செவ்வாய், 6 ஜூலை, 2010

உலக அதிசியம் .

     

  
வடலூர் சத்திய ஞான சபையில் உள்ளஇரண்டு   
பெட்டிகளில் என்ன இருக்கிறது.? 

புரியாதபுதிர். ;---- 




         வடலூரில் வள்ளலார் அமைத்துள்ள சத்திய 


ஞான சபையின் உள்புறம் சிற்சபை, பொற்சபை 


என்ற இரு புறத்திலுள்ள , ஒவ்வொரு அறையிலும்


ஒரு ஒரு பெட்டி உள்ளது .


சிற்சபை
பொற்சபை



        அந்த இரண்டு பெட்டியினுள் என்ன இருக்கிறது 


என்பது இதுவரை யாருக்கும் தெரியாது .


        வள்ளலார் சித்தி பெறுவதற்கு முன் வடலூருக்கு


அடுத்த மேட்டுக்குப்பம் என்னும் கிராமத்தில் உள்ள 


சித்திவளாகத்தில், வள்ளலார் தனிமையில் தங்கி 


இருப்பது வழக்கமாக கொண்டிருந்தார்கள் .    
        
        வள்ளல் பெருமான் இரண்டு பெட்டிகள் 


வைத்திருந்துள்ளார். அந்த இரண்டு பெட்டிகளையும் 


சித்திபெற்ற திருவறைக்குள் வைக்க வேண்டுமென்று 


நினைத்துள்ளார் .அந்த பெட்டியை ஒருவரால் 


தூக்கமுடியாது .அதற்கு ஒரு நியதி வைத்துள்ளார் .


      மூன்றுஆண்டு வரை பெண்களிடம் உடல் உறவு 


கொள்ளாதவர்கள் இருவர் வாருங்கள் என்று 


தன்னுடன் இருந்தவர்களில் இருவரை அழைத்து 


உள்ளார்கள்.ஒருவரும் வரவில்லையாம் .பின்பு 


ஆறு மாத வரையாவது ,உடல் உறவு கொள்ளாதவர்கள்


வாருங்கள் என்று அழைத்துள்ளார் வள்ளலார் .


இருவர் வந்தார்களாம்,அவர்களை ஒவ்வொன்றாக 


பெட்டியை கொண்டு போய் உள்ளே வையுங்கள் 


என்று கூரியுள்ளார்,அவர்களால் பெட்டியை தூக்க


முடியவில்லை,வள்ளல் பெருமானும் சேர்ந்து 


மூவருமாக எடுத்துக் கொண்டுபோய் அறையின் 


உள்ளே வைத்துள்ளார்கள் .


       அந்த பெட்டி மரத்தால் செய்து இரும்புதகட்டால் 


போர்த்தப் பட்டுள்ளது அதனுள் என்ன இருக்கிறது,


என்று இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது .


      வள்ளலார் நம்  ஊனக்கண்களுக்குத் தோன்றாது 


சித்திப் பெற்ற பிறகு வள்ளலாரின் அணுக்கத் 


தொண்டர்களில் ஒருவரான சபாபதி குருக்கள் 


என்பவர்,அந்த பெட்டியை உடைத்து பார்க்க முயற்சி 


செய்துள்ளார்.உடைக்கமுடியவில்லை ,அதிக முயற்சி 


எடுத்துக் கொன்டால்,ஏதாவது இடைஊறு ஏற்பட்டுவிடும்


என்று பயந்து விட்டுவிட்டார் .


     அதன்பிறகு அந்த பெட்டிகளை வைப்பதற்காக, 


ஞானசபையில் சிற்சபை ,பொற்சபை என்று அமைத்து 


அதில் இரண்டு பெட்டிகளையும் வைத்து ,தினமும் 


வழிபாடு,பூசை நடைபெற்று வருகிறது .


அந்தபபெட்டிகளில் என்ன இருக்கிறது என்று,


இன்றுவரை யாருக்கும் தெரியாது .


       வள்ளலார் அவர்கள் ஞான சபை அமைத்த போது 


சிற்சபை,பொற்சபை என்பது கிடையாது எண்கோண 


வடிவமான ஞானசபை மட்டும் அமைத்துள்ளார்கள .


இடையில் சபாபதி குருக்களால்,சிற்சபை, பொற்சபை 


அமைத்து ,அந்த இரு பெட்டிகளையும் உள்ளே வைத்து 


வைதீக முறைப்படி வழிபாடு செய்து வந்துள்ளார் .


      வள்ளலார் அவர்கள் கொள்கைப்படி அந்த 


வைதீக வழிப்பாட்டு முறை தவறானதாகும் .ஞான சபையில் 


அருட்பெரும் ஜோதி ஆண்டவர் வெளிப்படும் வரைக்கும் , 


ஞான சபைக்குள்ளே தகரக்கண்ணாடி 


விளக்கு வைத்தல் வேண்டும் என்று 


ஞான சபை விளக்கப் பத்திரிகையில் 


தெளிவாக எழுதி வைத்துள்ளார் .


[அதனவிளக்கம்பிறகு பார்ப்போம் ]                    


         வள்ளலார்அவர்கள்  திரு அருட்பா பாடலில்


சிற்சபையும் ,பொற்சபையும் சொந்தமெனதாச்சி


தேவர்களும் மூவர்களும் பேசுவது என்பேச்சு 


என்று பதிவு செய்துள்ளார் .அதனடிப்டையில் 


ஞான சபையில் சிற்சபை,பொற்சபை என்று 


அமைத்து இருப்பார்கள் என நினைக்கத் 


தோன்றுகிறது .அனால் அது தவறு .


அடுத்து வள்ளலார் திருஅருட்பாவில் ஒரு பாடல்
பதிவு செய்துள்ளார் .


பெட்டி இதில் உலவாத பெரும்பொருள் உண்டு இது நீ 


பெருகவென அது திறக்கும் பெரும்திறவு கோலும் 


எட்டு இரண்டும் தெரியாதே என்கையிலே கொடுத்தீர் 


இதுதருணம் திறந்து அதனைஎடுக்க முயல்கின்றேன் 


அட்டி செய்ய நினையாதீர் அரைக்கணமும் தரியேன் 


அரை கணத்துக்கு ஆயிரம் ஆயிரம் கோடியாக 


வட்டியிட்டு நும்மிடத்தே வாங்குவேன் னும்மானை


மணிமன்றில் நடம்புரிவீர் வந்தருள்வீர் விரைந்தே .


      இந்த பாடலைக் காட்டி,அந்த பெட்டிகளுக்கு 


ஒப்பிடுபவர்கள் சிலர் ஆனால் அது பொருந்தாது .


பாடலின் பொருள்வேறு ,பெட்டிக்கும் பாடலுக்கும் 


சம்பந்தமில்லை ,


வள்ளல் பெருமானும் அருட்பெரும்ஜோதியும் தான் 


நமக்கு விளங்க வைக்கவேண்டும் .


       இதுபோலவே வள்ளல் பெருமான் சித்திவளாகத்தில் 


தாம் சித்தி பெறுவதற்கு முன் தனது அன்பர்களைப் 


பார்த்து,நாம் உள்ளே பத்து பதினைந்து தினம் இருக்கப் 


போகிறோம் ,இந்தகதவை சாத்திவிடப்போகிறோம் ,


இந்தக்கதவை யாதொரு காரணம் குறித்தும் ,


திறந்துவிடக்கூடாது.


அப்படி யாராவது திறந்துப்  பார்க்க முயன்றால்


அருட்பெரும்ஜோதி ஆண்டவர் என்னை காட்டிக் 


கொடுக்கமாட்டார் .அதையும் மீறி திறந்துப் பார்த்தால் 


வெறும் அறையாகத்தான் இருக்கும்படிச செய்விப்பார் 


என்றுக் கூறிவிட்டு திருவறைக்குள் சென்று கதவு 


தாழிட்டுக்கொண்டார் .


அன்பர்கள் யாரும் வள்ளலாரின் வார்த்தையை மீறி 


செயல்படவில்லை .
      
        சிலநாள் சென்று அதிகாரிகள் வந்து திறந்து 


பார்க்க முயன்று முடியாமல் ,அதிக முயற்சி 


எடுத்தால் ஏதாவது விபரீதம் ஏற்பட்டுவிடும் என்று 


பயந்து முயற்சி செய்யாமல் விட்டு விட்டார்கள் .


என்பது வரலாற்றுச செய்திகளாகும் .அறையினுள் 


என்னஇருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது .


       தற்போது அறநிலையத்துறை பாதுகாப்பில் 


இருந்து வருகிறது. வருடத்தில் ஓர் இரு முறை 


அந்தஅறையினுள் சென்று பார்ப்பார்கள் .


       தைப்பூசம் மூன்றாம் நாள்,;-- அந்த அறையின் 


வடபுறம் இரு சன்னல் இருக்கிறது, அதை திறந்து 


பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும் ,


அனைவரும் பார்த்து தரிசித்து ஆனந்தம் அடைந்து 


செல்வது வழக்கமாகும்.


       என்னுடைய ஆன்மநேய அன்புடைய, சுத்த 


சன்மார்க்க சகோதரர் துறவி கந்தசாமி ஐயா அவர்கள், 


என்னிடம் அதிக அன்பும் பாசமும் கொண்டவர் .


அவரும் நானும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க 


கொள்கைகளைப் பின்பற்றி அதிதீவிரமாக


கடைப்பிடித்து மக்களுக்கு தெளிவுப்படுத்தி 


வந்தோம் என்பது அனைவரும் அறிந்ததே .


       ஒருமுறை துறவியார் அவர்கள் கீழ்


கண்டவாறு என்னிடம் கூறியது ;---


துறவியார் ;--    


      வள்ளல் பெருமான் சித்தி பெற்ற 


திரு அறையை நாம் பார்க்கும் பாக்கியம் 


எனக்கு கிட்டியது ,நாம் தருமச்சாலையில்


பணிபுரிந்தபோது ,சித்திவளாகத் 


திருமாளிகையில், 


வடபுறம் உள்ள அந்த சன்னளுக்கு


வர்ணம் பூச எண்ணினோம், அதற்கு


சம்மதம்பெற்று என்னை வர்ணம் பூசுவதற்கு 


அனுமதி அளித்தார்கள்,பணிசெய்ய விரும்பிய 


எனக்கு அனுமதி அளித்தது பெரும் 


பாக்கியமாக நினைத்து பேரானந்தம் 


அடைந்தேன் . 


ஒருநாள் நள்ளிரவில் சித்திவளாக மெய் 


காவலளுருடன் அந்த அறையின் உள்ளே


சென்று வர்ணம் பூசும் போது அடியேன் 


கண்ட காட்சிகள் .


      நமது வள்ளல் பெருமான் படுத்துக் 


கொண்டிருந்த ஒரு பலகை,இரண்டு அடி அகலுமும், ஏழு அடி


நீளமும்ஒருஅங்குல


கணமும் உள்ள ஒரு மரத்தாலான பலகை 


மட்டும் இருந்தது.அடுத்து ஒரு சுவற்றில் 


ஆணியடித்து இருந்தது .அந்த ஆணியில் 


கம்பிகட்டி அதில் ஆண்டுக்கொருமுறை 


மல்துணி போடுவதாகவும்,எடுத்து 


அப்படியே வைத்து விடுவதாகவும் கூறினர்.


அத்துணி ஒன்றையும் காணப்பெற்று 


மகிழ்ந்த தாகவும்கூறினார்.
     
      அது போலவே சத்திய ஞான சபையின் 


உள்ளே போய் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது .


என்றார் துறவி கந்தசாமி ஐயா அவர்கள் .


      சத்தியஞான சபையினுள் அதன் அடித் 


தளத்தில் சுரங்கம் ஒன்று ஒருக்கிறது ,


இதுபற்றியும் தெளிவாகத் தெரியவில்லை ,


இது வள்ளல் பெருமான் யோகம் ,தியானம் 


செய்ய ஏற்படுத்திய அறை என்றும் பலர் 


பலவிதமாகச சொல்கிறார்கள் .அனால் 


ஞான சபை கட்டி முடித்தப் பின்னர் 


வள்ளலார் ஞான சபைக்கு வரவில்லை .


      ஞான சபை ஆரம்ப காலத்தில் சபைமுன் 


போட்ட பந்தல் புலைப்புசிப்புடைய ,


மராட்டியர்களால் போடப்பட்டது .அது 


நம் வள்ளல் பெருமானுக்கு சம்மதம் இல்லை 


என்று கூறிய உடனே பந்தல் தீப்பற்றி


எரிந்து விட்டதாம் ,அதனால் யாருக்கும் 


எந்த சேதமும் ஏற்படவில்லை என்று 


வரலாற்று சேதிகள் கூருகின்றன.


பந்தல் போட்டது சரி இல்லை என்பதை 


சொல்ல வந்தார் வள்ளலார் ,அதன்பின் 


வந்ததாக எந்த ஆதாரமும் இல்லை .


என்று துறவியார் ஐயா சொன்னார்கள் .
     
    அருட்பெரும்ஜோதி ஆண்டவர் வந்து 


ஒரு நாழிகையில் யோக நிலையை


உணர்த்தி யோகப் பயனும் முழுதும் 


தந்தார் மறுநாட் காலையே ,என்றும் 


விளங்குவதால் ,பெருமான் யோகம் 


முதலியது சபையில் செய்யவில்லை 


என்பது தெளிவாகத் தெரிகிறது .


ஞானசபையை , வள்ளலார் அகத்தில் 


கண்டதைபுறத்திலவடிவமைத்துள்ளார்


ஞான சபையின் கீழ் பகுதி சுமார்


இருபது பேர் நிற்க கூடிய அகலம் 


உள்ளதாக இருக்கிறது என்றே 


கருதலாம்.அதனுள் சிறிய மாடம் 


ஒன்றும் இருக்கிறது .அது எதற்காக 


ஏற்பட்டது என்று 


தெளிவாகத் தெரியவில்லை இது 


போன்று பல பகுதிகள் 


விளக்கமில்லாமலே இருக்கிறது. .


பெருமான் அவைகளை விளக்கி 


இருப்பார்கள் ,அவை நமக்கு கிட்டாது 


போயிருக்கலாம்,எப்படியும் நாம் இரவு 


பகலாக எம்பெருமானை எண்ணி 


வந்தால் அவர்கள் தெரிவிக்க 


வேண்டியதை தெரிவிப்பார் .மேலும் 


நாம் அடைய வேண்டிய ஆன்ம 


லாபத்திற்கு முயலாமல், இவைகளில்


நமது சிந்தனையை செலுத்தி குழம்பிக்     


கிடப்பதை விடுத்து ,நாம் இறை


அருளை அடைய வேண்டிய 


முயற்சிகளில் ஈடு படுவோம் .என்று 


சுத்தசன்மாக்க அன்பர் துறவி கந்தசாமி 


ஐயா அவர்கள் என்னிடம் 


தெரிவித்துள்ளார்.அவருக்கு இந்த 


நேரத்தில் என் நன்றியும் 


வணக்கத்தையும் 


காணிக்கையாக்குகிறேன்.அவர் 


மீண்டும் மனிதப்பிறப்பு எடுத்து 


சுத்தசன்மார்க்க பாதையில் வாழ்ந்து 


மரணத்தை வென்று ஒளி யுடம்பாக மாறுவதற்கு,


எல்லாம் வல்ல 

அருட்பெரும்ஜோதி ஆண்டவர் அருள் 

புறிவார்.துறவியாருக்கு நன்றி '---.






மேலும் சத்திய ஞான சபையை சுற்றி இரும்பு

சங்கிலியால 


பின்னப்பட்ட இரும்பு வளையம் உள்ளது 


1873 ;-ம் வருடம் அமைக்கப்பட்டதாகும் ,


சுமார் 137வருடத்திற்குமேல் வள்ளலாரால் அமைக்கப் 


பட்டதாகும் .திறந்த வெளியில் வெய்யிலும் ,மழையிலும்


இருக்கின்றது .துருப்பிடிக்காமலும்,பழுது அடையாமலும் 


எந்த பின்னமும் இல்லாமல் அப்படியே புதியது போல் 


இருக்கின்றன .


அந்த சங்கிலி தங்கத்தால் செய்தது ,அது ஊன கண்களுக்கு 


இரும்புபாகத் தெரியும் ,ஞான கண்களுக்கு தங்கமாகத் 


தெரியும் என்பது பல பேர்களுடைய கருத்துகளாகும் .


இந்த சங்கிலியின் ரகசியம் இதுவரை யாருக்கும் ,


தெரியாத, புரியாத செய்திகளாகும்.


வள்ளலார் வகுத்து தந்த சுத்த சன்மார்க்க கொளகைகளை 


யார் முழுமையாக கடைப்பிடிக்கிறார்களோ ,


அவர்களுத்தான் இதன் உண்மைகள் தெரியவரும் .


அதுவரை பொறுத்திருந்து பார்ப்போம் .


நாம் அனைவரும் வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க 


கொள்கைகளை கடைப்பிடித்து அருட்பெரும்ஜோதி 


ஆண்டவரின் அருளைப்பெற்று நளமுடன் வாழ்வோம் .


நன்றி ;--


கொல்லாநெறியே குவலயம் ஓங்குக


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க .


நன்றி ;------மீண்டும் பூக்கும் .'--------       


    
                         
                           ''அருட்பெரும்ஜோதி ''
    
  



  


      
        

6 கருத்துகள்:

23 ஜூலை, 2010 அன்று PM 4:21 க்கு, Blogger chamundihari கூறியது…

Nice to read this blog

Harimanikandan

 
30 டிசம்பர், 2010 அன்று PM 12:58 க்கு, Anonymous கங்கை மணிமாறன் கூறியது…

அய்யா வணக்கம் .தங்கள் விளக்க உரைகள்
படித்தேன் .பெருமானின் திருவளர் வரலாற்றில்
நிறைய எழுத்துப் பிழைகள் உள்ளன. கவனிக்கவும்.
தங்கள் முயற்சி வெல்க. விரைவில் நானும் வள்ளலாரைக்
கொண்டுவர உள்ளேன். சந்திப்போம்.நன்றி.
கவிஞர்.கங்கை மணிமாறன்
பேசி:9443408824 சென்னை-120

 
30 டிசம்பர், 2010 அன்று PM 1:45 க்கு, Anonymous கவிஞர் கங்கை மணிமாறன் கூறியது…

சாதி சமயங்களைக் கட்டிக் கொண்டு
சமுதாய வீதிகளை நாறடித்துக் கொண்டிருக்கும்
சழக்குப் பிடித்த
சதிகார மனிதர்களுக்குச்
சாட்டையடி கொடுத்த,
சத்திய மனிதர்-
சன்மார்க்க ஞானி-
புத்துலகம் காணத் துடித்த
புரட்சித் துறவி-
பூகம்பமாய்ப் புறப்பட்ட
அதிசய ஆன்மிகப் புயல்-
சாதிக் கோயில்களை எல்லாம்
சோதிக் கோயில்களாக மாற்றிய
சமரசச் சித்தர்-
சகித்துக் கொள்ள முடியாத
மூட நம்பிக்கைகளுக்கு
முற்றுப் புள்ளி வைக்கவந்த
முழு நேரப பகுத்தறிவு வாதி-
நானிலத்தை வாழ்விக்க வந்த
நம் வள்ளல் பெருமான்தான் - என்பதை
ஊருக்கும் உலகுக்கும்
உரத்துச் சொல்ல வேண்டிய
ஒப்பற்ற பொறுப்பு
நம் போன்ற பேச்சாளர்களுக்கு
இருக்கிறது!
அதைத்தான் நான்
மேடைதோறும்
இலக்கணம் தவறாமல்
இன்றுவரை செய்துகொண்டிருக்கிறேன்!
தங்கள் பணியும் தொடரட்டும்
நன்றி!
கவிஞர் கங்கை மணிமாறன்
அதிப்பட்டுக் குடியிருப்பு
சென்னை-120
பேசி:9443408824

 
30 டிசம்பர், 2010 அன்று PM 2:38 க்கு, Anonymous கவிஞர் கங்கை மணிமாறன் கூறியது…

''திருவருட்பிரகாச வள்ளலார்
மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை ''
என்னும் பெயரில்
ஓர்அறக்கட்டளை நிறுவி
வள்ளலார் நெறி நின்று
சமூக அறப்பணிகள் செய்யவுள்ளேன்
தங்கள் ஆசியும்
ஆதரவும் எதிர்பார்க்கிறேன்.
கவிஞர்.கங்கை மணிமாறன்
அத்திப்ப்பட்டு குடியிருப்பு
சென்னை-120

 
5 ஜனவரி, 2011 அன்று PM 9:08 க்கு, Blogger கவிஞர் கங்கைமணிமாறன் கூறியது…

''அகத்தே கறுத்துப் புறத்தே வெளுத்த

உலகர் அனைவரையும்

சகத்தே திருத்திச்

சன்மார்க்கச் சங்கத்து அடைவித்திட

இகத்தே வந்து உதித்த''வர்தான்-

எத்துணையும் பேதமுறாது

எவ்வுயிரும் தம்முயிர்போல் எண்ணிய-

அருட்பிரகாச வள்ளலார்.

அவரைப்போல

ஒரு சமூகச் சீர்திருத்தவாதி

பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில்

தமிழ் நாட்டில் எவரும் பிறக்க வில்லை..!

கவிஞர் கங்கை மணிமாறன்

 
18 நவம்பர், 2011 அன்று AM 7:52 க்கு, Anonymous aruthpa srinivasan கூறியது…

nantri

 

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு