வியாழன், 8 ஜூலை, 2010

உலகம் சமம் என்பது எப்படி ?.

      

வேலையில் வித்தியாசம் இருக்கலாம் 
ஊதியத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது . 
உலகம் சம நிலை பெறவேண்டும் 
உயர்வு தாழ்வு இல்லா 
நிலை வேண்டும் .

இந்த உலகத்தில் உள்ள முற்போக்கு சிந்தனையாளர்கள் ,

 ஐக்கிய நாட்டு தலைவர்கள் ,அரசியல் தலைவர்கள் ,

ஆன்மீகவாதிகள் ,பொதுநோக்க சிந்தனையாளர்கள் ,

பொருளாதார நிபுணர்கள் ,ஆட்சியாளர்கள் ,விஞ்ஞான ,

அறிவியல் நிபுணர்கள் , பல கட்சிகளின் தலைவர்கள்,

மற்றும் உள்ள அனைவருடைய பேச்சும் சிந்தனையும் ,

ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயம் உருவாக்க வேண்டும் 

என்றும் ,சாதி ,மதம் ,சமயம் போன்ற வேறுபாடுகள்

இருக்க கூடாது என்றும் ,உயர்ந்தவன் தாழ்ந்தவன் அற்ற 

சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்றும் ,எல்லோரும் 

இந்நாட்டு மன்னர்கள் என்றும் ,வாய் கிழிய பேசிக்கொண்டும் ,

எழுதிக்கொண்டும் ,அதற்க்கான சட்டத்திட்டங்களை 

தீ ட்டிக்கொண்டும் வருகிறார்கள்.

         இதனால் எல்லாம் தீர்ந்து விடுமா ?என்றைக்கும் தீராது .

எப்படித்தீரும் ?

        இதற்க்கு ஒரே வழிதான் இருக்கிறது .பொருள் ஆதாரம் 

ஒன்றுதான் வழி .

       மனிதர்களாக பிறந்த அனைவருக்கும் சுகமாக வாழவேன்டும்

குறைவு இல்லாமல் வாழவேன்டும்,சமமாக வாழவேன்டும்,

பொதுவாக வாழவேன்டும்,என்ற ஆசைகள் அனைவருக்கும் 

உள்ளது .

       நம்நாட்டில் வேலைக்கு செல்ல ,திருமணம் செய்துகொள்ள ,

ஒட்டு போட ,வயது வரம்பு 21 வயது என அரசாங்கம் நிர்ணயம்

செய்துள்ளது .

கக்கூஸ் எடுப்பவன் முதல் நாட்டை ஆளும் ஆட்சி யாளர்கள்

வரை ,அனைவரும் உழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் .

ஏன் ? பொருள் ஆதாரத்தில் வித்தியாசம் இருக்க வேண்டும் .

       நம் நாட்டில் அனைவருடைய முயற்சியால் தான் ,

பொருள்கள் கிடைக்கிறது .அப்படி இருக்கும் போது ஏன்

சமமான ஊதியம் கொடுக்கக் கூடாது.தனிமனிதனால்

எதையும் உருவாக்க முடியாது .ஒவ்வொரு மனிதருக்கும்

ஒவ்வொரு திறமை இருக்கிறது .அதை ஏன் மனித இனமும் ,

ஆட்சியாளர்களும் புரிந்து கொள்ளவில்லை .இதை புரிய

வைப்பது யார் ?.இதற்க்கு பதில் எங்கே இருக்கிறது .?

       பட்டம் பதவியில் இருப்பவர்களும் ,பெரும்

பணக்காரர்களும் ,உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொண்டு

இருப்பவர்களும் ,இதை ஏற்றுக்கொள்வார்களா ?

எல்லோருக்கும் வசதியாக வாழவேன்டும் என்ற  ஆசை

இல்லையா ? பொருள் இல்லாததால் இது நம் தலைவிதி

என்று தன்னை அடக்கிக் கொண்டு வாழ்ந்து கொண்டு

இருக்கிறார்கள் .அதை பயன் படுத்தி ஏமாற்றிக் கொண்டு

நிம்மதியாக வாழ்ந்து வருகிறது ஒரு கூட்டம்.

இன்று நேற்று அல்ல ,பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த

படுபாதக செயல் நடந்து கொண்டு இருக்கிறது .

       சாதியால், மதத்தால்,சமயத்தால் ,வர்ணத்தால் ,

தொழிலால் ,பொருளால் மனித குலத்தை பிரித்து

வைத்து படுகுழியில் தள்ளி வைத்து விட்டார்கள் .

      அதை நினைத்து வள்ளலார் வேதனை அடைந்து
பல பாடல்கள் எழுதியுள்ளார் .அதில் ஒருபாடல் ;---

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே

சாத்திரச்சந் தடிகளிலே கோத்திரச சண்டையிலே

ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்

அலைந்து அலைந்து வீணே நீ அழிதல் அழகலவே

நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான

நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர் தாமே

வீதியிலே அருட்ஜோதி விளையாடல் புரிய

மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே .

     என்று அனைவரையும் அழைக்கின்றார் வள்ளலார் .

மனிதகுலத்தை பிரித்த இந்த சமுதாயத்தை ஒன்று

படுத்தியே தீருவேன் என்று சபதமிடுகிறார் வள்ளலார்.

        இந்த கொடுமைகளை சரிபடுத்த யாரோ ஒருவர்

கண்டிப்பாக வருவார் என்பதில் எந்தவித சந்தேகமும்

இல்லை .காலம் மாறிக்கொண்டே வருகிறது .கல்வி

வளர்ந்து கொண்டே வருகிறது ,விஞ்ஞானம் வளர்ந்து

கொண்டே வருகிறது ,பகுத்தறிவு பெருகிக் கொண்டே

வருகிறது ,மக்கள் விழிப்புடன் இருக்கிறார்கள் ,

நிச்சயம் வள்ளலார் சொல்லியது அத்தனையும்

நடந்தே தீரும் .

ஆதலால் ஏற்ற தாழ்வற்ற சமுதாயம் உருவாக

வேண்டுமானால்,

உழைப்பில் வித்தியாசம் இருக்கலாம்

ஊதியத்தில் வித்தியாசம் இருக்கக் கூடாது.

அந்த நிலை எப்பொழுது வருமோ அப்பொழுது தான்

ஏற்ற தாழ்வு அற்ற சமுதாயத்தை காண முடியும் .

கண்டிப்பாக நடந்தே தீரும் பொறுத்திருந்துப் பார்ப்போம் .

வள்ளலார் பதிவு செய்துள்ள பாடல்கள் ;---

கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக

அருணயந்த நன்மார்க்கர் ஆள்க;--தெருனயந்த

நல்லோர் நினைந்த நலம் பெறுக நன்று நினைத்

தெல்லோரும் வாழ்க விசைந்து .
    
      மற்றும் ஒருபாடல் '===

நடுநிலை இல்லாக் கூடடத்தைக் கருணை

நண்ணிடார் தமையரை நாளுங்

கெடுநிலை நினைக்க்ஞ் சிற்றதி காரக்

கேடரைப் பொய்யலால் கிளத்தாப்

படுநிலை யவரைப் பார்த்த போதெல்லாம்

பயந்தனன் சுத்த சன்மார்க்கம்

விடுநிலை உலக நடை யெலாங் கண்டே

வெருவினேன் வெருவினேன் எந்தாய் .

அடுத்து ;---

ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்

ஒருமை யுளராகிஉலகியல் நடத்தல் வேண்டும் .

இருளாமையுறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந

திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்பம் அடைதல் வேண்டும் .    

எனை அடுத்தார் தமக்கெல்லாம் இன்பம் தரல் வேண்டும்

இச்சாதி சமய விகற்பங்கள் எல்லாம் தவிர்த்தே

எவ்வுலகும் சன்மார்க்கம் பொதுவடைதல்வேண்டும் .

       என்று ஆயிரக் கணக்கான பாடல்கள் பாடியுள்ளார் .

வள்ளலார் அவர்கள் கூரிய படி நடந்தால் சாதி ,மதம்

சமயம் முதலான கொடிய நோய்கள் நமைவிட்டு

வழி தெரியாமல் மறைந்துவிடும் .

        ஆதலால் ஊதியம் சமமாகாமல் அனைவரும்

சமமாக வாழமுடியாது .என்பதுதான் உண்மையாகும் .

நிச்சயம் நிறைவேறும் என்பதும் உண்மையாகும் .

ஒன்று படுவோம் ஒன்றாகவாழ்வோம்

சமமாக வாழ்வோம் ,

நன்றி ;---மீண்டும் பூக்கும் .

  

             

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு