வியாழன், 22 ஜூலை, 2010

'' தைப் பூசம ,மாதப்பூசம தேவையா ? ''

    
சத்திய ஞான சபை
 ''  வடலூரில் உள்ள சத்திய ஞான சபையில் 
மாதப்பூசம்,தைப்பூசம வழிபாடு செய்வது முறையானது அல்ல ''
   
      உத்தர ஞான சித்திபுரம் என்றும் ,உத்தர ஞான சிதம்பரம் என்றும் ,


பார்வதிபுரம் என்றும் ,வடலூர் என்றும் குறிக்கப் பட்ட 


குறிப்புப் பெயர்களும் பெற்று விளங்குகின்ற தெய்வப் 


பதியினிடத்தே,இயற்க்கை விளக்க நிறைவாகி யுள்ள 


ஓர்'' ஞான சபையை'' வள்ளலார் தோற்றி வைத்துள்ளார் .


       இவ்வுலகில் ஆறறிவுள்ள உயர்வு உடைய மனித 


தேகத்தைப் பெற்ற, மானிடர்கள் அனைவரும் ,கடவுளின் 


உண்மையை தெரிந்து கொள்ள வேண்டுமென்ற ,அவசியமும் 


அவரசமும் ,என்ற காரிய காரணத்தால் ,இயற்க்கை உண்மைக்  


கடவுள் ஒருவர் உள்ளார் .அவர்அருட்பெரும் ஒளியாக 


உள்ளார் ,அவரை உலக மக்களுக்கு தெரியப் படுத்தவேண்டும் ,


என்ற உயரிய நோக்கத்துடன் ,வடலூரில் சத்தியஞான சபையை 


அமைத்துள்ளார் வள்ளலார் அவர்கள் .


ஞான சபையைப்பற்றி

பதிவுசெய்துள்ள பாடல் ;--


உலக மெலாம் தொழவுற்றது எனக்கு உண்மை யொண்மைதந்தே


இலக வெலாம் படைத் தாருயிர் காத்து அருள் என்றது என்றும் 


கலகமிலாச சுத்த சன்மார்க்க சங்கங்கள் கலந்தது பார்த் 


திலக மெனா நின்றது உத்தர ஞான சிதம்பரமே .


அடுத்தபாடல் ;---

ஒத்தாரையும் மிழிந்தாரையும் நேர்கண்டு உவக்க வொரு


மித்தாரை வாழவிப்ப தேற்றார்க் அமுதம் விளம்பியிடு 


வித்தாரைக் காப்பது சித்தாடுகின்றது மேதினி மேற் 


செத்தாரை மீட்கின்றது உத்தர ஞான சிதம்பரமே .


      என்பவை போன்ற, ஞான சபையைப்பற்றி நிறைய 
   
பாடல்கள் திருஅருட்பாவில் பதிவு செய்துள்ளார் .


      சத்திய ஞானசபை யானது  சாதி ,சமயம் ,மதம் இனம், நாடு,


அனைத்தையும் கடந்தது ,உலகிலுள்ள அனைவருக்கும் ,


உரிமையுள்ளது ,உண்மையானது ,அனைவரும் தெரிந்து 


கொள்ளவேண்டியதாகும். 


வழிபாட்டு முறை




         இன்று ஞான சபையின் நிலை 


என்ன ?


          இன்று ஞான சபை சமயவாதிகளின் கையில் 


சிக்கிக்கொண்டு படாத பாடு பட்டுக்கொண்டு இருக்கிறது ,


இதைநினைக்கும் போது பெருத்த வேதனையாக 


இருக்கிறது .இதை சன்மார்க்கிகளோ ! ஆன்மீக 


சிந்தனையாளர்களோ ! தமிழ் சான்றோர்களோ !


ஆராட்சியாளர்களோ! ஆட்சிநடத்தும் ஆட்சியாளர்களோ!


இந்து சமய அறநிலையத்துறையோ! பகுத்தறிவு 


சிந்தனையாளர்களோ ! புதைப்பொருள் ஆராட்சியாளர்களோ!


அறிவியல் வல்லுநர்களோ! வள்ளலார் எழுதிய 


 திருஅருட்பாவையும் ,அவர் தோற்றுவித்த ஞான சபையும் ,


கவனிக்காதது ஏன் ? ஏன் ? ஏன்?


வள்ளலார் கொல்லாமையும் ,புலால் உண்ணாமையும் ,


அதிகம் வலியுறித்தியுள்ளார் ,அதனால் யாரும் 


கவனிக்கவில்லையா! புலால் மறுத்தவர்கள் ,


அகவினத்தார் ,புலால் உண்பவர்கள் புறவினத்தார்


என்றார் அதனால் கவனிக்கவில்லையா ! 


இன்றுவரை விடை கிடைக்கவில்லை ,


       திருவள்ளுவரைப் போற்றும் தமிழகஅரசு வள்ளலாரைக் 


கைவிட்டது ஏன்?, என்ன என்பது புரியவில்லை ,ஒருவேலை


திருஅருட்பாவை தமிழ் சான்றோர்கள் யாரும், 


 முழுமையாக படிக்கவில்லையா! ஒருவேலை திருஅருட்பா 


சமய, மதம் சார்ந்த நூல் என்று நினைத்து ,கவனம் 


செலுத்தாமல் விட்டுவிட்டாகளா! என்பதும் புரியவில்லை .


          இந்த உலகத்தில் உள்ள அறிவு நுல்களில் மிகவும்   


முக்கியமான நூல்கள் இரண்டு ஒன்று திருக்குறள் ,


மற்றொன்று திருஅருட்பா ,திருக்குறள் வாழ்வது எப்படி 


என்பதற்குவழிகாட்டிய நூலாகும் ,திருஅருட்பா 


வாழ்ந்து வழி காட்டிய நூலாகும் .வள்ளலார் திருக்குறள்படி 


வாழ்ந்து வழி காட்டினார், என்பது வள்ளலார் கொள்கைகளில் ,


நம்பிக்கை உள்ளவர்கள் அனைவரும் அறிந்ததாகும் 
.     
       வடலூரின் வழிப்பாட்டு முறை ,  


       வடலூரில் ;--சமய ,மத கோவில்களில் நடைபெறும் 


விழாக்கள் போல் நடந்துவருகிறது ,அவை முற்றிலும் 


தவறானதாகும் ,வள்ளலார் கொள்கைக்கு விரோதமானதாகும் ,


தமிழகஅரசும் ,இந்து சமய  அறநிலையத்துறையும்,


கவனிக்கவேண்டியதாகும் ,வழிப்பாட்டு முறையை ,


மாற்றியாக வேண்டும்


      தற்போது நடைமுறையில் உள்ளது ;--


சத்திய ஞானசபையில் ஒவ்வொரு மாதப்பூச தினங்களிலும் 


இரவு 8 ,மணிக்கு ஆறு திரைகள் நீக்கி மூன்றுமுறை 


அருட்பெரும்ஜோதி தரிசனமும் ,தைப்பூச தினத்தில் 


காலை மணி  ஆறு ,பத்து ,பிற்பகல் ஒருமணி ,


இரவு மணி ஏழு ,பத்து ,மறுநாள் காலை ஆறு மணி 


ஆக ஆறு காலங்களில் ஏழுதிரைகள் நீக்கி ஒவ்வொரு 


காலமும் மூன்று முறை அருட்பெரும்ஜோதிதரிசனம் 


நடைபெறுகிறது .


      தைபூசத்தன்று விசேஷச  திருவிழாவாக,பத்திரிக்கை 


அடித்து ,பெரிய அளவில் பந்தல் போட்டு ,வேடிக்கை 


வினோதங்கள்,திருவிழாக்கடைகள்,வியாபாரக்கடைகள் ,


போன்ற,ஆடம்பரகாட்சிகள் அமைத்து விழா எடுக்கிறார்கள் .


       இவைகள் யாவும் சமயமதக்கோவில்களில் நடைப் பெறுவதுபோல்,


நடைப்பெற்று கொண்டுவருகிறது ,


      வள்ளலார்;--ஞானசபை கட்டியத்தின் நோக்கம் என்ன ?


எதற்காக கட்டினார் என்பது தெரியாத ,சமய, மத,வாதிகள் 


அன்று தொட்டு இன்றுவரை ,தொடர்ந்து தவறை 


செய்து கொண்டு வருகிறார்கள் .


       வள்ளலார் மாதப் பூசம,தைப்பூசம அன்று ஜோதிதரிசனம் 


காட்ட சொன்னாரா என்றால்! இல்லவேயில்லை .


அருட்பாவில் ,எந்தபாடல் களிலும் ,வசனபாகத்தில் எங்கும் 


குறிப்பிடப்படவில்லை .அப்படி இருக்க ஏன் இப்படிச 


செய்கிறார்கள் .இதற்க்கு உடந்தையாக ,


இந்து அறநிலையத்துறையும் ,


தமிழக ஆட்சியாளர்களும் ,


அதிகாரிகளும் ,துணைபுரிந்து வருகிறார்கள் .


       இவைகளை தடுத்து நிறுத்துவது எப்படி ,?


வள்ளலார் ஞான வழியைக்காண்பிக்க வந்தவர் 


பல்லாயிரம் ஆண்டுகளாக கடைபிடித்து வந்த 


சமய மத கொள்கைகளையும்,மூட பழக்க வழக்கங்களையும் ,


கலையுரைத்த கற்பனையை ,நிலையெனக்கொண்டாடும் ,


கண்மூடிப் பழக்கங்கள் யாவையும் ,மண்ணைப் போட்டு


மூடுவதற்கு வந்தவர் வள்ளலார் .


        அவர் அமைத்த ஞான சபையில் இப்படி நடந்தால் எப்படி 


பொருத்துக் கொள்ளமுடியும்!,


       மனிதன் மனிதனாக வாழ்ந்து, மெய்ப்பொருளை


உணர்ந்து ,அதனை அடைந்து வாழ வேண்டும் என்பதற்காக


ஞானசபையைக் கட்டினார் வள்ளலார் ,


       ஞானசபை அமைதி நிலவும் இடமாக இருக்கவேண்டும் .


அருள் நிறைந்த இடமாக இருக்கவேண்டும் .மெல்லென 


துதிசெய்யும் இடமாக இருக்கவேண்டும் .


''வடலூர் ஞான சபை'' தமிழ் நாட்டுக்கு கிடைத்த 


மாபெரும் பொக்கிஷமாகும்,உலகில் எங்கும் 


இல்லாத அதிசியமாகும் .


தமிழகஅரசு வடலூர் ''ஞானசபையை'' உலக 


சுற்றுலா மையமாக அறிவிக்க வேண்டும் .   


நினைந்து நினைந்து ,உணர்ந்து உணர்ந்து ,நெகிழ்ந்து 


நெகிழ்ந்து ,அன்பே நிறைந்து நிறைந்து ,ஊற்றுஎழும் 


கண்ணீர் அதனால் ,உடம்பு நனைந்து நனைந்து,


அருள் பெருகும் இடமாக இருக்கவேண்டும் .


      ஞானசபையில் ,ஜோதியோ ,திரைகளோ வள்ளலார் 


வைக்கவில்லை, .ஞானசபை என்பது ஞான சிங்காதனமேடை ,


அதாவது வெற்றிடம் ,இறைவன் வந்து அமருமிடமாகும் . 


அதனால்தான் ,அதற்கு 


''சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை ''எனறு,


 பெயர்வைத்தார் வள்ளலார் .


 உலகமக்கள் அனைவரும் வந்து தரிசிக்கும்


 படியானஇடம் ஞானசபையாகும் .


       ஞான சபையில் ;--சமய சடங்குகளோ,திருவிழாக்களோ,


மேளதாளங்களோ,தீபாரதனைகளோ, ,பிரசாதங்களோ ,


சமய மத சம்பந்தமான எந்த காரியங்களும் ,


,நடைமுறைப் படுத்தக்கூடாது,


அப்படியும் மீறி செய்தால்,


அவை வள்ளலார் கருத்துக்கு விரோதமானதாகும் .


       இனிமேலாவது;-- வள்ளலார் திருஅருட்பாவில்என்ன பதிவு செய்துள்ளாரோ அதன்படி செயல்படவேண்டுமாய் ,


அனைவரையும் பணிவுடன் கேட்டுககொள்கிறேன்.


       இவைகளை முழுமையாக ஒழுங்கு படுத்தி, சரியான 


வழி காட்ட வேண்டியது ,தமிழக அரசும் ,இந்துசமய 


அறநிலையத் துறையுமாகும் ,தமிழகமுதல்வரும் ,


அறநிலையத்துறை அமைச்சரும் ,அறநிலையத் துறை ஆணையரும்,


அருள் கூர்ந்து கவனிக்க வேணுமாய் 


மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம் .


        ஆன்மநேய அன்புடைய சுத்த சன்மார்க்க 


அன்பர்கள் ,உண்மையான அன்பும் ,உண்மையான 


பற்றும் ,வள்ளலார் மீது இருந்தால் ,


தமிழக அரசிடம் ,வள்ளலாரின் கொள்கைகளை 


எடுத்து கூறி ,சட்டபடி நடவடிக்கை எடுத்து 


ஞானசபையை காப்பாற்றுவோம் .ஒன்று கூடுவோம் 


வள்ளலார் வழியில் நிற்போம்.


அருட்பெரும்ஜோதி ஆண்டவர் துணையாய் 


இருப்பார். .அருளைப்பெருவோம் ,அமைதியுடன் 


போராடுவோம் .


பாடல் ஒன்று ;--


உத்தரஞான சித்தி புரத்தின் 


ஓங்கிய ஒருபெரும் பதியை 


உத்தர ஞான சிதமர ஒளியை 


உண்மையை ஒருதனி உணர்வை 


உத்தர ஞான நடம்புரி கின்ற 


ஒருவனே உலகெலாம் வழுத்தும் 


உத்தர ஞான சுத்த சன்மார்க்கம் 


ஓதியை கண்டு கொண்டேனே .  


வாழ்க வள்ளலார் புகழ் 
வளர்க சுத்த சன்மார்க்கம்.  


அன்புடன் ;---கதிர்வேலு .




மீண்டும் பூக்கும் ;--
  


    
                      
    


  





           
                      




2 கருத்துகள்:

28 ஜனவரி, 2012 அன்று AM 12:20 க்கு, Blogger raj கூறியது…

wellsaid

 
18 அக்டோபர், 2020 அன்று PM 8:55 க்கு, Blogger Regan Rodrigo கூறியது…

நான் புலால் உணவு உண்ணும் பழக்கம் உடையவன். வள்ளலார் சபைக்கு செல்லும் விருப்பம் உள்ளது. நான் செல்லலாமா? கோவிலின் வாசலில், புலால் தவிர்த்தார், கொலை செய்யாதோர் மட்டும் நுழையவும் என்று சொல்லி உள்ளது என்பது உண்மையா ?

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு