ஞாயிறு, 4 ஜூலை, 2010

திரு அருட்பா,

.      திருஅருட்பா என்னும் அருள் நூல் திருஅருட்பிரகாச வள்ளலாரால்

எழுதப்பட்ட நூலாகும்,உண்மைக்கடவுளை உலகுக்கு காட்டிய


உணமையான நூலாகும்.


உண்மையை உணருங்கள் எனற பாடல் ;---


உண்மையுரைக்கின்றேன் இங்கு வந்தடைமின் உலகீர் 


உரையித்னிற் சந்தேகித்து உளறிவழியாதீர்


எண்மையினால் எனை நினையீர் எல்லாம் செயவல்லான்


என்னுள் அமர்ந்து இசைக்கின்றான் இது கேண்மின் நீவிர் 


தண்மையோடு சுத்த சிவசன்மார்க்க நெறியிற் 


சார்ந்து விரைந்து தேறுமினோ சத்திய வாழ்வளிக்கக் 


கண்மைதரு மொருபெருஞ் சீர்க் கடவுள் எனபபுகலும்


கருணை நிதி வருகின்ற தருணம் இது தானே .


;--என்ற உண்மை யுடன் திரு அருட்பாவை இந்த உலகத்திற்கு 


தந்துள்ளார் .


திருஅருட்பா ஆறுதிருமுறைகளைக் கொண்டது .


ஐந்து திருமுறைகள் ஒரு புத்தகமாகவும் ,ஆறாவது 


திருமுறை மட்டும் வேறு புத்தகமாகவும் வெளிவந்துள்ளது ,


அதுதவிர உரைநடைப் பகுதி எளிய முறையில் அனைவரும் ,


புரிந்துக் கொள்ளும்படி எழுதிவைத்துள்ளார் .


திரு அருட்பா ஆறாவது திருமுறையை கையாளுபவர்கள், 


வள்ளலார் காட்டியபடி புனிதமுறும் சுத்த சன்மார்கத்தின் 


முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டுரிமையைப் 


பெற்று ஜீவ காருண்யத்தை தெய்வ வழி பாடாகக் கொண்ட 


சமரச நன்னிலை எய்திய பக்குவ நிலையுடையார்களே 


ஆவார்கள், என்பது அனைவரும் அறியவேண்டுவதாகும் .


திருஅருட்பா பாடல்களின் பொருள்கள் மூன்று வகைப்பதும்



  1. உபாயப்பொருள்,
  2. உண்மைப்பொருள் ,
  3. அனுபவப்பொருள், 
  4. என்று மூன்று வகைப்படும் 

  1. உபாயப்பொருள் என்பது திருஅருட்பா பாடலில் எல்லாராலும் 
அறியக்ககூடிய உபாயப்பொருள் -அதாவது பொதுஅறிவுப்பொருள்.

  2,உண்மைப்பொருள் என்பது திரு அருட்பா பாடல்களின் 

சிறப்புப்பொருள்;-அதாவது நுட்பமான சத்தியப்பொருள்.

  3 ,அனுபவப்பொருள் என்பது திருஅருட்பா பாடல்களில்  

இருக்கும் கடவுள் அனுபவத்தை அறிவிக்கும் பொருள் ..   


       இந்த அனுபவப் பொருளை விளங்கிக்கொள்ள 


திரு அருட்பா பாடலில் ஈடுபாடு உள்ளவர்களும் ,


இறை நம்பிக்கை உள்ளவர்களும் ,ஜீவகாருண்ய 


ஒழுக்கம் உள்ளவர்களும் அமர்ந்து சத்விசாரம் 


செய்யவேண்டும் .அதாவது தங்கள் தங்கள் 


அனுபவங்களை ஒப்பிட்டு விவாதித்து முழு அனுபவ 


உணமையை அறிந்து கொள்ள வேண்டும் .


      அனுபவப் பொருள் இது என்ற உண்மையைத் 
தெரிந்து கொன்டால் மட்டும் போதாது .


      அந்தப் பொருளோடு ஒன்ற வேண்டும் .அதை 
வாழ்க்கையிலும் மேற்கொள்ளவேண்டும் .இப்படி 
வாழும் வாழ்வுதான் அனுபவப் பொருளுடன் இணைந்து 
வாழும் முழு வாழ்கையாகும் .


ஜீவகாருண்ய ஒழுக்கம் ,மனுமுறைகண்டவாசகம் ,
விண்ணப்பங்கள் ,வியாக்யானங்கள்,குறிப்பு 
விளக்கங்கள் ,திருமுகங்கள் அதாவது கடிதங்கள் ,
உபதேசப்பகுதிகள் முதலிய திரு அருட்பா 
உரை நடப்பகுதிகளை ஒரு முறைக்குப் பலமுறை 
படிக்கவேண்டும்.படித்து அதன் அனுபவ 
உண்மையைப் புரிந்துகொள்ளவேண்டும்.
புரிந்துகொண்ட அனுபவ உண்மைகளை 
வாழ்க்கையிலும் கடைப்பிடித்து ஒழுக 
முயலவேண்டும்.தொடர்ந்து முயலவேண்டும் .


    வள்ளலார் காட்டிய சுத்த சன்மார்க்க லட்சியம் 
என்பது ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமை ,
அதாவது எல்லா உயிகளையும் நேசித்து அவைகளிடம் 
சகோதர உரிமை பாராட்டுவதாகும் .


     வள்ளராரின் உபதேசகங்கள் அவர் உபதேசித்தபோது 
பல அன்பர்களால் அவரவர்க்கு முடிந்தவரை,புரிந்தவரை 
குறிப்பு எடுக்கப்பட்டவை வள்ளலாரின் உபதேசங்களை 
குறிப்பு எடுத்த அன்பர்களின் கவனக்குறைவாலும் ,
தவறாலும் ,தெளிவின்மையினாலும் சில இடங்கள் 
மாறுபட்டும் விடுபட்டும் இருக்கின்றன .


      இந்தக் குறைபாடுகளை எல்லாம் நீக்கி வள்ளலாரின் 
உபதேசங்களைச சரியாகப் புரிந்து கொள்வதற்கு 
முதலில் வள்ளலார் காட்டிய அருட் பெரும்ஜோதியின்
மீது  நம்பிக்கை வேண்டும்.இரண்டாவது திருஅருட்பா 
பாடல்களுடன் பொருத்தமாக இருக்கும் 
உபதேசப் பகுதிகள் எவை எவை என்று ஒப்பிட்டுப் 
பார்த்துப் புரிந்து கொள்ளவும் வேண்டும் .


      இந்த முயற்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டால் 
அருட்பெரும் ஜோதி ஆண்டவர் அதன் உண்மைப் 
பொருளையும் அனுபவப் பொருளையும் புரிந்து 
கொள்வதற்கு நமக்குத் துணைபுரிவார் .


      இன்றைய உலகம் புலன் இன்பம் ஒன்றிலேயே 
அதிக நாட்டம் உள்ளதாக இருக்கிறது .இதனால்தான் 
மக்களிடம் துன்பமும்,துயரமும் அழிவும் பெருகி  பெருகி வருகின்றன.


     இந்த வாழ்க்கை முறை மிகத்
தவரான்முறையாகும்.


அப்படி மாற்றிக்கொண்டு வாழப் பழகு வதற்குத்


திருஅருட்பா பாடல்களையும் திருஅருட்பா

உரைநடைப் பகுதிகளையும் துணையாகக

கொள்ளவேண்டும்.வள்ளலார் 
எவ்வளவு

இரக்கத்துடனும்,அன்புடனும்,கருணையுடனும்
,
பண்புடனும் வாழ்ந்துதிருக்கிறார் என்பதைப்

புரிந்து கொள்ளவேண்டும்.


     வள்ளலாருக்குதான் எவ்வளவு எளிமை/


எவ்வளவு இரக்கம் எவ்வளவு தன்னடக்கம்/


எவ்வளவு திருஅருள் நம்பிக்கை/


     இவற்றை நினைந்து நினைந்து உணர்ந்து

உணர்ந்து நாம் வாழ்க்கையில் தொடர்ந்து

மேற்கொள்ள முயற்ச்சி செய்யவேண்டும் .


பரி பூரணமாகப் பின்பற்ற முயலவேண்டும்.  
            
இதோ வள்ளலாரின் பாடல் ஒன்று ;--


நினைந்து நினைந்து உணர்ந்து உணர்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து அன்பே 


நிறைந்து நிறைந்து ஊற்றுஎழும் கண்ணீர் அதனால் உடம்பு 


நனைந்து நனைந்து அருள் அமுதே நன்னிதியே ஞான 


நடத்தரசே என்னுரிமை நாயகனே என்று 


வனைந்து வனைந்து ஏத்துது நாம் வம்மின் உலகியலீர் 


மரணமிலாப் பெரு வாழ்வில் வாழ்ந்திடலாம் கண்டீர் 


புனைந்துரையேன் பொய்புகலேன் சத்தியம் சொல்கின்றேன்


பொற்சபையில் சிற்சபையில் புகுந்தருணம் இதுவே .


என்று தெளிவாக தெரிவித்துள்ளார் வள்ளலார் .


      தன்னை மறைத்தல் என்ற பண்பில் ,தான் என்ற 
அகங்காரத்தை அடியோடு விடுவதைப் பற்றிக் குறிப்பிட்டு
இருக்கிறார்.


     தன்னைப்பற்றியோ,மற்றவர்களைப்ப்ற்றியோ போலி 
உலக விவகாரங்களைப் பற்றியோ,வள்ளலார் ஏதாவது 
கூறி இருக்கிறாரா /இல்லை .


இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன /


இறைவன் அருளையே பெறவேண்டும் என்ற உண்மைதான் .


இறைவன் அருளைபெற,நாம் என்ன செய்யவேண்டும் /


     அன்பு, தயவு, கருணையே வடிவமாக இருந்து ஜீவகாருண்ய 
ஒழுக்கத்துடன் நாம் வாழ முயலவேண்டும் .


     இப்போது நாம் அப்படி வாழவில்லை ,அழியக் கூடிய,
துன்பம் தரக்கூடிய,புலன் பொறி இன்ப வாழ்க்கையிலேயே 
மூழ்கிக் கிடக்கிறோம் .


இப்படி வாழ்வது வாழ்வு அல்ல என்கிறார் வள்ளலார் .


இதோ ஒரு பாடல்;---


வையகத்தீர் வானகத்தீர் மற்றகத்தீர் உமது 


வாழ்க்கை எல்லாம் வாழ்க்கை என மதித்து மயங்காதீர் 


மையகத்தே யுறு மரண வாதனையைத் தவிர்த்த 


வாழ்க்கையதே வாழ்க்கை என மதித்து அதனைப் பெறவே 


மெய் யகத்தே விரும்பி இங்கே வந்திடுமின் எனது 


மெய்ப் பொருளாம் தனித்தந்தை இத்தருணம் தனிலே 


செய்யகத்தே வளர் ஞான சித்தி புரந்தனிலே 


சித்தாடல் புரிகின்றார் திண்ணம் இது தானே .


     நம் உள்ளே நமக்கு அழியா வாழ்வைத் தருகின்ற 
இயற்கை உண்மையாகிய அருட்பெருஞ்ஜோதி 
இருக்கிறது .


     புறத்தில் அடிகடி மாறிக்கொண்டும், அழிந்துகொண்டும் 
இருக்கும் நிலை இல்லாத பொருகள் இருக்கின்றன .


     இயற்கை உண்மையாகிய நிலையான அருட்பெரும் 
ஜோதியை நம்பாமல்,,மாறிக்கொண்டும் அழிந்துகொண்டும் 
இருக்கும் நிலையற்ற பொருள்களை ,நம்பி புலன் 
இன்பத்துக்காகவே வாழ்கிறோம்,இப்படி வாழ்வது விலங்கு 
வாழ்க்கையாகும் .


     இந்த விலங்கு வாழ்க்கையை விட்டு சிரநடு சிற்றம்பலத்தில் 
இருக்கும் அருட்பெரும் ஜோதியை உணர்ந்து ,அதனுடன் 
ஒன்றி வாழும்  வாழ்க்கை தான் உண்மையான மனித வாழ்க்கையாகும் .
அருள் அனுபவத்தில் உயரும் மாமனித வாழ்க்கையாகும் .


இங்கு ஒரு உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும் .


    உள்முகமாகவே இருந்து ஒழிந்து போகவும் கூடாது
புற வாழ்க்கையிலேயே மிதந்து அழிந்து போகவும் கூடாது.


     வேறு என்ன செய்யவேண்டும் .


     அருட்பெரும் ஜோதி இறைவனின் திருவடியை இறுகப் 
பற்றிக் கொண்டு உயிர்களிடம் இரக்கம் காட்டி அவைகளுக்குப் 
பணிபுரிந்து வாழ வேண்டும் .


     நடைமுறையில் இப்போது நாம் உலகில் வாழ்கின்ற 
வாழ்க்கை உண்மையான வாழ்க்கை அல்ல .


    அருட்பெரும் ஜோதி இறைவனிடம் நாம் வைத்திருக்கும் 
பற்று உறுதியாக இருக்க வேண்டும் .அதைப் பற்றிக் கொண்டே
உலக உயிகளிடம் அன்பு செலுத்தியும் வாழவேன்டும் .


     இப்படி வாழ்ந்தோமானால் ,நம் உள்ளே இருக்கும் இறைவன் 
அங்கிருந்து அனகமாக விரிந்து ,நம் உயிரிலும் ,மனதிலும் ,
உடம்பில் இருக்கும் ஒவ்வொறு உயிர் அணுவிலும் ,நம் 
சூழ் நிலையிலும் பரவி நிலை கொள்வார் .நம்மையும்
நிலைப் பெறச செய்வார் .


     இவ்வாறு உள் இருந்து இறைத்தன்மை விரிந்து உருவாகும் 
வாழ்க்கை தான் அனக வாழ்க்கை ,சத்திய வாழ்க்கையாகும் .


    திருவருளின் துணையைக் கொண்டு ,நம் உள் இருந்து 
தழைத்துப் பொங்கும் பேரின்ப வாழ்க்கையை உலக மக்கள் 
அனைவரிடமும் நாம் பரப்ப முயலவேண்டும் .


    உலகில் உள்ள அனைவரும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க 
கொள்கைகளைக் கடைப்பிடித்து பேரின்ப வாழ்க்கையில் 
வாழ்வோம் .


இதோ வள்ளலாரின் ஒரு பாடல்;-- 


ஆதியும் அந்தமும் இல்லாததோர் அம்பலத்தாலாடும


சோதித் தன்னையே நினைமின்கள் சுகம் பெற விழைவீர் 


நீதிக் கொண்டு உரைத்தேன் இது நீவிர் மேலேறும் 


வீதி மற்றைய வீதிகள் கீழ்ச செல்லும் வீதி .


  ;---கொல்லாநெறியே குவலயம் ஓங்குக
       
       எல்லா உயிகளும் இன்புற்று வாழ்க .


 நன்றி ;--மீண்டும் பூக்கும். 


       

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு