செவ்வாய், 4 பிப்ரவரி, 2020

கடவுளை வழிபடுவது ஏன் ?

*கடவுளை வழிபடுவது ஏன்* ?

உலகம் முழுவதும் பல கடவுள்கள் உள்ளார்கள்.

உயிர்களையும் மனித குலத்தையும்  காப்பாற்றவே கடவுள்கள் தோன்றியுள்ளார்கள்.
அவதாரம் செய்துள்ளார்கள்.என்று வேதங்கள்.ஆகமங்கள். புராணங்கள் இதிகாசங்கள் சொல்லுகின்றன்.

கடவுள் வாழும் இடமாகவும் அருள் வழங்கும் இடமாகவும்.ஆலயங்கள்.கோயில்கள்.
தேவாலயங்கள்.மசூதிகள்.புத்த கயா போன்ற இடங்களில் பல கடவுள்கள் அருள் பாலிப்பதாக ஆன்மீக வரலாறுகள் சொல்லுகின்றன.

தினமும் பத்திரிகைகளிலும் ஊடகங்களிலும்.சினிமாக்களில்.
சீரியல்களிலும் வெளிப்படுத்துகிறார்கள்.விளம்பரப் படுத்துகிறார்கள்.

மக்களும் தங்கள் குறைகள் நீங்க வியாதிகள் நீங்க.பிரச்சினைகள் நீங்க ஆன்மீக ஆலயங்கள் விதித்த விதிகளின்படி.
அன்றாடம் கூட்டம் கூட்டமாக சென்று வழிப்பட்டு பிரார்த்தனைகள் செய்து.வழிப்பட்டு வேண்டிக்கொண்டு வருகிறார்கள்.

பிரச்சனைகள் தீர்ந்த்தா? நோய்கள் தீர்ந்த்தா ? வலிகள் குறைந்த்தா ? வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகியதா ?
என்றால் இல்லை என்ற பதில் தான் எல்லோர் உள்ளத்தில் இருந்தும் வருகின்றது.

*கடவுள் உண்மையில் அருள் பாலிப்பதாக இருந்தால் மருத்துவ ஆராய்ச்சிகள்.மருத்துவமனைகள் தோண்றியது ஏன்* ?

ஆன்மீக ஆலயங்களை விட மருத்துவ மனைகளிலும்.
மருந்துக் ககடைகளிலும் கூட்டம் அதிகமாக சென்று கொண்டு உள்ளார்கள்.

தீக்கமுடியாத வியாதிகள் புதிய புதியதாக வந்து கொண்டே உள்ளன. புதிய வியாதிகள் மக்களை உடனே கொன்று விடுகிறது.

*மக்கள் உடம்பை பாதுகாக்க உணவை விட மருந்துகள் தான் அதிகம் உட்கொள்கிறார்கள்*.
*இதுதான் இன்றைய நிலை*.

*நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்*

என்பதை மக்கள் மறந்து விட்டார்கள்.

*இன்று கொரோனோ வைரஸ் என்ற நோய் வந்து மக்களைத் தாக்க்கி உடனே மாண்டு போகிறார்கள்*.

*மக்கள் குறை தீர்க்கும் ஆலயங்களுக்குச் செல்லாமல் மருத்துவ மனைக்கு செல்வது ஏன்* ?

*குறை தீர்க்கும் கடவுள்கள் எங்கே*?

மக்கள் வணங்கும் வழிபடும் கடவுள்கள் எங்கே போய் விட்டார்கள்.சிந்திக்க வேண்டும்.

*வள்ளலார் சொல்லும் கடவுள்* !

ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு என்றார் .

*உயிர் இரக்கமே கடவுள் வழிபாடு என்றார்*.

*இறைவனால் படைக்கப்பட்ட உயிரிகளின்.அஜாக்கிரதையால் உண்டாகும் பசி.பிணி.தாகம்.இச்சை.எளிமை.பயம்.கொலை.போன்ற துன்பங்களை போக்குவதால் மட்டுமே தங்களின் துன்பங்களை போக்கிக் கொள்ள முடியும்*.

என்ற உண்மையை மக்களுக்கு புதிய வழிபாட்டு முறையைக் காட்டியவர் வள்ளலார்.

தீராத வியாதிகளும்.தீராத பிரச்சனைகளும். ஜீவகாருண்ய வல்லபத்தால் நீங்கிவிடும் என்கிறார்.

ஜீவகாருண்யம் என்பது தன் உழைப்பால் சம்பாதித்தத பொருளைக் கொண்டு உண்மை அன்போடு துன்பப்படும் ஜீவர்களுக்கு உதவ வேண்டும்.

மேலும் தனிமனித ஒழுக்கம் இல்லாமல் நன்மை பயக்க இயலாது என்பதை ஆணித்தரமாக பதிவு செய்து உள்ளார்.

மனிதன்
இந்திரிய ஒழுக்கம்.

கரண ஒழுக்கம் .

ஜீவ ஒழுக்கம்.

ஆன்ம ஒழுக்கம்.

என்ற நான்கு வகையான ஒழுக்கத்தை கடைபிடிப்பவர்களுக்கு எந்த துன்பம்.துயரம்.அச்சம்.
பயம் இல்லாமல் எப்போதும் வாழமுடியும் என்கிறார் வள்ளலார்.

கடவுள் வழிபாடு என்பது தனிமனித ஒழுக்கம் மட்டுமே என்பதை மனிதகுலம் அறிந்து.புரிந்து.
தெரிந்து கொள்ள வேண்டும்.

பல கடவுள்கள் என்பது மக்களின் மூடநம்பிக்கை.

கடவுள் ஒருவரே ! அவரே அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் !

என்பதை அறிவுள்ள மனிதர்கள் தெரிந்து கொண்டு.ஜீவர்களுக்கு நன்மை செய்வதே கடவுள் வழிபாடு என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பாடல் !

மண்ணுல கதிலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒருசிறி தெனினும்

கண்ணுறப் பார்த்தும் செவியுறக் கேட்டும் கணமும் நான் சகித்திடமாட்டேன்

எண்ணுறும் எனக்கே நின்னருள் வலத்தால் இசைத்தபோது இசைத்த போ தெல்லாம்

நண்ணும் அவ் வருத்தம் தவிர்க்கும் நல் வரந்தான் நல்குதல் எனக்கிச்சை எந்தாய்.!

மேலே கண்ட பாடல் ஊன்றி படிக்கவும்.

மேலும் வள்ளலார் பாடல் !

அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்புசெயல் வேண்டும்

எப்பாரும் எப்பதமும் எங்கணும் நான் சென்றே
எந்தை நினது அருட்புகழை இயம்பியிடல் வேண்டும்

செப்பாத மேனிலைமேல் சுத்த சிவமார்க்கம்
திகழ்ந்தோங்க அருட்சோதி செலுத்தியிடல் வேண்டும்

தப்பேது நான் செயினும் நீபொறுத்தல் வேண்டும்
தலைவ நினைப் பிரியாத நிலைமையும்வேண் டுவனே.!

மேலே கண்ட பாடலில் கண்டபடி நம் பொது வேண்டுதலாக இருக்க வேண்டும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு