வெள்ளி, 8 ஜூலை, 2011

ஒரே கடவுள் அவரே அருட்பெரும்ஜோதி !


அன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் ,உலகில் பல கடவுள்கள் இல்லை ஒரே கடவுள்தான்,அவர் ஒளியாக உள்ளார்,அவருக்கு மனித உருவம் இல்லை,அருள் என்னும் ஆற்றல் உள்ளது.அதற்கு பெயர் ''அருட்பெரும்ஜோதி!அருட்பெரும்ஜோதி!தனிப்பெரும் கருணை !அருட்பெரும்ஜோதி !''என்பதாகும்,அந்த ஒளிதான் பல கோடி அண்டங்களையும் இயக்கிக் கொண்டு இருக்கிறது.

அந்த ஒளியின் துகள்தான் உயிர் என்னும் உயிர் ஒளியாகும்.உயிர் இல்லாமல் எந்த பொருளும் இல்லை.உயிர்ஒளி  இல்லாமல் எதுவும் இயங்காது.இதை மனித இனம் புரிந்து அறிந்து கொள்ளவேண்டும் .இதை புரிந்து கொள்ளாமல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை.

நாம் அனைவரும் அருட்பெரும்ஜோதியின் குழந்தைகள் என்பதை உணரவேண்டும்.நாம் வந்த இடத்தை தேடிக் கொண்டு இருக்கிறோம்.அதற்கு சரியான வழியை யாரும் காட்டவில்லை.பெரி யவர்கள் என்று பெயரிட்டுக் கொண்டவர்கள் முன்னுக்கு பின் முரணாக சொல்லி விட்டு சென்று விட்டார்கள். அவர்கள் சொல்லியதை உண்மை என்று நினைத்து அவர்கள் காட்டிய வழியில் சென்று,இன்றுவரை நமது வாழ்க்கையை வீணாக்கிக் கொண்டு இருக்கிறோம்.

இந்த உலகத்திற்கு உண்மையை சொல்லி அனைவரையும் பக்குவமுள்ளவர்களாக மாற்ற வேண்டும் என்பதற்காக,இறைவனால் அனுப்பி வைக்கப் பட்டவர்தான் ''வள்ளலார் ''என்பவராகும்.

அவர்தான் உலக உண்மைகளை ஒளிவு மறைவு இல்லாமல் எழுதியும்,சொல்லியும் வாழ்ந்தும் காட்டியுள்ளார்கள்.

அவர் எழுதிய நூல் ''திரு அருட்பா''என்னும் புத்தகமாகும்.அதில அனைத்து உண்மைகளும் மிகத் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.அதை படித்து அறிந்து புரிந்து அதன்படி வாழ்ந்தால் அனைவரும் ஆண்டவரின் அருள் பெற்று, மரணத்தை வென்று இறைவன் திருவடி அடையலாம்.

ஆண்மேநேயன் --கதிர்வேலு ,  

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு