வியாழன், 11 நவம்பர், 2021

சன்மார்க்கிகள். கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்!

 *சன்மார்க்கிகள் கடைபிடிக்க வேண்டிய கட்டளைகள்!* 


வள்ளலார் கொள்கையை பின்பற்றுபவர்கள் நான்கு வகையாக உள்ளார்கள்.


1 கடவுள் பக்தி உள்ளவர்கள்.

2. சாதி சமய மதங்களை   சார்ந்தவர்கள்.

3.கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள்

4. வள்ளலார் கொள்கையை மட்டும்  பின்பற்றுபவர்கள். 


மேலே கண்டவர்கள் எவ்வாறு இருந்தாலும் என்ன வழிபாடு செய்தாலும் செய்யாவிட்டாலும் அன்பு தயவு கருணை இரக்கம் உள்ளவர்களை மட்டுமே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ஏற்றுக்கொள்வார். 

(எங்கே கருணை இயற்கையில் உள்ளன அங்கே விளங்கிய அருட்பெருஞ்ஜோதி)  


*அதற்கும் மேலே உயிர்க்கொலையும் புலைபுசிப்பும் மறுத்தவர்களை ஆண்டவர் அதிகமாக நேசிப்பார் அவர்களே கடவுளிடம் நெருக்கமாக தொடர்புகொள்ளும் வாய்ப்பை பெற்றவர்களாக இருப்பார்கள்*


*எனவேதான் தயவு உடையோர் எல்லோரும் சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்கள் என்கின்றார்.*


அவர்கள் *சன்மார்க்க சங்கத்தை சார்ந்தவர்களேத் தவிர அருளைப் பெற்றவர்கள் அல்ல என்பதை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்*  *அருளைப் பெறுவதற்கு வள்ளலார் சொல்லியவாறு சுத்த சன்மார்க்க கொள்கையை முழுமையாக பின்பற்றி வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டும்* 


*வள்ளலார் சொல்லிய சுத்த சன்மார்க்க கொள்கைகள்!* 


*முதலில் கடைபிடிக்க வேண்டியவைகள் இந்திரிய கரண ஜீவ ஆன்ம ஒழுக்கம் எனும் நான்கு ஒழுக்கங்களாகும்.அதில் ஜீவகாருண்யம் செய்வதற்கு (அதாவது மற்ற உயிர்களின் துன்பங்களைப் போக்குவதற்காக) கண் காது மூக்கு வாய் உடம்பு எனும் இந்திரிய ஒழுக்கமும்.மனம் புத்தி சித்தம் அகங்காரம் எனும் கரண ஒழுக்கங்களை மட்டும் கடைபிடித்தால் போதுமானதாகும்*  *இந்த இரண்டு ஒழுக்கங்கள் முற்றுபெற்றால் ஜீவ ஒழுக்கம் ஆன்ம ஒழுக்கம் எனும் இரண்டு ஒழுக்கங்களை ஆண்டவர் இலவசமாக (அன்பளிப்பாக) வழங்குவார்* 


*புற ஒழுக்கம் நிறைவு பெற்றால் அக ஒழுக்கம் தானே வரும்*


*ஒழுக்கங்களை கடைபிடிக்க தடையாக இருப்பது எதுவென்றால்?  உலகவாழ்க்கையில் கடைபிடித்துக் கொண்டு இருக்கும் சாதி சமய மதக்கொள்களாகும். எனவேதான்  அவைகளை முற்றும் பற்றுஅற  அகற்றி விடவேண்டும் என்று  மிக அழுத்தமாக வள்ளலார் சொல்கிறார்.*


*வள்ளலார் சொல்லுவதை மிகவும்  கவனமாக ஊன்றி கவனித்து பின்பற்ற வேண்டும்*


*எல்லாமுடைய அருட்பெருஞ்ஜோதி அற்புதக் கடவுளே !* 


*இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடைகளாகிய சமயங்கள். மதங்கள். மார்க்கங்கள் என்பவற்றின் ஆச்சார சங்கற்ப விகற்பங்களும் வருணம். ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும். எங்கள் மனத்தில் பற்றாதவண்ணம் அருள் செய்தல் வேண்டும்*


*சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள். எக்காலத்தும். எவ்விடத்தும். எவ்விதத்தும். எவ்வளவும் விலகாமல்  நிறைந்து விளங்கச் செய்வித்து அருளல்வேண்டும் என்று இயற்கை உண்மை கடவுளான தனிப்பெருந் தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரிடம் விண்ணப்பம் வைக்கிறார் நம்மையும் உண்மை ஒழுக்கத்துடன் விண்ணப்பம் செய்யச் சொல்கிறார்* 


*மேலும் சுத்த சன்மார்க்கத்தில் சாதனம் சாதனங்கள் ஒன்றும் வேண்டாம்* 


*எதாவது ஓர் சாதனம் சொல்லக்கேட்டு அதன்படி நடந்தால் சிறு ஒளி உண்டாகும் அதைக்கண்டு பல் இளித்து இறுமாந்து கெடநேரிடும்*


*ஆதலால் காலந் தாழ்த்தாது எல்லா உயிரையும் தன்னுயிரைப்போலப் பார்க்கும் உணர்வை வருவித்துக்கொள்ளல் வேண்டும்* *இதுவே சாதனம் இந்தகுணம் வந்தவன் எவனோ அவன்தான்  இறந்தவரை எழுப்புகிறவன். அவனே ஆண்டவனுமாவான்*


*சுத்த சன்மார்க்கத்துக்கு முக்கிய சாதனம் என்னவென்றால்?*


*எல்லா ஜீவர்களிடத்தும் தயவும் ஆண்டவரிடத்தில் அன்பும் முக்கியமானவை*  *உதாரணம் ஆண்டவர் சொல்லியது :- கருணையும் சிவமே பொருள் எனக்காணும் காட்சியும் பெறுக. மற்று எல்லாம் மருள்நெறி என நீ எனக்கு அறிவித்த வண்ணமே பெற்று இருக்கின்றேன். என்னும் உண்மையை வெளிப்படுத்துகிறார்*


*இந்த உண்மையை உணர்ந்து அறிந்து தெரிந்து வாழ்கின்றவன் எவனோ அவனே சுத்த சன்மார்க்கி என்பவனாகும்*.

*அவனால் மட்டுமே பூரண அருளைப்பெற்று மரணத்தை வெல்லமுடியும்*.

*சாகாதவனே சன்மார்க்கி என்பவனாகும்* 


*வள்ளலார் காட்டிய இயற்கை உண்மைக் கடவுள் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை மட்டுமே தொடர்பு கொள்ள தெரிந்தவனே உண்மையான் நேர்மையான ஒழுக்கம் நிறைந்த சுத்த சன்மார்க்கத்தைபின்பற்ற தெரிந்த அறிவு பெற றவனாகும் .* 


*வள்ளலார் காட்டிய உண்மை ஒழுக்க நெறிகள்  முழுவதையும் பின்பற்றி வாழ்பவன் எவனோ அவன்தான் மரணத்தை வெல்லும் தகுதி பெற்றவனாகும்.*


*இதைவிடுத்து உணவுபோட்டால் மட்டும் போதும் மரணத்தை வென்றுவிடலாம் என நினைக்கின்றவர்கள் சுத்த சன்மார்க்க கொள்கையை பின்பற்றத் தெரியாதவர்கள் என்பதாகும்*. 


வள்ளலார் பாடல்! 


உண்மையுரைக் கின்றேன் இங் குவந்தடைமின் உலகீர்

உரைஇதனில் சந்தேகித் துளறிவழி யாதீர்


எண்மையினான் என நினையீர் எல்லாஞ்செய் வல்லான்

என்னுள் அமர்ந் திசைக்கின்றான் இதுகேண்மின் நீவிர்


தண்மையொடு சுத்தசிவ சன்மார்க்க நெறியில்

சார்ந்துவிரைந் தேறுமினோ சத்தியவாழ் வளிக்கக்


கண்மைதரும் ஒருபெருஞ்சீர்க் கடவுள்எனப் புகலும்

கருணைநிதி வருகின்ற தருணம்இது தானே.! 


வள்ளலார் சொல்லியுள்ள உண்மையை முழுமையாக ஏற்றுக்கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தால் வெற்றி நிச்சயம்.


எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! 


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக ! 


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல் 

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்

9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு