உண்மையுடன் வாழவேண்டும் .போளியே உண்மையென்று நம்பிக் கொண்டு இருப்பதால்
      உண்மை தெரிவதில்லை .உன்னைதேடுங்கள் உன்னுள் இருக்கும் உண்மையைத் தேடுங்கள்
      .பின் அனைத்து உண்மைகளும் வெட்ட வெளிச்சமாக தெரியும் .;--அன்புடன் கதிர்வேலு.

      30 ஆகஸ்ட், 2011 12:39 am அன்று, Facebook <
      8 மணி நேரம் முன்பு via  · 
    • விஜயக் குமார் 
      ஒழுக்கம்

      பற்றற்ற நிலை

      உணவு ( சைவம் ?)

      உழைப்பு

      பக்குவபட்ட மனம்

      அறிவு

      உயிர்

      இவையெல்லாம் உங்களிடம் தான் உள்ளனவா, ? , இவைகளை கொண்ட பிறருக்கு ஏன் கடவுள் அனுபவம் ஏற்படுவதில்லை ?
      கடவுள் அனுபவம் கொண்டதாக கூறிகொள்ளும் தாங்களும் அதுபற்றி விளக்கமுடியாது என்கிறிர்கள் .
      தாங்கள் சொல்வது உண்மை என்பதற்கு என்ன அத்தாட்சி ?
      .
      சுமார் ஒரு மணி நேரம் முன்பு · 
    • விஜயக் குமார் 
      தங்கள் கூற்று :
      // உன்னிடம் உன்னை இயக்கிக் கொண்டு இருக்கும் உயிர் நிலையை
      உணர முடியாத நீங்கள் கண்ணுக்குத் தெரியாத கடவுள் நிலையை எப்படி உணரமுடியும்
      .உங்கள் உயிர் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் பிணம /அந்த பிணத்திற்கு என்ன
      தெரியும் அதுபோல் இன்று உயிர் இருந்தும் பிணமாக திரிந்து கொண்டு உள்ளார்கள் //

      சொந்த அனுபவத்தையே விளக்கிட முடியாத நீங்கள் , ஏன் உயிர் நிலை பற்றி எப்படி அறிவீர்கள் ?

      நான் உயிர் நிலையை உணர்ந்தேனா இல்லையா என்பது உங்களுக்கு எப்படி தெரியும்

      கூரை ஏறி கோழி பிடிக்க தெரியாதவன் , வானம் ஏறி வைகுண்டம் போனானாம் .

      நான் எல்லோரையும் போல் , பிணமாகவே போவேன் ,

      தாங்கள் ஒளிதேகம் பெற்று உய்விர்களா?

      1874 ஆண்டுக்கு பின்னர் ஒளிதேகம் பெற்றவர்களின் வரலாற்றை உலகம் அறியும் ...
      சுமார் ஒரு மணி நேரம் முன்பு · 
    • Kathir Kathirvelu 
      மேலே தெரிவித்த அனைத்தும் சராசரி மனிதன் உண்மையை அறிந்து கொள்ள தடையாக இருப்பதாகும் .அதை கடைபிடிப்பது உபகார ,உபாய மார்க்கமாகும் .உண்மை அறிந்து கொண்ட பின் அதை யாவையும் விட்டுவிட வேண்டும் சாதாரண அறிவு பேரறிவாகமாறும் .அதன் பின் அருள் அறிவாக மாறும்.அதன் பிறகுதான் அனைத்து உண்மைகளும் தெளிவாகும் .அதற்கு எவை எவை தடையாக இருக்கிறதோ அவை யாவையும் விட்டு விலக வேண்டும் .அதில் ஏதாவது ஒன்றை பற்றிக் கொண்டு இருந்தாலும் உண்மை விளங்காது பெரிய பெரிய அறிவாளிகள் என்பதெல்லாம் இதில் ஏற்றுக் கொள்ள முடியாது .படிப்பு அறிவு என்பது வேறு ,அருள் அறிவு என்பது வேறு .மனதை அடக்குவேன் என்று யோகம,தியானம்,தவம என்பதெல்லாம் வெறும் வெத்து வேட்டுகளா கும்,வெறும் மாயா ஜாலங்களாகும்.அதை வைத்தது வியாபாரம் செய்து பணம் பறித்துக் கொண்டு உள்ளார்கள்.அவனும் வளமுடன் வாழவில்லை மற்றவர்களையும் வளமுடன் வாழ வைக்கவில்லை .வளமுடன் வாழ்க என்றால் என்ன?பொருள் சேர்த்து பணக்காரனாக வாழ்வதா? அருள் பெற்று வாழ வேண்டும் .பொருள் அழித்து விடும் அருள் அழியாமல் பாது காக்கும் .பொருள் தேடும் உலகம்தான் உள்ளது அருள் தேடும் உலகம் மிக மிகக் குறைவு.பொருள் சேர்ந்தால் துன்பமும் துயரமும் அச்சமும் பயமும் மரணமும் உங்களை கேட்காமலே வரும் . .
      51 நிமிடங்களுக்கு முன்பு · 
    • Kathir Kathirvelu 
      ‎1874,ஆம் ஆண்டுக்கு பின் யாரும் வரவில்லை என்பது உண்மைதான் .யார் வள்ளலார்
      வாழ்ந்த வழியில் வள்ளலார் போல் வாழ்ந்தார்கள் எவரும் வாழவில்லை .அவர்போல்
      வாழ்ந்தால்தான் அருள் கிடைக்கும் மரணத்தை வெல்ல முடியும் .அவர் எப்படி
      வாழ்ந்தார் என்பது அவரது வாழ்க்கை வரலாறுகளும் அவர் எழுதிய திரு அருட்பாவும்
      சான்று இருக்கிறது .அதை அறிந்து தெரிந்து கொண்டு அவர் போல் வாழாமல் வேறு எந்த
      வழியில் சென்றாலும் வேலை யாகாது .தேவர்கள் ,மூவர்கள்,சித்தர்கள்
      ,யோளிகள்,ஞானிகள் ,போன்றவரே பெற முடியவில்லை என்றால் அதன் உண்மை என்னவென்று
      தெரிந்து கொள்ள வேண்டும் .அவர்களை விட நமக்கு நல்ல வாய்ப்பும் வழியும்
      தெரிந்துள்ளது .அவர்கள் எல்லாம் சாதி,மதம் ,சமயம் ,போன்ற புதையளுக்குள்
      சிக்கிக் கொண்டவர்கள் .சன்மார்க்கம் என்பது அனைத்து உலகத்திற்கும்
      பொதுவானதாகும் அதனால்தான் ஆன்மநேய ஒருமைப் பாட்டு உரிமை வேண்டும் .என்றார்
      வள்ளலார்.

      எத்துணையும் பேதம் இல்லாமல் எல்லா உயிர்களையும் ஒன்றாக நினைக்கும் பக்குவம்
      என்று வருகிறதோ அன்றுதான் சன்மார்க்க அறிவு விளங்கியதாகும் .அதை விட்டு வேறு
      எதை செய்தாலும் வாதம் செயதாலும்.வேலைக்கு ஆகாது .நீங்கள் கேள்வி கேட்பதை விட
      முயற்ச்சி செய்து அனைவருக்கும் வழிகாட்டுங்கள் அதுவே புத்தி
      சாலித்தனமாகும்.மற்றவர்களை குறை சொல்வதை விட்டு நீங்கள் நன் முயற்ச்சியில்
      ஈடுபடுங்கள் அதுவே அறிவு சார்ந்ததாகும் .அன்புடன் ஆன்மநேயன் --கதிர்வேலு. .

      30 ஆகஸ்ட், 2011 3:59 pm அன்று, Facebook <

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு