செவ்வாய், 3 மே, 2011

நண்பருக்கு கடிதம்

  • Kathir Kathirvelu
  • Kathir Kathirvelu
    மனிதன் மனிதனை மட்டும் சாப்பிடவில்லை வாய் இல்லாத அப்பாவி உயிர்களையும் கொன்று சாப்பிடுகிறான்,பிணத்தை பிதைக்கும் இடம் சுடுகாடாகும்.இவன் வயிற்றில் உயிர்களை பிதைக்கிறானே இவன் வயிறு என்ன சுடுகாடா?சிந்திக்க வேண்டாமா?எந்த உயிர்களை உருவாக்க முடியாதோ அந்த உயிர்களை கொல்ல யாருக்கும் அதிகாரம் இல்லை.இது இயற்க்கையின் சட்டமாகும்.இயற்க்கை சட்டத்தை மீருவதால்தான்,சுணாமி,பூகம்பம்,போன்ற பேராபத்துகள்,மற்றும் உலகம் வெப்பமயமாதல்,நிகழ்ந்து கொண்டு இருக்கின்றன.இதை அறியாத அறிவியல்,விஞ்ஞானம்.வேறு வேறு காரணங்கள் சொல்லி புலம்பி கொண்டு இருக்கின்றன.இதை அருளால் அறிந்து வள்ளலார் அவர்கள் கருணை இல்லா ஆட்சி கடுகி ஒழிக!அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க.என்றார்.பொது நோக்கம் இல்லாத எந்த ஆட்சியாக இருந்தாலும்.உலகம் துன்பம் நிறைந்ததாக இருந்து கொண்டே இருக்கும்.கொல்லா நெறியே குவலயம் ஓங்குக! எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க! என்றார் வள்ளலார்.ஜீவகாருண்யம் இல்லாமல் இந்த உலகம் துன்பம் இல்லாமல் இருக்கமுடியாது.என்றார்.ஜீவகாருண்யமே கடவுள் வழிபாடு எண்ரார்.ஜீவகாருண்யம் இல்லாமல் செய்யப்படுகின்ற அனைத்தும் வெறும் மாயா ஜாலங்களே என்றார்.கடவுள் எல்லாஉயிர்களிலும் உயிர் ஒளியாக இடுக்கிறார்.ஆதலால் கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு,கடவுளுக்கு உயிர் பலி செய்கிறார்களே,இவை எவ்வளவு அறியாமையாகும்.இந்த அறியாமையை போக்கத்தான வள்ளலாரை அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னும் பேரொளி அனுப்பி வைத்துள்ளது.அதனால்தான் வாடிய பயிரை க்ண்ட போதெல்லாம் வாடினேன் என்றார்.எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம் உயிர்போல் எண்ணி உள்ளே ஒத்து உரிமை உடையவராய் உவக்கின்றார் யாவர் அவர் உளம்தான் சுத்த சித்துருவாய் எம்பெருமான் நடம் புரியும் இடம் என அறிந்தேன் அந்த வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என் சிந்தை ,இக விழைந்ததாலோ! என்கிறார்.அனைத்து உயிர்களும் ஒன்று என் யார் நினைக்கிறார்களோ அவர்களை நான் கடவுளாக நினைத்து,அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் என்கிறார் வள்ளலார்.கொலைக்கார கடவுள்கள் எல்லாம் கடவுள்கள் அல்ல!கருணை உள்ள மனிதர்களே கடவுள்கள்.எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி என்றார்.கடவுள் கருணை உள்ள இடத்தில் விளங்கு கிறார்.இதை உணர்ந்து அன்பு,தயவு,கருணை யுடன் வாழ்ந்து ஆண்டவரின் அருளைப்பெற்று அகம் ம்கிழ்ந்து வாழ்வோம்.அன்புடன்;--கதிர்வேலு.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு