செவ்வாய், 3 மே, 2011

நண்பருக்கு கடிதம்.

  • Kathir Kathirvelu
  • Kathir Kathirvelu
    ஆன்மநேய அன்புடையீர் அனைவருக்கும் வந்தனம்.வள்ளலார் அவர்கள் தன்னுடைய அனுபவமாலை என்னும் தலைப்பில் மிகத்தெளிவாக தெரியப்படுத்துகிறார். உருத்திரரகள் ஒருகோடி நாரணர்கள்பல் கோடி.உறுபிரமர் பல் கோடி,இந்திரர்கள்பல் கோடி,பெருத்தமற்றைத் தேவர்களும்,முனிவர்களும்,பிறரும் பேசில் அனந்தங்கோடி யாங்காங்கே கூடித்திருத்தமுறு திருச்சபையின் படிப்புறத்தே நின்று தியங்குகின்றார்,நடங்காணுஞ் சிந்தையரா யந்தோ,வருத்தம் மொன்றுங் காணாதே நானொருத்தியேறி,மாநடங்காண்கின்றேன் என் மா தவந்தான் பெரிதே.என்கிறார்.---அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அவர்கள் அகில உலக அண்டங்களில் உள்ள அருளார்கள் அனைவரையும்,அவசரமாக அழைக்கிறார்.அருட்பெரு வெளியில் அந்த மகாசபை கூடுகிறது.எதற்க்காக அழைத்தார் என்று யாருக்கும் தெரியாது.வள்ளலாரையும் அழைத்து இருக்கிறார்.அந்த மகாசபையில் ஒரு உண்மையை வெளியிடுகிறார்.--அதை வள்ளலார் அனுபவமாலை பகுதியில் வெளியிடுகிறார் அதன பாடல்வருமாறு;---பொய் பிடித்தார் எல்லாரும் புறத்திருக்க நான் போய்ப் பொது நடங்கண்டு உளங்களிக்கும் போது மணவாளர் (என்னை அழைத்து) மெய்பிடித்தாய் வாழியநீ சமரசசன்மார்க்கம் விளங்க உலகத்திடையே விளக்குக என்று எனது கைப்பிடித்தார் நானுமவர் கால் பிடித்துக் கொண்டேன்,களித்திடுக இனியுனை நாங் கைவிடோம் என்றும்,(அனைவருக்கும் முன்னாடி) மைபிடித்த விழி உலகர் எல்லோரும் காண மாலையிட்டோம் என்று எனக்கு மாலை அணிந்தாரே.என்று அரிட்பெருஞ்ஜோதி ஆண்டவரே எனக்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தை தோற்றுவித்து,உலக உண்மைகளை அனைத்து அணடங்களுக்கும்,அனைத்து உயிர்களுக்கும் தெரியப்படுத்தவேண்டும் என்று ஆணை பிறப்பித்துள்ளார்.அந்த உண்மைகள்தான் ஆறாம் திருமறையில் உள்ள அனைத்து அனுபவங்களாகும்.அந்தவழியில் தான் நாங்கள் சென்று கொண்டு இருக்கிறோம்.உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாருங்கள்.இல்லை நாங்கள் பொய்யான வழியில்தான் செல்வோம் என்றால் நாங்கள் என்ன செய்யமுடியும்.உங்களுக்காக அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடத்தில் விண்ணப்பம் செய்யத்தான் முடியும்.எல்லாஉயிர்களும் இன்புற்று வாழ்க!கொல்லாநெறியே குவலயம் ஒங்குக!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

இந்த இடுகையின் இணைப்புகள்:

இணைப்பை உருவாக்குக

<< முகப்பு