செவ்வாய், 7 செப்டம்பர், 2021

துன்பத்தில் இருந்து விடுபட ஒரேவழி !

 *துன்பத்தில் இருந்து விடுபட ஒரே வழி!*


*ஒவ்வொரு மனித தேகம் எடுத்த சம்சாரிகளும் அவசியம் படித்து தெரிந்துகொள்ள வேண்டியது வள்ளலார் எழுதியுள்ள ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற உரைநடை நூலாகும்*.


உலகத்தில் எந்த ஞானிகளும் ஆன்மாக்கள் ஆன்மலாபம் அடையும் வழியை இவ்வளவு எளிமையாக தெளிவாக உண்மையாக சொல்லியதில்லை


*அதில் முக்கியமான பகுதியை வெளிப்படுத்துகிறோம் ஊன்றி படித்து பயன் பெறுவோம்!*


*பசியை நிவர்த்தி செய்துகொள்ளத் தக்க புவனபோக சுதந்தரங்களைப் பெறுதற்குரிய அறிவிருந்தும்*


 பூர்வகர்மத்தாலும் அஜாக்கிரதையாலும் அச் சுதந்திரத்தைப் பெற்றுக் கொள்ளாமல் பசியினால் வருந்துகின்ற சீவர்களுக்கு ஆகாரங் கொடுத்து அந்த பசி வருத்தத்தை நீக்கித் திருப்தியின்பத்தை உண்டு பண்ணுவதற்குக் காரணமாகிய


 *சீவகாருணியம் என்கின்ற திறவுகோலைக் கொண்டுதான் மோட்சமாகிய மேல்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து எக்காலத்தும் அழியாத இன்பத்தை அனுபவித்து வாழவேண்டும்*. 


ஆகலில், சீவகாருணிய மென்கின்ற மோட்ச வீட்டுத் திறவுகோலைக் காலமுள்ள போதே *சம்பாதித்துக்கொண்ட சமுசாரிகள் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்கிற சாதன சகாயங்களை வேண்டாமல், எக்காலத்தும் அடையாத இன்ப வீட்டை அடைந்து அவ்வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே புகுந்து நித்திய முத்தர்களாய் வாழ்வார்கள்*.


*புண்ணியபூமிகளை வலஞ்செய்தல், புண்ணியதீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணியமூர்த்திகளைத் தரிசித்தல், தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல், யாகஞ்செய்தல், பூசைசெய்தல் முதலிய சரியை கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும் பத்தர்களும் இருடிகளும்*,


 *உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயச்சார்புகளைத் துறந்து இந்திரியங்களை அடக்கி மனோலயஞ் செய்து யோகத்திலிருக்கின்ற யோகிகளும், அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும்,*


*நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுக்களையும் துறந்து பிரமானுபவத்தைப் பெற்ற ஞானிகளும், சீவகாருணியம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால், மோட்ச மென்கிற மேல்வீட்டிற்கு முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத் திரும்புவார்களல்லது, கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்க ளென்று உண்மையாக அறியவேண்டும்*. 


*இதனால், அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் சீவகாருணியமே கடவுள் வழிபாடு என்றும் அறியப்படும்*


*இதைவிட விளக்கம் பெரியதாக 

ஒன்றும் தேவைஇல்லை* இதுவே ஆன்ம லாபம் அடைவதற்கு சிறந்த வழியாகும்*.


*முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது!*


*நாம் செய்யும் ஜீவகாருண்யம் நம் உழைப்பால் கிடைக்கும் ஊதியத்தைக் கொண்டு செய்தால் நூறு சதவீதம்  லாபத்தை கொடுக்கும்*. 


*மற்றவர்களிடம் இருந்து பொருளைப் பெற்று ஜீவகாருண்யம் செய்தால் 10 பத்து சதவீதம் லாபம் மட்டுமே கிடைக்கும்.* இந்த உண்மை அறிந்து ஒவ்வொருவரும் ஜீவகாருண்யம் செய்ய வேண்டும்.


*ஆதலால் வள்ளலார் வடலூரில் தருமச்சாலை துவங்கும்போது வெளியிட்டது*


*பலர் சகாயத்தாலே தருமச்சாலை நிலைபெற வேண்டும் ஆதலால் ஜீவதயை உடைய புண்ணியர்கள் தங்கள் தங்களாற் கூடியவிரைவில் பொருள் முதலிய உதவிசெய்து அதனால் வரும் லாபத்தைப் பாகஞ் செய்து கொள்ள வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை என வெளிப்படுத்துகின்றார்*. 


ஆன்மலாபத்தை பாகம் செய்து கொள்ளுங்கள் என்ற சூழ்ச்சுமமான உண்மையை வெளிப்படுத்துகிறார்*.  வடலூர் வரும் ஆயிரக்கணக்கான மக்களின் பசியை இடைவிடாது தொடர்ந்து போக்கிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதால் வடலூர் தருமச்சாலைக்கு பொருள் உதவி செய்யுங்கள் என்கிறார்*  *இது எல்லோருக்கும் பொதுவான  ஜீவகாருண்யம். *அதனாலே வடலூரில் உள்ள அடுப்பிற்கு அணையா அடுப்பு என்று பெயர்* 


*பொருள் உதவி செய்பவர்களும் அவற்றைப் பெற்று ஜீவகாருண்யம் செய்பவர்களும் நன்கு யோசித்து  செய்தல் வேண்டும்* *எவ்வாறு செய்தால் மோட்ச வீட்டின் திறவுகோல் கிடைக்கும் என்பதை அறிவைக் கொண்டு அறிந்து செயல்பட வேண்டும் என்பதே சுத்த சன்மார்க்க கொள்கையாகும்*

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க!


கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !


அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்

திருஅருட்பா ஆராய்ச்சி மையம்.

9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு