செவ்வாய், 11 பிப்ரவரி, 2020

மறைந்து போன செய்தி !

*மறைந்து போன செய்தி* !

வடலூரில் வள்ளலார் ஞானசபை தோற்றுவித்தது 1872 ஆம் ஆண்டாகும்

*ஏழு திரை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காட்டியது எந்த ஆண்டு என்று தெரியவில்லை*.

*வள்ளலார் ஏழு திரையை தொங்கவிட்டு.அவற்றை நீக்கி  ஜோதி தரிசனம் காட்டியதாக அருட்பாவில் ஆதாரம் இல்லை*.

ஆன்மாவை மறைத்துக் கொண்டுள்ள அறியாமை அஞ்ஞானம் என்னும் மாயா திரைகள் ஏழு என்பதும் அதன் வண்ணங்களும்.அருட்பெருஞ்ஜோதி அகவலிலும்.
உரைநடைப்பகுதியிலும் தெரியப்படுத்தி உள்ளார் வள்ளலார்.

வள்ளலார் சித்தி பெற்ற பிறகே *ஆடூர் சபாபதி* குருக்களால் ஏழு திரை நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது.

*சிதம்பர ரகசியம்* !

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசனம் காட்டும் நாளில்.சிதம்பரத்தில் உள்ள *நடராஜபதிக்கும் சிதம்பர ரகசியத்திற்கும்* வழிபாடு செய்வதில்லை என்பது அக்காலகட்டத்தில் நடந்ததாக செய்தி தெரியவருகிறது.

ஏன் என்றால் ? தைப்பூச ஜோதி தரிசனத்தன்று சிதம்பர நடராஜர் வடலூர் சத்திய ஞானசபைக்கு சென்று விடுவாராம் ஆதலால் வழிபாடு அங்கு நடை பெறுவதில்லையாம்.

சிதம்பரத்தில் உள்ள பெருமாள் சாமிக்கு மட்டும் வழிபாடு நடைபெறுமாம்.

சிதம்பரத்தில் உள்ள நடராஜபதியைத் தான் வருவார் அழைத்துவாடி வடலூர் வடதிசைக்கே வந்தால் பெறலாம் நல்ல வரமே என்று வள்ளலார் சொல்லி அழைத்தாக சிதம்பரத்தில் உள்ள தீட்சதர்கள் நினைந்து அக்காலத்தில் சிதம்பர வழிபாட்டை நிறுத்தி உள்ளதற்கான செய்தி செவிவழிச் செய்தியாகும்.

தைப்பூச ஜோதிதரிசனம் முடிந்த மறுநாள் தொடங்கி எப்போதும் போல் சிதம்பர வழிபாடு நடக்குமாம்.

இது உண்மையா.?
 பொய்யா? நடந்ததா? நடக்கவில்லையா ?  என்பது ஆதாரப்பூர்வமாக  தெரியவில்லை.

எது எப்படியோ நமக்கு அவற்றைப்பற்றி தேவை இல்லை.கவலை இல்லை.

வள்ளலார் திருஅருட்பாவில் சொல்லிய வண்ணம் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்கள்.
சாதி.சமய.மதச் சடங்குகள் இல்லாமல்   நடைப்பெற்றால் அதுவே போதுமானதாகும். அதுவே சுத்த சன்மார்க்க அன்பர்களின் வேண்டுகோளாகும்.

இந்து சமய அறநிலையத்துறையானது. அறிவு சார்ந்த சுத்த சன்மார்க்க அனுபவம் பெற்ற பெரியவர்களைக் கொண்டு *திருஅருட்பாவில் உள்ள ஆதாரத்தைக் கொண்டு* .வழிபாடு விஷயத்தில் மிகவும் கவனமாக செயல் பட்டால் சமுதாயத்திற்கு செய்யும் புண்ணியமாகும்.

*சமய மதவாதிகளால் வடலூர் வள்ளலார் தெய்வ நிலையங்களுக்கு மறைமுக ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது*.

எது நடந்தாலும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரும் வள்ளலாரும் பார்த்துக் கொள்வார்கள்.

வள்ளலார் பாடல் !

சித்திபுரத்தே தினந்தோறும் சீர்கொள அருள்

சத்திவிழா நீடித்து தழைத்தோங்க -

எத்திசையில்
உள்ளவரும் வந்தே உவகை உறுக

மதத்
துள்ளல் ஒழிக தொலைந்து!

என்றும்.

எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க !

கொல்லா நெறியே உலகம் எல்லாம் ஓங்குக !

அன்புடன் ஆன்மநேயன் ஈரோடு கதிர்வேல்.
9865939896

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேருக கருத்துரைகளை இடு [Atom]

<< முகப்பு