திங்கள், 8 நவம்பர், 2021

வாழும் வழிகாட்டியவர் !

 *வாழும் வழிகாட்டியவர்!*


வள்ளலார் பாடல்!


கண்டதெலாம் அநித்தியமே கேட்டதெலாம் பழுதே

*கற்றதெலாம் பொய்யே* நீர் களித்ததெலாம் வீணே


உண்டதெலாம் மலமேஉட் கொண்டதெலாம் குறையே

உலகியலீர் இதுவரையும் உண்மையறிந் திலிரே


விண்டதனால் என்இனிநீர் *சமரசசன் மார்க்க*

*மெய்ந்நெறியைக்* *கடைப்பிடித்து* *மெய்ப்பொருள்நன் குணர்ந்தே*


எண்டகுசிற் றம்பலத்தே எந்தைஅருள் அடைமின்

*இறவாத வரம்பெறலாம் இன்பமுற லாமே.*! 


மேலே கண்ட பாடலை ஊன்றி கவனிக்கவும். 


*உலகியல் மனித வாழ்க்கைக்கு தேவையான வாழ்க்கை முறைகளை  வகுத்து தந்த அனைத்து அருளாளர்களும்  அருளியல்  வாழ்க்கை முறைகளை  தவறாகவே காட்டி உள்ளார்கள்*. 


அதனால்தான் மனிதர்கள் இயற்கை உண்மைக் கடவுளான அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்புகொண்டு அருளைப்பெற்று மரணத்தை வெல்ல முடியாமல் மாண்டுகொண்டே உள்ளார்கள்


*எனவேதான்  நாம் கண்ணால்  கண்ட காட்சிகள். காதால் கேட்ட செய்திகள். நாம் கற்ற கல்விமுறைகள். களித்து மகிழ்ந்த சிறிய இன்பங்கள். நாம் உண்ட உணவுவகைகள். பலவகைகளில் உட்கொண்டது எல்லாம் மரணத்திற்கு இட்டுச் சென்றதே தவிர மரணத்தை வெல்லுவதற்கு மேலே கண்ட செயல்கள்யாவும் தடையாகவே இருந்துள்ளன எனத் தெளிவாக வள்ளலார் சொல்லியுள்ளார்*

 *முன்னாடி வழிக்காட்டிய அருளாளர்கள் வாக்கு வடிவமாகவும்  எழுத்து வடிவமாகவும் உருவ ரூப சிலை வடிவமாகவும் அவற்றை பின்பற்றும் செயல் வடிவமாகவும் அதற்குண்டான உலகியல் கல்வி முறையாகட்டும் உணவு முறையாகட்டும் மனம் வாக்கு காயம்  எண்ணம் சொல் செயல்களின் மூலமாக நூல்களில் எழுதி விதைத்து விட்டு சென்று விட்டார்கள் அவற்றை படித்து தெரிந்து அதில் உள்ளதைபோல் வாழ்வதால் எந்த பயனும் இல்லை எந்தவிதமான  ஆன்மலாபமும் அருள் லாபமும் கிடைக்க வாய்ப்பே இல்லை  அதனால் எந்த நூல்களையும் படிக்காதீர்கள் என்கிறார் வள்ளலார்* 


*இதுவரையில் உலகியல் நூல் படித்து தெரிந்து வாழ்ந்து அழிந்தது போதும் இதற்குமேல் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரால் தோற்றுவிக்கப்பட்ட சமரச சுத்த சன்மார்க்க மெய்நெறியைப் பின்பற்றி மெய்ப்பொருள் நன்கு உணர்ந்து எல்லோருக்கும் பொதுவான அருள் தந்தை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரைத் தொடர்பு கொண்டு அருளைப்பெற்று இறவாத வரம் பெற்று என்றும் அழியாத பேரின்ப சித்திப் பெருவாழ்வில் வாழலாம் வாருங்கள் என ஆன்மநேய உரிமையுடன் அன்புடன் அழைக்கின்றார்*


இனிமேல் நான் சொல்லுவதை மட்டும் தயவுசெய்து கேளுங்கள் என்கிறார் ஏன் என்றால் ? நான் சொல்லவில்லை எல்லாம்வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் என்னுள் இருந்து சொல்லிக்கொண்டுள்ளார் என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் உண்மை எல்லாம் விளங்கும்.


*அதற்கு ஒரே பதில் நான் எந்த பள்ளியிலும் படிக்கவில்லை எனக்கு எந்த ஆசிரியரும் போதிக்கவில்லை கற்றது கேட்டது  உணர்ந்தது அறிந்தது  தெரிந்து புரிந்து கொண்டது எல்லாம் நின்னிடத்தே என்று அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடமே சொல்லுகின்றார்*


வள்ளலார் பாடல்!


ஓதாது உணர்ந்திட வொளியளித் தெனக்கே

ஆதார மாகிய வருட்பெருஞ் ஜோதி! ( அகவல்)


ஓதாது உணர உணர்த்தி உள்ளே  நின்று உளவு சொன்னது நீதான் என்றும்.


கற்றதும் நின்னிடத்தே பின் கேட்டதும் நின்னிடத்தே கண்டதும் நின்னிடத்தே  உட்கொண்டதும் நின்னிடத்தே பெற்றதும் நின்னிடத்தே  இன்புற்றதும் நின்னிடத்தே  என்றும் 


ஓதி உணர்ந்தவர் எல்லாம் எனைக்கேட்க எனைத்தான் ஓதாமல் உணர்ந்து  உணர்வாம் உருவுறச்செய் உறவே என்றும் பல பாடல்களில் எல்லோருக்கும் புரியும்படி தெளிவாகச் சொல்லியுள்ளார்.


*இந்த உண்மைத் தெரிந்து கொள்ளாமல்  வள்ளலார் யார் யாரிடமோ பயின்றார் கற்றார் பின்பற்றினார் என்று மேடைகளில் பேசும்  சன்மார்க்கிகள் தவறான செய்திகளை பரப்பி தானும் குழம்பி மற்றவர்களையும் குழப்பிக் கொண்டு  வருகிறார்கள்*


*வள்ளலார் இறைவனால் வருவிக்க உற்றவர் அவருக்கு உலக ரகசியங்கள் யாவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே உணர்த்தி தெளிவுபடுத்தி மக்களுக்கு உண்மையை போதிக்க வேண்டும் என அனுப்பி வைத்துள்ளார்  என்பதுவே உண்மையாகும்*


*வள்ளலார்போல் நாமும் உண்மையுடன் ஒழுக்க நெறிகளை பின்பற்றி வாழ்ந்தால் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் நமக்கும் தெளிவாக உணர்த்தி  அருளை வழங்கி அணைத்து ஆட்கொள்வார்*. 


*உலகியல் நூலில் உள்ளது யாவும் திருஅருட்பாவில் உள்ளன திருஅருட்பாவில் உள்ளது வேறு எந்த நூலிலும் இல்லை என்பதை முதலில் சன்மார்க்கிகள் தெளிவாக உணர்ந்து கொள்ள வேண்டும்.* *அவ்வாறு தெளிவுபெற்றால் மக்களை குழப்பாமல் தானும் குழம்பாமல் மெய்ந்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருளை நன்கு உணர்ந்து இறவாத வரம் பெற்று இன்பமுடன் வாழ்வாங்கு வாழலாம்.*


*சுத்த சன்மார்க்கத்தை பின்பற்றுபவர்கள் திருஅருட்பா தவிர வேறு எந்த நூலையும் பின்பற்ற மாட்டார்கள் என்பதே வள்ளலார் காட்டிய மெய்ந்நெறி ஒழுக்க உண்மையாகும்.*


சுத்த சன்மார்க்கிகள் வாழ்க்கையில் எவ்வாறு கடைபிடித்து வாழவேண்டும் என்பதை அடுத்த கட்டுரையில் தெளிவு பெறலாம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு