புதன், 12 பிப்ரவரி, 2020

அருட்பெருஞ்ஜோதி தரிசனம்!

🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
அருட்பெருஞ்ஜோதி !
அருட்பெருஞ்ஜோதி !
தனிப்பெருங்கருணை !
அருட்பெருஞ்ஜோதி !

        *🌻உத்தர ஞான சித்தபுரமும் ஊனுடம்பை ஒளி உடம்பாக்கிய சித்திவளாகமும்🌻*
🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏🔥🙏
       
        ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையுடைய உயிர் உறவுகளாகிய சகோதர சகோதரிகளுக்கு பணிவான சன்மார்க்க ஆன்மநேய வந்தனத்தை தயவுடன் தெரிவித்து மகிழ்கின்றேன் 👏
 
    " *சொல் இன்றிப் பொருள் விளங்காது"*
     " *பொருள் இன்றி சொல் தோன்றாது "*

ஆம்,
ஒரு சொல் இல்லாமல் எந்தப் பொருளும் விளங்காது .
அதேபோன்று ஒரு பொருளைக்கொண்ட
தான் அதற்கு ஒரு சொல்லே தோன்றும் "

அதே போன்று ,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமானாரால் சூட்டப்பெற்ற, சொல்லப்பெற்ற, அருளப்பெற்ற, சொற்களும் வார்த்தைகளும் பெயர்களும் ஆகிய எல்லாம் திருவருளால் சொல்லப்பட்ட காரிய காரண சித்தியை அளிக்கக்கூடிய  மந்திரச் சொற்களும் வார்த்தைகளும் பெயர்களுமேயாகும் 🌻

அந்த வகையில் ,
ஆன்மத் திருக்கோயிலாக,
பூரண இயற்கை உண்மைக் கடவுளாம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர்,

பூரண இயற்கை விளக்கத்துடன்,
பூரண இயற்கை இன்பத்தை எல்லாஉயிர்களுக்கும் அருள்பாலிக்கும் வண்ணம் அருட்பெருஞ்ஜோதி சொரூபத்தில் வீற்றிருக்கும் சத்தியஞானசபை தெய்வப்பதியை  ,

வடலூர் என்றும் பார்வதிபுரம் என்றும் இவ்வுலகவர்களால் பெயரிட்டு அழைக்கப்பட்ட
போதிலும் ,

அதற்கு *திருவருளால் ஆக்கப்பெற்ற காரிய காரண சித்திப் பெயர் உத்தரஞான சித்திப்புரம் என்பதும், உத்தரஞான சிதம்பரம் என்பதுமாகும்* 🌻

உத்தரம் என்பது எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கக்கூடியது என்பது பொருள் ,
அப்படி *எல்லாவற்றையும் செய்யவல்ல சர்வசித்தி வல்லபமாம் "ஞானசித்தியை"* அளிக்கக்கூடிய *சித்திப்புரம்* என்றும் *ஞான சிதம்பரம்* என்றும் வடலூருக்கு திருவருளால் பெயரிடப்பட்டது . 🌻🔥🙏

அதே போன்று,
நமது திருவருட்பிரகாச வள்ளல் பெருமான் திருவருள் காரண காரிய நிமித்தமாக, தருமச்சாலையில் அன்பர்களின் வருகை அதிகமாகவே,
அமைதி வேண்டி வடலூரிலிருந்து தென்மேற்கு திசையில் 5 கிலோமீட்டரில் உள்ள மேட்டுக்குப்பம் என்ற கிராமத்திற்கு 1870 ஆம் ஆண்டு சென்று தங்கி வாழ்ந்து வந்தார்கள்.

அங்கு  தான் அடைந்த அற்புத சித்திகளை எல்லாம் பெருமான் யாருக்கும் வெளிக்காட்டாத வண்ணம் அமைதியாக உரைந்தார்கள்(தங்கினார்கள்).

 *அப்படி பெருமான் தான் தங்கியிருந்த கட்டிடமாகிய திருமாளிகைக்கு சித்திவளாகம் என்று பெருமானே பெயரிட்டார்கள் .*

 *சித்திவளாகம் என்றால் வீடுபேறாகிய மோட்சத்தை அளிக்கக்கூடிய இடம் என்று பொருள்* 🌺🔥

அந்த சித்திவளாகத் திருமாளிகையில் நமது திருவருட்பிரகாச வள்ளற் பெருமான் மரணமிலாப் பெருவாழ்வைத் தரும் தனது மார்க்கமாகிய சுத்தசன்மார்க்கத்திற்கு என்று ஓர் கொடியைக் கட்டி அத்திருமாளிகையிலேயே நீண்ட நெடிய பேருரையாற்றினார்கள் .
அந்தப் பேருரைக்கு சுத்தசன்மார்க்க சங்கத்தார்கள் *பேருபதேசம்* என்று பெயரிட்டார்கள் 🌺

அந்த புண்ணியத் தலத்தில்தான் நமது அருட்பெருந்தந்தை அருட்பிரகாச வள்ளல் பெருமான்1870 முதல் அருட்பெருஞ்ஜோதியாய் கலந்து நிறைந்த 1874 நான்காம் ஆண்டுவரை தங்கி வாழ்ந்தார்கள்.

அதற்கு முன்பு ,
1873 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் திருமாளிகையின் உள்ளிருந்த விளக்கை திருமாளிகையின் புறத்தில் எடுத்து வைத்து,

அங்கிருந்த சுத்தசன்மார்க்க சங்கத்து அடியார்களுக்கும் கிராமத்து வாசிகளுக்கும் ,
 *ஆண்டவர் தற்போது தீபமுன்னிலையில் விளங்குவதால் , உங்களுடைய காலங்களை இதுவரை வீணிற் கழித்ததுபோல் இனியும் கழித்திடாமல் இத்தீபத்தைக் கண்டு வழிபட்டு வாருங்கள்* .

நான் தற்போது சிலதினங்கள் *இவ்வறைக்குள் சென்று கதவை சாத்திடப்  போகின்றேன்,   யாரும் கதவை திறந்திட வேண்டாம் .*

 *அவ்வாறு யாரேனும் அவநம்பிக்கைக்கொண்டு திறக்க நேரிட்டால் நமது ஆண்டவர் என்னை உங்கள் யாருக்கும் தோன்றும்படி காட்டிக்கொடார்* .

 *வெறும் வீடாகத்தான் இருக்கும்படி செய்வீப்பார்கள்* என்று கூறிய  நமது பெருமான்,

 *திருவருட்பா ஆறாம் திருமுறை தலைப்பு 56 இறை இன்பக் குழைவு  (அமையங்கூறல் )*

அமையங்கூறல் என்றால் தமக்கு வாய்த்த சமயம் ,தருணம் இதுதான் என்று  அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் வள்ளல் பெருமானின் திருவுளத்தில் தாமே வந்தமர்ந்தருளி, சித்திகள் எல்லாவற்றையும் வழங்கி சாகா வரம்கொடுத்து  இரண்டறக் கலந்து நிறைந்த தருணத்தில் தாம் அடைந்த பேரின்பத்தை (இறை இன்பத்தை) பத்துபாடல்களின் வாயிலாக பெருமான் தெரிவிக்கின்றார்கள் 🌻🙏

அதில் முதல் பாடலாகிய கருவில் கலந்த துணையே என்று ஆரம்பிக்கும் பாடலின் இறுதிவரிக்கும் முதல்வரியில் ,

 *தெருவில் கலந்து விளையாடும் சிறியேன்தனக்கே மெய்ஞ்ஞான சித்தி அளித்த பெருங்கருணைத் தேவே,*

" *உலகத் திரளெல்லாம் மருவிக் கலந்து வாழ்வதற்கு வாய்த்த தருணம் இதுஎன்றே வாயே பறையாய் அறைகின்றேன் எந்தாய் கருணை வலத்தாலே;*

என்று ,
அருட்பெருஞ்ஜோதி என் ஆண்டவரே ,
வீதீயில் விளையாடித் திரியும் சிறியவனாகிய எனக்கு " *மெய்யஞ்ஞான சித்தியாகிய" எல்லாம் செய்யவல்ல சர்வசித்தியை எனக்கு அளித்தருளிய பெருங்கருணையுடைய ஆண்டவரே !*

இவ்வுலகில் தேகாதி உலகமெல்லாம் செய்ய வல்ல மெய்ஞ்ஞான சர்வசித்தியை எனக்கு கொடுத்தருளினீர்கள் ,

 *இத்தருணம்தான் இவ்வுலக உயிர்களின் அகம்புகுந்து அவர்களது உயிரைத் தழுவி வாழ்வதற்கு எனக்கு வாய்த்த தருணம் ,  என்று எனது வாயே பறையாகக்கொண்டு (முரசாகக்கொண்டு) அறைகின்றேன் (சொல்லுகிகின்றேன்) எனது தந்தை என்மீதுகொண்ட மேலான கருணை வலத்தினாலே*  என்று ,

இந்தப் பாடலில் ,
நமது பெருமான் ,
தனக்கு அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் ,
மலநிவர்த்தி செய்து,
இதுவரை தடையாக இருந்த மற்றத் தடைகளையெல்லாம் நீக்கியளித்து மெய்ஞானசித்தி வல்லபத்தை தந்தருளி, பெருமானாரது உளத்தில் அமர்ந்து உயிரில் கலந்தருளிய பேரின்பத்தை இறை இன்பக்குழைவாக பெருமான் கூறும் இப்பாடல்களின் வாயிலாக ,

 *தான் பின்னாளில் அருட்பெருஞ்ஜோதி பேரொளியில் கலந்து இவ்வுலக உயிர்கள்  அனைத்திலும் புகுந்துகொள்ள இருப்பதை வாயை பறையாகக் கொண்டு அறைந்தார்கள்* 🔥🌺

அவ்வாறு கூறிய வண்ணமே அதற்குரிய தருணம் வந்தவுடன் இவ்வுலகவர்களின் ஊனக்கண்களுக்குத் தெரியாவண்ணம்   *1874 தை மாதம் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருடன் அருட்பேரொளியில் இரண்டறக் கலந்து நமது ஊனக்கண்ணிற்கு தோன்றாவண்ணம் மறைந்தார்கள்.*
அந்நாள் வரையில் நமது பெருமான் சித்திவளாகத்தில்தான் வாழ்ந்து வந்தார்கள் 🌻

உலக அறிவிப்புப் பத்திரிக்கை என்று, 8:9:1873 அன்று சித்திவளாக விளம்பரம் என்ற தலைப்புடைய திருமுகத்தில்கூட ,

ஞானசித்திபுரம் என்றும், உத்தரஞானசிதம்பரம் என்றும் பிரமாணிக்கப்படுகின்ற வடலூர் சத்திய ஞானசபைக்கு முக்கிய சம்பந்த முடையதாகி அடுத்த கருங்குழி எல்லை மேட்டுக்குப்பத்தில் வழிபடப்படுகின்ற சித்திவளாகத்தில் என்று குறிப்பிட்டுள்ளார்கள் 🌻

ஆகலில் ,
 *வடலூர் சத்தியஞானசபைக்கும்,மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கும் உள்ள தொடர்பு என்பது,*

 *அருட்பெருஞ்ஜோதி ஆண்டவருக்கும் , அற்புத சித்திகளை வழங்கும் அருட்பெருஞ்ஜோதியின் அருட்சக்திக்கும் உள்ள தொடர்பேயாகும்* என்பதை அனைவரும் கருத்தில் கொள்வது அவசியமாகும்🌻🔥🙏

ஆகலில் ,
08: 02:2020 அன்று வடலூர் தைப்பூசத்திற்கு வருகின்ற அன்பர்கள் அனைவரும் 10 :2:2020 அன்று மேட்டுக்குப்பம் சித்திவளாகத் திருமாளிகைக்கு சென்று ,அன்றைய தினம் பெருமான் அருட்பெருஞ்ஜோதியில் கலந்து நிறைந்த திருவறையை அன்பர்கள் அனைவரும் தரிசிக்கும் வண்ணம் அறை ஜன்னல் கதவுகளை திறந்து வைத்து தரிசிக்க செய்வார்கள் 🌻🌺🔥

அதன்பொருட்டு நாமும் அங்கு சென்று *வள்ளல் பெருமான் அருட்பெருஞ்ஜோதியாய் இயற்கையில் கலந்து நம் அணைவரின் உளத்திலும் வந்தமர்ந்த இத்திருத்தலத்தில்* நாமும் அமைதியாய் அமர்ந்து ,
நமது சிறுமைகளை எல்லாம் திருவருள் சன்னிதானத்தில் உன்னி நின்று ,
வினையைப் போக்க துணையைநாடி அருட்பெருஞ்ஜோதியின் அருளை நாடுவொம் !அமைதியான வாழ்வைப் பெறுவோம் !
....நன்றி 🔥🙏
...வள்ளல் மலரடிப் போற்றி! போற்றி!🔥🙏
...பெருமான் துணையில் 🔥🙏
...தயவுடன் வள்ளல் அடிமை 🔥🙏
....வடலூர் இரமேஷ் ;

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு